ஆர­வாரம் எது­வு­மில்­லாத வகையில் அமை­தி யான முறையில் ஆட்சி மாற்றம் நடந்­தே­றி­யி­ருக்­கின்­றது. ஜனா­தி­ பதி தேர்தல் அறி­விக்­கப்­பட்­ட­போது, இந் தத் தேர்­தலின் போது என்ன நடக்கும், தேர்­தலின் பின்னர் என்ன நடக்கும் என்று மிகுந்த அச்ச உணர்வே மக்கள் மத்­தியில் மேலோங்­கி­யி­ருந்­தது.

அந்த உணர்வு வெளியில் தெரி­யத்­தக்க வகையில் வெளிப்­பட்­டி­ருக்­க­வில்லை. போதிலும், மக்கள் மனங்­களில் பெரும் சுமை­யாக, ஒரு முள்­ளாக அந்த உணர்வு உறுத்திக் கொண்­டி­ருந்­தது.

தேர்­த­லுக்­கான பரப்­புரை காலத்தில் இடம்­பெற்ற, தேர்தல் பிர­சாரம் செய்­யப்­பட்ட முறைகள், அதற்­காக அரச சொத்­துக்­களும், வளங்­களும், அரச ஊழி­யர்­க­ளும் பயன்­ப­டுத்­தப்­பட்­டமை என்­பன மட்­டு­மல்­லாமல், வட­ப­கு­தியில் மக்கள் மத்­தியில் வெளிப்ப­டை­யா­கவே வெளி ப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த அச்­சு­றுத்­தல்கள் என்­ப­னவும் நாட்டின் தென்­ப­கு­தி யில் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வந்த வன்­மு­றை­களும் இந்த அச்ச உணர்வை மக் கள் மனங்­களில் அதி­க­ரிக்கச் செய்­தி­ருந்­ தது.

ஆனால், எதிர்­பார்த்த வகையில் அசம்­பா­வி­தங்கள் வன்­முறை­க­ளின்றி தேர் தல் நடை­பெற்று அதன் ஊடாக ஆட்­சி­ மாற்றம் நிகழ்ந்­தி­ருப்­பதன் ஊடாக இலங்கை ஆசி­யாவின் அதி­ச­யமாக மாறி­யி­ருக்­கின்­றது என்றே கூற வேண்டும்.

மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை பலத்­து­டனும், நிறை­வேற்று அதி­கார வல்­ல­மை­யு­டனும் யுத்­தத்தை வெற்­றி­கொண்ட முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ, யுத்­தத்தின் பின்னர் இந்த நாட்டை ஆசி­யாவின் அதி­ச­ய­மாக்கப் போவதாகசூளுரைத்­தி­ருந்தார்.

ஆனால் இரண்டு பருவ காலம் அவர் ஜனா­தி­ப­தி­யாக, ஆட்சி அதி­கா­ரத்தில் இருந்­தி­ருந்த போதிலும், நாட்டை ஆசி­யாவின் அதி­ச­ய­மாக்க அவரால் முடி­ய­வில்லை.

ஆனால், திரை­ம­றைவில் அமை­தி­யாக இருந்த முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க, மஹிந்த ராஜ­ப­க­் ஷவின் சாம்­ராஜ்­ஜி­யத்தில் இருந்த மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை அங்­கி­ருந்து இர­க­சி­ய­மாகப் பிரித்­தெ­டுத்து, மஹிந்­த­வுக்கு எதி­ராகப் பொது வேட்­பா­ள­ராகத்  தேர்­தலில்  கள­மி­றக்கி, பெரும்­பான்­மை­யான மக்­களின் ஆத­ர­வோடு, அவரை ஜனா­தி­ப­தி­யாக அரியாச­னத்தில் ஏற்­றி­யி­ருக்­கின்றார்.

தேர்­தலில் வெற்­றி­பெற்ற பின்னர், புதிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மிகவும் அமை­தி­யான முறையில் பத­வி­யேற்று, அடுத்­த­டுத்து ஆக வேண்­டிய காரி­யங்­களை மேற்­கொண்­டி­ருக்­கின் றார்.

தேர்தல் பிர­சா­ரத்­தின்­போது மக்­க­ளிடம் முன்­வைத்­தி­ருந்த தனது 100 நாள் வேலைத்­திட்­டத்தைச் செயற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை அவர் முன்­னெ­டுக்கத் தொடங்­கி­யி­ருக்­கின்றார்.

அதே­நேரம், தேர்தல் பிர­சார மேடை­களில் வடக்கில்  இருந்து இரா­ணு­வத்தை  விலக்கப் போவ­தில்லை என பேசி­யி­ருந்த புதிய ஜனா­தி­பதி, தமிழ் மக்கள் ஆறுதல் அடை­யத்­தக்க வகையில், சில நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருக்­கின்றார்.

இது தமிழ் மக்கள் மத்­தியில் வர­வேற்பைப் பெற்­றி­ருக்­கின்­றது.

தேர்தல் பிர­சார காலத்தில் ஜனா­தி­ப­தி­யாக இருந்த மஹிந்த ராஜ­பக் ­ஷ­வுக்கு ஆத­ர­வான முறையில் தேர்தல் பிரசார நடவடிக்­கை­களில், அரச தரப்­பினர் இரா­ணு­வத்­தி­னரைப் பயன்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.

ஆனாலும், வாக்­க­ளிப்பு தினத்­தன்று இரா­ ணு­வத்­தினர் முகாம்­க­ளுக்குள் முடக்­கப்­பட்டு, பொலி­ஸாரும், பொலிஸ் பிரிவைச் சேர்ந்த அதி­ரடிப் படை­யி­ன­ருமே கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

தேர்தல் முடிந்த பின்­னரும், இரா­ணுவம் வெளியில் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை. தொடர்ந்தும் அவர்கள் முகாம்களுக்குள்ளேயே இருக்­கின்­றனர்.

இந்த நட­வ­டிக்­கை­யா­னது வட­ப­குதி மக்கள் மத்­தியில் பெரும்  ஆறு­தலை  அளி த்­தி­ருக்­கின்­றது. அதே­நேரம் மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட வட­மா­காண சபையின்  செயற்­பா­டு­க­ளுக்கு இடைஞ்­ச­லாக இருந்­த­தாகக் கரு­தப்­பட்ட, இரா­ணுவ பின்ன­ணியைக் கொண்ட ஆளுநர் சந்­தி­ரசி­றிக்குப் பதி­லாக சிவில் செயற்­பாட்டுப் பின்­ன­ணியைக் கொண்ட எச்.எம்.ஜி.எஸ்.பளி­கக்­கார புதிய ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கின்றார் என்ற செய்­தி யும் வெளி­யா­கி­யுள்­ளது.

அது மட்­டு­மல்­லாமல், ஆளு­நரின் கைப்­பா­வை­யாகச் செய­லாற்­றி­வந்த வட­மா­காண சபையின் பிர­தம செய­லா­ள­ரையும், அர­சியல் செல்­வாக்­குக்கு உட்­பட்டு பக்­க­ச்சார்­பாக நடந்து கொண்­ட­தாகக் கரு­தப்­ப­டு­கின்ற அர­சாங்க உய­ர­தி­கா­ரிகள் சிலரையும் இட ம் மாற்றி புதி­ய­வர்­களை நிய­மிப்­ப­தற்கு புதிய ஜனா­தி­பதி நட­வ­டிக்கை எடுத்­தி­ருப் ­ப­தாகத் தெரி­ விக்கப்பட்டிருக்­கின்­றது.

இதுவும் வட­ ப­குதி மக்­களை ஆறுதல் அடையச் செய்­தி­ருக்­கின்­றது.

அதே­நேரம், ஜனா­தி­ப­தி­யாகப் பொறுப்­பேற்ற மூன்று தினங்­களில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, புதிய பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் அரசின் முக்­கி­யஸ்­தர்­களைச் சந்­தித்துப் பேச்­சுக் கள் நடத்­திய தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பிடம், தமிழ் மக்கள் எதிர்­நோக்­கி­யுள்ள முக்­கிய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கு உரிய நட­வ­­டிக்­கைகள் எடுக்­கப்­படும் என்று உறுதிய­ளிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

இந்த உறு­தி­மொழி, தமிழ் மக்கள் புதிய ஜனா­தி­ப­தியின் தலை­மை­யி­லான நிர்­வா­கத்தின் மீது நம்­பிக்கை வைப்­ப­த ற்கு வழி வகுத்­தி­ருக்­கின்­றது.

சிக்­கல்­களும் இருக்­கத்தான் செய்­கின்­றன

ஆடம்­ப­ர­மில்­லாமல், வெறும் ஆறா­யிரம் ரூபா செலவில் ஜனா­தி­பதி பத­வி­யேற் கும் வைப­வத்தை எளி­மை­யாகச் செய்து முடித்து, அடி­மட்­டத்தில் உள்ள மக்கள்  எதிர்­நோக்­கி­யுள்ள பிரச்­சி­னை­க­ளுக்கு உ­டன­டி­யாகத் தீர்வு காணப்­படும் என உறுதியளித்து,

ஊழல்கள் ஒழிக்­கப்­படும், அதி­காரத் துஷ்­பி­ர­யோகம், முறை­யற்ற நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­ப­வர்கள் இரக்­க­மின்றி தண்­டிக்­கப்­ப­டு­வார்கள் என்று எச்­ச­ரிக்கை செய்­துள்ள புதிய ஜனா­தி­பதி தான் கூறி­ய­வற்றை நடை­மு­றைப்­ப­டுத்­து வார் என்று நாட்டு மக்கள் நம்­பிக்­கை­யோடு எதிர்­பார்க்கத் தொடங்­கி­யி­ருக்­கின் ­றார்கள்.

யாரையும் அர­சியல் ரீதி­யாகப் பழி­வாங் கப் போவ­தில்லை என உறு­தி­ய­ளித்­துள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன, தனது செயற்­பா­டு­க­ளுக்கு நாட்டு மக்­க ளும், சகல அர­சியல் கட்­சி­களும் ஒத்­து­ழைப்பு வழங்க முன்­வ­ர­வேண்டும் என்று அழைப்பு விடுத்­தி­ருக்­கின்றார்.

இத­னை­ய­டுத்து, மஹிந்த ராஜ­பக்ஷவின் நிர்­வா­கத்தில்   அவ­ருடன் மிக நெருக்­க­மாகச் செயற்­பட்ட அர­சி­யல்­வா­தி­களும், புதிய ஜனா­தி ­ப­திக்கு ஆத­ரவு வழங்கி, அவ­ருடன் இணைந்து செயற்­பட முன்­வந்­தி­ருக்­கின்­றார்கள்.

புதிய அமைச்­ச­ர­வையை அமைப்­ப­தி­லி­ருந்து முக்­கி­ய­மான பத­வி­களில் முன்னர்  இருந்­த­வர்­களை மாற்றி புதி­ய­வர்­களை நிய­மிப்­பது வரை­யி­லான நட­வ­டி க்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற ஒரு தரு­ணத்தில், இவ்­வாறு முந்­திய அர­சாங்­கத்தின் முக்­கி­யஸ்­தர்கள் புதிய ஜனா­தி­ப­தி­யுடன் இணை­வ­தென்­பது, அவ­ருக்குப் பல வழி­களில் சிக்­கல்­களை ஏற்­ப­டுத்த வழி வகுத்திருக்­கின்­றது.

தேர்தல் காலத்தில் மஹிந்த ராஜ­பக்ஷவுடன் இருந்­த­வர்கள், அவ­ரு­டைய ஆட்­சியின் கீழ் அதி­காரப் பலத்­தையும், அர­சியல் செல்­வாக்­கையும் அனு­ப­வித்த  பலர் எதி­ரணி வேட்­பா­ள­ராக  இருந்த மைத்­தி­ரி­பால சிறி­சேன பக்கம் சேர்ந்­தார்கள்.

கட்சி விட்டு கட்சி மாறி­னார்கள். இப்­போது, முன்னாள் ஜனா­தி­பதி தேர்­தலில் தோற்­க­டிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, அவ­ரு­டைய நெருங்­கிய சகாக்கள் புதிய ஜனா­தி­ப­தி­யு டன் இணை­வதைப் பொது­மக்­களால் ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தி­ருப்­பதை அவதானிக்க முடி­கின்­றது.

தேர்­த­லுக்கு முன்னர் அதி­கா­ரத்தில் இருந்து போது, பாகு­பா­டாக நடந்து கொண்­டது மட்­டு­மல்­லாமல் பல்­வேறு ஊழல் நடவடிக்­கை­களில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்கள் புதிய நிர்­வா­கத்­திலும் அதி­கார பல­முள்­ள­வர்­க­ளாக மாறும்­போது, அவர்கள் எவ்­வாறு நடந்து கொள்­வார்கள்

– புதிய ஜனா­தி­பதி கூறு­வதைப் போன்று ஊழ­லற்ற, முறை­கே­டுகள் அற்ற வகையில் செயற்­ப­டு­வார்­களா, அதற்கு என்ன உத்­த­ர­வாதம் என்ற கேள்வி எழுந்­தி­ருக்­கின்­றது.

தற்­போது முன்­னைய அர­சாங்­கத்தின் தீவிர விசு­வா­சி­க­ளாக இருந்­த­வர்கள் புதிய நிர்­வா­கத்தில் பத­வி­க­ளையும், அதி­கா­ரங்­க­ளையும் பெற்­றுக்­கொள்­வ­தற்­கா­கவே புதிய ஜனா­தி­ப­தி­யுடன் இணைய முயற்­சிக்­கின்­றார்கள் என்ற சந்­தேகம், புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்­வ­தற்­காகத் தேர்­த­லின்­போதும், அதற்கு முன்­னரும் தீவி­ர­மாக உழைத்­த­வர்கள் மத்­தியில் விஸ்­வ­ரூபம் எடுத்­தி­ருக்­கின்­றது.

இதனால் அவர்கள் கொதிப்­ப­டையத் தொடங்­கி­யி­ருக்­கின்­றார்கள். இதனால், புதிய ஜனா­தி­ப­தியும், புதிய பிர­த­மரும் நெருக்கடிக்கு உள்­ளாக நேர்ந்­துள்­ள­தாகத் தெரி­கின்­றது.

புதிய கூட்டு அர­சாங்­கத்­தை – ஒரு தேசிய அர­சாங்­கத்தை அமைக்­கும்­போது, பல­ரையும் உள்­வாங்க வேண்­டிய தேவை இருப்­பதை ஏற்­றுக்­கொள்­ளத்தான் வேண் டும்.

அதனைத் தவிர்க்க முடி­யாது. ஆனால், முன்னர் அதி­காரத் துஷ்­பி­ர­யோ­க த்தில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்கள். ஊழல்­க­ளுக் குத்துணை­யாகச் செயற்­பட்­ட­வர்கள், அப்­ப­டியே புதிய நிர்­வா­கத்தில் இடம்­பெ­று­வதை எவரும் ஏற்­றுக்­கொள்ளப் போவதில்லை.

முன்­னைய அர­சாங்­கத் தில் அவர்கள் செயற்­பட்ட முறை­க­ளு க்கு பொறுப்பு கூறா­மலும், அதற்­கு­ரிய பொறுப்பை ஏற்­கா­மலும், – எந்­த­வி­த­மான விசா­ர­ணை­க­ளு­மின்றி மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் பங்­கேற்­பதை புதிய ஜனா­தி­ப­தியின் தீவிர விசுவா­சிகள் விரும்­ப­வில்லை.

இந்த நிலை­மையை மிகவும் நிதா­ன­மா­கவும், சரி­யான முறை­யிலும் கையாள வேண்­டிய பொறுப்பு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோ­ருக்கு ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

அதனை அவர்கள் சரி­யான முறையில் கையாளத் தவ­றினால் புதிய நிர்­வா­கத் தின் மீது மக்கள் நம்­பிக்கை வைப்­பதுகடினமான காரி­ய­மா­கி­விடும்.

பல நல்ல அம்­சங்­களைக் கொண்­டுள்ள 100 நாள் வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுப்­ப­திலும் பல்­வேறு சிக்­கல்­க­ளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

இது ஒரு பக்கம் இருக்க, யுத்­த­வெற்­றி­யையும், இன­வா­தத்­தையும் முதன்­மைப்­ப­டுத்தி ஊழல்கள் மலிந்த நிலையில் சுமார் ஒரு தசாப்த காலம் நடந்து வந்த நிர்­வா­கத்தில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தும்­போது, அப்­போது செய்­யப்­பட்ட பிழை­களைத் திருத்­து­வ­தற்கு முற்­ப­டும்­போது பல சவால்­க­ளுக்கு முகம் கொடுக்­கத்தான் வேண்டும்.

அதனைத் தவிர்க்க முடி­யாது. இந்தக் கைங்­க­ரியம் இல­கு­வா­ன­தல்ல. அந்த கடி­ன­மான காரி­யத்தை முன்­னெ­டு ப்­ப­தற்கு கூட்டுப் பொறுப்­புடன் அனை­வரும் செயற்­பட வேண்­டி­யது அவ­சியம். பொறு­மை­யா­கவும் திட்­ட­மிட்ட வகை­யி லும் செயற்பட வேண்­டி­யதும் முக்­கியம்.

இதனை புதிய ஜனா­தி­ப­தியும், புதிய பிர­த­மரும் நிச்­சயம் அறிந்­தி­ருப்­பார்கள். அதற்­கேற்ற வகையில் அவர்கள் செயற்­பட வேண்­டி­யது முக்­கி­ய­மாகும்.

கட்சி அர­சி­யலில் ஏற்­பட்­டுள்ள நிலைமைகள்

இது ஒரு­பக்கம் இருக்க, கட்சி அர­சி­யலில் ஏற்­பட்­டுள்ள பிரச்­சி­னை­களும் புதிய ஜனா­தி­ப­திக்கு மேலும் சவால்களை ஏற்படுத்தி­யி­ருக்­கின்­றன.

நடை­பெற்று முடிந்த ஜனா­தி­பதி தேர்­த­லா­னது, சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சிக்குள் ஏற்­பட்ட பாரிய வெடிப்பின் போட்­டிக்­க­ள­மா­கவே அமைந்­தி­ருந்­தது.

முக்­கிய வேட்­பா­ள­ராக நேரடிப் போட்­டியில் ஈடு­பட்­டி­ருந்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ சிறி­லங்கா சுதந்­திரக் கட்சியின் தலை­வ­ராக இருந்­தவர்.

இப்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அந்தக் கட்­சியின் செய­லா­ள­ராக அவ­ருடன் செய­லாற்­றி­ய வர். இரு­வ­ருக்கும் இடை­யி­லேயே தேர்­த லில் கடும்­போட்டி நில­வி­யது.

தேர்தல் முடிந்த பின்னர், சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சிக்கு உரிமை கோரு­வதில் போட்டி ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. புதிய ஜனா திபதியின் ஆத­ர­வா­ளர்கள் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் புதிய தலை­வ­ராக மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைத் தெரிவு செய்திருக்­கின்­றார்கள்.

அதே­வேளை, அந்தக் கட் ­சியின் தலைவர் தானே என்று மஹிந்த ராஜ­பக் ஷ உரிமை கோரி, தனது ஆத­ர­வா­ளர்­க­ளுடன் செயற்­பட முற்­பட்­டி­ருக்­கின்றார்.

இந்த நிலை­மை­யா­னது, புதிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு, ஜனா­தி­பதி என்ற பொறுப்பில் இருந்து மேற்­கொள்ள வேண்­டி­ய பல்­வேறு செய ற்­பா­டு­க­ளுக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­து­வ­தா­கவும், அவற்றில் கூடிய கவனம் செலுத்த முடி­யாத வகையில் கஷ்டம் கொடுப்­ப­தா­கவும் அமையும் என்­பதில் சந்­தே­க­மி ல்லை.

பல்­வேறு அம்­சங்­களைக் கொண்­டுள்ள 100 நாள் வேலைத்­திட்­டத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சிறப்­பாக செய்து முடிக்க வேண்­டிய தேவை இருக்­கின்­றது.

ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்டால் உட­ன­டி­யாகச் செய்ய வேண்­டிய வேலை­களை அவர் பட்­டி­ய­லிட்டு 100 நாள் வேலைத்­திட்­ட­மாக அறி­வித்­தி­ருந்தார்.

எனவே தேர்­த­லின்­போது நாட்டு மக்­க­ளுக்குக் கொடுத்த வாக்­கு­று­தியை, அவரே வரை­ய­றுத்துக் கொண்ட 100 நாட்­க­ளுக்குள் கட்­டாயம் செய்து முடிக்க வேண்­டிய நிர்ப்­பந்தம் இருக்­கின்­றது.

ஏனெனில் ஜனா­தி­பதி தேர்தல் மட்­டுமே நடந்து முடிந்­துள்­ளது. இன்னும் 3 அல்­லது நான்கு மாதங்­களில் ஒரு பொதுத் தேர்­த­லுக்கு அவர் முகம் கொடுக்க வேண்­டி­யுள்­ளது.

இந்த நிலை­மையில் ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்றால் செய்து முடிப்பேன் என கூறி­ய­வற்றை உறு­தி­ய­ளித்­த­வற்றைச் செய்து முடிக்­கா­விட்டால், வரப்­போ­கின்ற பொதுத்­தேர்­தலில் தனது கட்­சி யைச் சேர்ந்­த­வர்­களை வெற்­றி­பெறச் செய்ய முடி­யாது.

நாட்டு மக்­க­ளுக்கு அளித்­துள்ள உறு­தி­மொ­ழிக்­க­மை­வாக 100 நாள் வேலைத் திட்­டத்தைச் செய்து முடிக்­கின்ற அதே­நேரத்தில் சிறி­லங்கா சுதந்­ திரக் கட்­சிக்கு உரிமை கோரி போட்­டி­யிட்டுக் கொண்­டி­ருக்­கின்ற மஹிந்த ராஜ­ பக் ஷவின் செயற்­பா­டு­களை முறி­ய­டிக்க வேண்­டி­யதும் முக்­கிய தேவை­யாக இருக் ­கின்­றது.

ஜனா­தி­பதி தேர்­தலில் பல எதிர்க்­கட்சி­க ளும், எதிர் அணி­களும் ஒன்­றி­ணைந்து அவரை பொது வேட்­பா­ள­ராகக் களத்தில் நிறுத்­தி­யி­ருந்­தன.

இதன் கார­ண­மாக அவர் ஒரு கட்­சியைச் சார்ந்­த­வ­ராக அல்­லது ஒரு கட்­சியின் தலைவர் என்ற அர­சியல் தள த்தில் இருந்து தேர்­தலில் போட்­டி­யிட வேண்­டிய தேவை இல்­லாமல் இருந்­தது.

ஆனால் வரப்­போ­கின்ற தேர்­தலில் அவ­ருக்கு சார்­பா­ன­வர்கள் ஓர் அர­சியல் கட்­சியின் ஊடா­கவே பாராளு­மன்­றத்­திற்குத் தெரி­வாக வேண்­டிய கட்­டாயத் தேவை எழுந்­தி­ருக்­கின்­றது.

இதனால் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் உரி­மையை நிலை­நாட்­டு­வ­தற்­கு­ரிய செயற்­பா­டு­களை அடு த்து வரு­கின்ற சில மாதங்­களில் அவர் முன்­னெ­டுக்க வேண்­டிய கட்­டாயத் தேவையும் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. எனவே, கடி­ன­மான பல பணிகள் வரி­சை­யாக அணி­வ­குத்து, புதிய ஜனா­தி­ப­தியின் கவ­னத்­தையும் செயற்­தி­ற­மை­யையும் எதிர்­நோக்­கி­யி­ருக்­கின்­றன.

உள்ளூர் விசா­ர­ணைகள்

அர­சியல் ரீதி­யாக எவ­ரையும் பழி­வாங் கப் போவ­தில்லை என உறு­தி­ய­ளித்­துள்ள புதிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, அதே­போன்று, சர்­வ­தேச விசா­ர­ணைக்கு எவ­ரையும் உள்­ளாக்­க­வி­ட­மாட்டேன் என் றும் உறு­தி­யு­ரைத்­தி­ருக்­கின்றார்.

மனித உரிமை மீறல்கள் மனி­தா­பி­மான சட்ட மீறல்­களை உள்­ள­டக்­கிய போர்க்­குற்றம் தொடர்­பி­லான விசா­ர­ ணை­க­ளுக்கு ஒத்துழைப்பு வழங்க மாட்டோம் என்ற முன்னைய ஜனாதி பதியின் நிலைப்பாட்டையே புதிய ஜனாதிபதியும் முன்னெடுப்பார் என்பது இதன் ஊடாகத் தெரிகின்றது.

அதேநேரம் நம்பகமுள்ள உள்ளூர் விசாரணைப் பொறிமுறையொன்றை அமைத்துச் செயற்படப் போவதாக அவர் கூறியிருக்கின் றார். அதனை அவர் எவ்வாறு முன்னெ டுக்கப் போகின்றார் என்பது தெரியவி ல்லை.

அதேநேரம் ஊழல், மோசடிகள், முறை கேடுகள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன கூறியுள்ளார்.

எனவே, ஊழலுக்கு எதிரான நடவடிக்கையின் மூலம் தனது தேர்தல்கள எதிரியும், அரசியல் கட்சி ரீதியான எதிரியுமாகிய முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாடு களைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்து அவரை, செயலூக்கம் அற்றவரா க்குவதற்கான நடவடிக்கைகளை முன் னெடுக்கவும் கூடும். இதனை அவர் செய்யமாட்டார் என்று இப்போதைய அரசியல் நிலைமைகளில் சொல்ல முடி யாது.

எது எப்படியானாலும், புதிய ஜனாதிபதி யாகப் பொறுப்பேற்றுள்ள மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து, தேர்தலில் அவ ருக்கு அமோகமாக வாக்களித்துள்ள சிறு பான்மையினராகிய தமிழ், முஸ்லிம் மக் கள் பல நல்ல விடயங்களை எதிர்பார்த் திருக்கின்றார்கள். அது மட்டுமல்லாமல், சிங்கள மக்களும்கூட பலவற்றை எதிர்பா ர்த்திருக்கின்றார்கள்.

எனவே, நாட்டு மக்கள் அனைவரினதும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றத்தக்க வகையில்,இனங்களுக்கிடையில் ஐக்கி யத்தையும் உண்மையான புரிந்துணர் வையும் ஏற்படுத்தி ஒரு நல்லாட்சியைக் கொண்டு நடத்த வேண்டிய பொறுப்பு புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன மற்றும் புதிய பிரதமர் ரணில் விக்கி ரமசிங்க ஆகியோர் முன்னிலையில் மலை போல எழுந்து நிற்கின்றது. ஆகவே, அவர்கள் தமது பொறுப்பை சரியான முறையில் நிறைவேற்றுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும்.

Share.
Leave A Reply

Exit mobile version