நடிகளர் சித்தார்த் மற்றும் தீபாசன்னிதி ஆகிய இருவருக்குமிடையில் திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அவர்கள் இருவரும் எனக்குள் ஒருவன் என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். பிரசாத் ராமர்இயக்குகிறார். சி.வி.குமார் தயாரிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. சித்தார்த்தும் தீபா சன்னிதியும் இந்த திரைப்படத்தில் நடித்துக் கொண்டு இருந்தபோது நண்பர்களானார்கள். பின்னர் அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசினர்.

தீபா சன்னிதி கர்நாடக மாநிலம் சிக்மகளூரை சேர்ந்தவர். 24 வயது ஆகிறது. கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இப்போது ‘எனக்குள் ஒருவன்’ மூலம் தமிழுக்கு வந்துள்ளார். ‘யட்சன்’ என்ற திரைப்படத்திலும் ஆர்யா ஜோடியாக நடிக்கிறார்.

சித்தார்த், சமந்தா காதல் முறிவதற்கும் இவர்தான் காரணம் என்கின்றனர். சித்தார்த்தும் சமந்தாவும் நீண்ட நாட்களாக காதலித்தனர்.

படவிழாக்களுக்கும் ஜோடியாக வந்தார்கள். இரு வாரங்களுக்கு முன்பு சமந்தா திடீரென காதலை முறித்துக் கொண்டார். அவருக்கு சித்தார்த்-தீபா சன்னிதி நெருக்கம் தெரிய வந்ததால் விலகி விட்டதாக கூறப்படுகிறது.

ds5

Share.
Leave A Reply

Exit mobile version