உலகின் மிகச் சிறந்த தற்காப்புக் கலைஞர் புரூஸ் லீ. சீனாவை சேர்ந்த நான்கு வயது சிறுவன் ஒருவன், புரூஸ் லீயை போலவே தற்காப்பு கலைகள் அனைத்தையும் செய்கிறான். குறிப்பாக நன்சுக் நுட்பங்களை மிக அழகாக வெளிப்படுத்துகிறான்.

1972-ம் ஆண்டுகளில் வெளிவந்த புரூஸ் லீயின் திரைப்படங்களைப் பார்த்து ஒவ்வொரு வித்தையையும் கற்றுக்கொண்டிருக்கிறான்.

தொலைக்காட்சியில் புரூஸ் லீயின் சண்டைக் காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சியைப் பார்க்காமல், அதற்கு முன்பு நின்றுகொண்டு சிறுவன் சண்டையிடுகிறான்.

திரையிலும் நிஜத்திலும் ஒரே விதமான சண்டைக் காட்சிகள். புரூஸ் லீக்கு உள்ள வேகமும் நினைவாற்றலும் நான்கு வயது சிறுவனுக்கு இருப்பதைக் கண்டு எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள்.

சீனாவின் அடுத்த தற்காப்புக் கலைஞர் இந்தச் சிறுவன்தான் என்கிறார்கள். கடந்த வாரம் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவுக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

Share.
Leave A Reply

Exit mobile version