காலி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மஹநுவர கப்பலில் உள்ள 12 கொள்கலன்கள்களில் ஆயுதங்கள் இருப்பதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த ஆயுத களஞ்சியசாலை தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானது என்று கூறப்படுகின்றது.
கப்பலில் களஞ்சியப்படுத்தியதாக வெளியான தகவல்களையடுத்தே பொலிஸார் அங்கு தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் சந்தேகத்துக்கிடமான பொருட்கள் இருப்பதாக காலி பிரதி பொலிஸ் மா அதிபர் ஏ.எஸ்.டீ.எஸ் குணவர்தனவுக்கு இன்று நண்பகல் தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில் நங்கூரமிடப்பட்டிருந்த மஹநுவர கப்பல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அந்த கப்பல், எவன்காட் என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்தினால் குத்தகைக்கு பெறப்பட்டதாகும். அந்த கப்பலில் ஆயுதங்கள் பல இருந்தன.
ரி-56 ரக துப்பாக்கிகள், மெஷின் கன், 84 எஸ் ரய்பில் எனும் ஆயுதம் மற்றும் தன்னியக்க ஆயுதங்கள், அரைவாசி தன்னியக்க ஆயுதங்கள் உள்ளிட்ட 3,000 ஆயுதங்கள் இருந்ததாக அந்த கப்பலுக்கு பொறுப்பாக இருந்தவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சிடமிருந்து அனுமதிபெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் கப்பலுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக அதற்குள் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையும் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.