‘ஷமிதாப் படத்தின் டிரெய்லர், டீஸர் என அனைத்தும் ஹிட்டடித்து வருகிறது. அமிதாப் , தனுஷ் என ஒரு பக்கம் ரசிகர்களை கிரங்கடிக்கிறார்கள் என்றால், இன்னொரு பக்கம் அக்ஷரா இந்த படத்தின் மூலம் நடிக்க வந்துள்ளார். சின்ன குறும்புகள், சிரிப்பு என டிரெய்லரில் அக்ஷராவின் பகுதிகள் இளசுகளை குஷியாக்கி உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் இது குறித்து கமலிடம் கேள்வி கேட்கப்பட்டது. அக்ஷராவும் நடிக்க வந்துட்டாங்களே என? . ”அக்ஷரா நடிப்பாங்கனு நானும் எதிர்பார்க்கலை. அவங்களுக்கு டெக்னிக்கல் சைடுதான் ஆர்வம் அதிகம்.
மும்பையில் உதவி இயக்குநரா இருந்தாங்க. நல்லா டான்ஸ் ஆடுவாங்க. திடீர்னு ‘சமிதாப்’ படத்துல அமிதாப்ஜி, தனுஷ்கூட நடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.
போன வாரம் ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தாங்க. ‘ஃபென்டாஸ்டிக் ஆக்டிங். க்ளோஸ்அப் வாஸ் குட்’னு போட்டு கீழே அமிதாப்னு இருந்துச்சு.
நானும் முதல்ல இயக்குநர் ஆகணும்னு சான்ஸ் கேட்டு அவரைத்தான் சந்திச்சேன். உடனே என் பொடனியில் தட்டி, ‘இயக்குநரானா, ஆட்டோரிக்ஷாவுலதான் கடைசி வரைக்கும் ஊர் சுத்திட்டு இருப்ப. முதல்ல நடி. வீடு எல்லாம் வாங்கிட்டு அப்புறம் இயக்குறதைப் பத்தி யோசி’னு சொன்னார்.
பிறகு நான் முதல் படம் இயக்கும்போது, ‘என்னடா திடீர்னு படம் டைரக்ட் பண்ற?’னு கேட்டார். ‘வீடு கட்டிட்டேன் சார்’னு சொன்னேன். ‘ஆனா, 40 வருஷம் ஆச்சேடா. தாஜ்மஹாலே இதைவிட சீக்கிரம் கட்டிட்டாங்களே…’னு சிரிச்சார். என தனது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.