சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. அவர்கள் இங்கு கைப்பற்றிய பகுதிகளை ஒருங்கிணைத்து புதிய நாடு உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை இணைத்து அவர்களுக்கு ஆயுதபயிற்சி அளித்து வருகின்றனர்.
தங்களிடம் பிடிப்பட்ட வெளிநாட்டினர் மற்றும் ராணுவ வீரர்களை பிணைக் கைதிகளாக வைத்துள்ளனர். பலரை தலை துண்டித்து கொலை செய்து வருகின்றனர். அதை வீடியோ எடுத்து வெளியிடுகின்றனர்.
முழங்கால் மண்டியிட்டு இருக்கும் 2 பேரை சிறுவன் கொடூரமாக துப்பாக்கியால் சுட்டு கொல்கிறான். உயிரிழந்த 2 பேரும் ரஷியாவை சேர்ந்த உளவாளிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுட்டு கொல்வதற்கு முன்னதாக அச்சிறுவன் பேச்சு இடம் பெற்றிருந்தது. தான் கஜகஸ்தானை சேர்ந்தவன் என்றும் மத நம்பிக்கை அற்றவர்களை கொலை செய்ய விரும்புவதாகவும் கூறினான்.