நாட்டில் இடம்பெற்ற மிகமுக்கியமான கொலைகள், வெள்ளை வான் கடத்தல்கள் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கு பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் திவிநெகும திட்டத்தில் 400 கோடி ரூபாவை சுருட்டியது, பாதுகாப்பு பெட்டகங்களை கொண்டு திறைசேரியை சுரண்டியமை உள்ளிட்ட பாரிய ஊழல் மோசடிகளுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுமே காரண கர்த்தாக்களாவர் என்று மக்கள் தொடர்பாடல் அமைச்சின் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.

முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக குற்றவியல் விசாரணைகள் திணைக்களத்திடம் நேற்று சனிக்கிழமை முறைப்பாட்டை செய்துவிட்டு அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

ஊடகங்களை நிந்திக்கும் வகையில், இரு சந்தர்ப்பங்களில் நான் ஊடகங்களுக்கு எதிராக கூடாத வசனங்களை பயன்படுத்திவிட்டேன். நான் யோசித்து, அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் அவற்றை கூறவில்லை. என் அடிமனத்திலிருந்த கோபத்தினாலும் எனது ஆவேசமான செயற்பாட்டினாலும் நான் அவ்வாறு நடந்துகொண்டேன். அதற்காக சகல ஊடகங்களிடமும் முதலில் மன்னிப்பு கேட்டுகொள்கின்றேன்.

நான், ருகுணு பெலியத்தையைச்சேர்ந்த நல்லதொரு சிங்கள பௌத்தன். என்னிடம் வைராக்கியம் இல்லை. ருகுணுவை சேர்ந்தவன் என்பதனால் வைராக்கியம் இருக்காது. ஆனால், வைராக்கியம் வைத்துவிட்டால் கடுமையாக காயப்படுத்தாமல் விடவும் மாட்டேன்.
இந்த கோட்டாபயவும் பசிலும் என்னை கீறி, கீறி காயப்படுத்தியவிட்டனர். கடுமையாக காயப்படுத்திவிட்டனர்.

என்னுடைய சட்டத்தரணியான முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபரின் மருமகனுடன் சென்றே இந்த முறைப்பாட்டை செய்தேன்.
நான், பெலியத்தையைச்சேர்ந்தவன் என்பதனால் இதற்கு பின்னர் எனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படும். என்னுடைய குடும்பத்தினருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படும். நான் செத்தால் நரியாக சாகமாட்டேன். சிங்கமாகவே சாகுவேன். எனக்கு யாருடனும் தனிப்பட்ட வைராக்கியம் இல்லை.

நானும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் எனது மாமாவின் காரில் ஒன்றாகதான் கொழும்புக்கு வந்தோம். நான் வேலைச்செய்வதற்கு உருப்படியான அமைச்சு ஒன்றுகூட வழங்கப்படவில்லை.

களனி பிரதேச சபைக்குள் சூழ்ச்சிகளை செய்து என்னை அங்கிருந்து விரட்டுவதற்கு பசில் ராஜபக்ஷ முயற்சித்தார். நான் அப்போது இருந்தே தயாராகிவிட்டேன்.

லசந்த விக்ரமதுங்க, (சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர்), பாரத லக்ஷமன் பிரேமச்சந்திர (முன்னாள் அமைச்சர்), ராகமை லொக்கு சியா, வெள்ளை வான் சம்பவங்கள் ஆகியவற்றின் ஆசிரியர் கோட்டாபய ராஜபக்ஷ, ஆம் இதனை நான் பொறுப்புடன் தான் கூறுகின்றேன்.

சிரச மற்றும் சியத்த ஆகிய ஊடகநிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிந்துவைத்திருந்தார்.

உண்மையை கூறினால் நான் செத்தாலும் பரவாயில்லை. உண்மையை கூறுவேன். எனக்கு எதிராக ஒரு சிறு குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கமுடியாது. நான் பெண்களை திருடவில்லை.

ஊழல் பேர்வழியான பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சரான பசில் ராஜபக்ஷவுக்கு டுபாயில் மெரியட் என்றொரு பெயரில் ஹோட்டல் இருக்கின்றது. உடவல வீதி தனமன்விலவில் பெரிய ஹோட்டல் ஒன்று இருக்கிறது. அது அவருடைய மருமகனுடையது. கிட்டத்தட்ட 20 அல்லது 13 ஏக்கர் விசாலமானதாகும்.

மல்வானையில் 23 ஏக்கரில் வீடொன்று இருக்கின்றது. கம்பஹா ஒருத்தொட்டவில் விசாலமான காரியாலயமொன்றும் இருக்கின்றது. இவை இரண்டையும் தனியார் நிறுவனங்கள் இரண்டே நிர்மாணித்துக் கொடுத்தன.

கோல்பேசில், அவருடைய மனைவிக்கு பங்குகள் இருக்கின்றன. திவிநெங்கும திட்டத்தின் ஊடாக 400 கோடி ரூபாய் சூரையாடப்பட்டது. வங்கியை உடைத்தால் சிறைக்கு செல்லவேண்டும். எனினும், திணைக்களங்களிலிருந்து வங்கிக்கு பணத்தை பாதுகாப்பாக எடுத்துவருவதாக கொண்டுசெல்லப்படுகின்ற பாதுகாப்பு பெட்டகங்களை பயன்படுத்தி திறைச்சேரி உடைக்கப்பட்டது.

அந்த பணம் யாவும், பசில் ராஜபக்ஷவின் தேர்தல் நடவடிக்கைகளுக்கே பயன்படுத்தப்பட்டன. இவையாவும் எல்லோருக்கும் தெரியும். ஆனால், பயந்துகொண்டிருக்கின்றார்கள். நான் பயப்பிடமாட்டேன். அதனால் தான் உண்மையை கூறுகின்றேன். இந்த ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் நாட்டுமக்களுக்கு நன்கு தெரியும்.

நல்லாட்சியுடன் நான் முன்னரே இணைந்துகொண்டேன். நானும் ராஜித்த சேனாரத்ன, ரவி கருணாநாயக்க, ஜனக்க பண்டார தென்னக்கோன் ஆகியோரே முதன்முதலில் கலந்தாலோசித்தோம்.

எனது மகனை யோசித்த ராஜபக்ஷவே அடித்தார்( முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன்) யோசித்தவுடன் இருக்கும் உயரமான மேயர் ஒருவரே எனது மகனை காலிக்கு கொண்டுசென்றார். கொல்வதற்காக, மகனுக்கு தப்பிக்கதெரியும் என்பதனால் அவர் தப்பித்துவிட்டார்.

ஒடேல் சம்பவத்தையடுத்து அங்கு பதிவாகியிருந்த காட்சிகள் யாவும் கோட்டாபாயவின் உத்தரவின் பேரில், அழிக்கப்பட்டுவிட்டது. எனது மகனை ஒரு மாதமாக வைத்தியசாலையில் வைத்திருக்குமாறும் அவரை வெளியில் விடவேண்டாம் என்றும் கோட்டாபயவே உத்தரவிட்டுள்ளார். அதற்கான சாட்சிகள் பொலிஸாரிடம் இருக்கின்றனர். அவர்கள் சாட்சியமளிப்பர்.

யாரையும் பலியெடுக்கவேண்டிய தேவை எனக்கில்லை. பலியெடுக்கவேண்டும் என்றால் அதற்கொரு முறையிருக்கின்றது. பெலியத்தைகாரனுக்கு அதுவும் தெரியும்.

தலைவீங்காமல் நாட்டை நல்லாட்சியில் கொண்டு செல்லவேண்டும். யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பசில் ராஜபக்ஷவும் கோட்டாபய ராஜபக்ஷவும் என்னனென்ன செய்கின்றார்கள் என்று நன்றாகவே தெரியும்.

அவற்றுக்கு முற்றுப்புள்ளிவைத்து நாட்டில் நல்லாட்சியை செய்திருந்தால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்சியை விட்டுசென்றிருக்கமாட்டார். மைத்திரிபால சிறிசேனவை, புலிகளிடம் கூறி கொலைசெய்வதற்கு பசில் ராஜபக்ஷ முயற்சித்தார்.
பொலன்னறுவையில் இருந்து வந்த மைத்திரிபால சிறிசேன மொரஹாகந்த நீர்த்தேக்க திட்டத்தை திறந்துவைக்கவேண்டுமா என்ற ராஜபக்ஷர்களின் கூடாத சிந்தனையால், மொரஹாகந்த நீர்த்தேக்கத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டபோது. மைத்திரிபால சிறிசேனவிடம் அமைச்சு பதவியில்லை.

எனக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மீது நம்பிக்கையிருக்கின்றது. அரசியல் அனுபவம் வாய்ந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஊழல் மோசடிகள் இன்றி நல்லாட்சியை ஏற்படுத்துவார்கள் என்று எனக்கு நன்றாக தெரியும்.

பழிவாங்க மாட்டார்கள், வரலாற்றில் பதியும் படி நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவார்கள். ஊடக சுதந்திரம் கிடைக்கும். தவறிழைத்தோருக்கு தண்டனை கிடைக்கும்.

இல்லாதவர்களுக்கு கிடைக்கும் போதும் இருக்கின்றவர்களிடம் இல்லாமல் போகும் போதும் பிரச்சினையாகும். நான் இங்கிருந்து போகும் போது குண்டடிப்பார்கள். உண்மையை கூறுவதனால் எனக்கு மரணத்துக்கு பயமில்லை என்றார்.
– See more at: http://www.tamilmirror.lk/137844#sthash.6402AZHs.dpuf

ஆளுனர் பாலிஹக்காரவின் நியமனம் – கூட்டமைப்பு பிரமுகர்கள் வரவேற்பு
17-01-2014

‘வடக்கைப் போல கிழக்கிலும் புதிய ஆளுநர் நியமனமாவார்’: சம்பந்தன்

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இராணுவ பின்புலம் கொண்ட ஆளுநருக்குப் பதிலாக, மூத்த சிவில் அதிகாரியான பலிஹக்காரவை புதிய ஆளுநராக நியமிக்கும் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கையை வடக்கில் ஆட்சியதிகாரத்தைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

கடந்த மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஆளுநரை மாற்றுவதாக வாக்குறுதி அளித்திருந்த போதிலும், அந்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றவுடன், அவரை சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையின் போது ஆளுநர் மாற்றம் பற்றி ததேகூ கோரிக்கை விடுத்திருந்ததாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.

வெளியுறவுச் சேவையிலும் ஐநாவின் பணிகளிலும் நீண்டகால அனுபவம் கொண்டவரும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உறுப்பினருமான எச்.எம்.ஜி.எஸ் பலிஹக்கார வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவதை தாம் வரவேற்பதாகவும் அவர் கூறினார்.

வடக்கின் புதிய ஆளுநர் பலிஹக்கார

வடக்கைப் போலவே கிழக்கு மாகாணசபையிலும் ஆளுநர் மாற்றத்தை தமது கட்சி கோரியிருப்பதாகவும் அந்த மாற்றமும் விரைவில் நடக்கும் என்று நம்புவதாகவும் ததேகூ தலைவர் தெரிவித்தார்.

இதனிடையே, ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து கிழக்கு மாகாணசபையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாகவும் அதற்காக சம்பந்தப்பட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் இரா. சம்பந்தன் கூறினார்.

மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறியின் நடவடிக்கைகள் மாகாணசபையின் நிர்வாகத்துக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளதாகவும் வடக்கில் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீடு தொடர்ந்து நிலவுவதாகவும் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் குற்றம்சாட்டி வந்தமை குறிப்பிடத்தக்கது.

அவ்வாறே, முன்னாள் கடற்படை அதிகாரியான மொஹான் விஜேவிக்ரம கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக தொடர்ந்தும் பணியாற்றுவது சுதந்திரமான சிவில் நிர்வாகத்துக்கு தடையாக இருப்பதாகவும் விமர்சனங்கள் இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அப்பா, சித்தப்பாவின் நெருக்கமே யுத்த வெற்றிக்கு காரணம்: நாமல்
17-01-2014

kothaஎனது அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கு இடையில் இருந்த நெருக்கமான உறவே விடுதலைப் புலிகளை தோற்கடிக்க காரணமாக அமைந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் என்.டி.டி.விக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்,

முன்னாள் ஜனாதிபதியும் எனது தந்தையுமான மஹிந்த ராஜபக்ஷவுக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் எனது சித்தப்பாவுமான கோத்தபாய ராஜபக்ஷவுக்கு நெருக்கமான தொடர்பு காணப்பட்டது.

ஒரு நாட்டின் தலைவர் என்றவகையில் பாதுகாப்புச் செயலர் நம்பிக்கைகுரியவராக இருப்பது அவசியம். எனவே எனது அவர் மீது அதிகம் நம்பிக்கை வைத்திருந்தார். எனவே எமது குடும்ப ஒற்றுமையும் நம்பிக்கையுமே விடுதலைப் புலிகளை வெற்றிக்கொள்ள முடிந்தது.

Share.
Leave A Reply

Exit mobile version