ரஷியாவில் பெற்றோர்களால் விட்டுசெல்லப்பட்ட குழந்தையின் உயிரை காப்பாற்றிய பூனைக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ரஷியாவின் ஒப்னின்ஸ்க் பகுதியில் அபார்ட்மெண்ட் பகுதியில் தெருவில் குழந்தை ஒன்று பெட்டிக்குள் அனாதையாக விடப்பட்டிருந்தது.

பூஜியம் டிகிரிக்கும் கீழ் வெப்பநிலை நிலவிய சூழ்நிலையில் குழந்தை விட்டு செல்லப்பட்டுள்ளது. குழந்தை கடும் குளிரில் பாதிக்கப்பட்டு இருந்தது.

கடும் குளிரில் அவதியுற்ற குழந்தையின் உயிரை அப்பகுதியை சேர்ந்த மார்ஷா என்ற பூனை காப்பாற்றியுள்ளது. மார்ஷா பூனை மிகவும் நீண்ட முடியை கொண்டது. குழந்தை பெட்டிக்குள் குளிரில் அவதியுறுவதை பார்த்ததும், பெட்டிக்குள் குதித்து குழந்தைக்கு வெப்பத்தை கொடுத்துள்ளது.

பூனை குழந்தையை சுற்றியிலும் சுருண்டு இருந்து குழந்தையை பாதுகாத்ததை, வெகுநேரத்திற்கு பின்னர் அபார்ட்மெண்டில் இருந்தவர்கள் கண்டுபிடித்தனர். பூனை குழந்தையின் முகத்தை பாசமாக நக்கி கொண்டு இருந்தது.

குழந்தையை அடுத்து சுத்தமான ஆடையும், பால் டப்பாவும் இருந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு குழந்தை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

இது தொடர்பாக மருத்துவமனை செய்தித்தொடர்பாளர் பேசுகையில், குழந்தையால் இந்த குளிரில் மிகவும் குறைந்த நேரமே வெளியே இருக்க முடியும், மார்ஷாவுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். குழந்தை காப்பாற்றப்பட்டது என்று கூறியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக அபார்ட்மெண்டில் வசிக்கும் மக்ஹோவிகோவா என்ற பெண் பேசுகையில், நான் எப்போது மாடியில் இருந்து இறங்கினேனோ, அப்போது நான் குழந்தை அழுவதை கேட்டேன்.

குழந்தையை மருத்துவ உதவியாளர்கள் ஆம்புலனஸ்சில் கொண்டு சென்றபோதும் மார்ஷா தனது தாய்மையை வெளிபடுத்தியது. என்று கூறினார். குழந்தை ஆம்புலன்ஸ்சில் கொண்டு செல்லப்பட்டபோது, வாகனத்தின் பின்னேயே பூனை மார்ஷா ஓடியுள்ளது.

ஆம்புலன்ஸ்சில் இருந்த மருத்துவ உதவியாளர் இவானினா பேசுகையில், நாங்கள் குழந்தையை எடுத்து செல்வது குறித்து பூனை மிகவும் கவலை கொண்டது. அது எங்களுக்கு பின்னால் மிகவும் வேகமாக ஓடிவந்தது.

மியாவ்.. என கத்திக் கொண்டே வந்தது. அந்த பூனை உண்மையில் ஒரு மிகஅறிவார்ந்த உயிரினம். என்று கூறினார். பெற்றவர்களே குழந்தையை போட்டுவிட்டு சென்றநிலையில் குழந்தையை காப்பாற்றிய பூனைக்கு பெரும் பாராட்டுக்கள் குவிந்துள்ளது.

குழந்தையின் மீது பூனை கொண்டிருந்த தாய்பாசம் அவனையும் கலங்க செய்தது. குடியிருப்பு பகுதியில் இருக்கும் மக்கள் ஹீரோ பூனைக்கு பெரும் வரவேற்பு  அளித்தனர். பூனைக்கு அவர்கள் தேவையான உணவுபொருட்களை வழங்கினர்.

ஆண் குழந்தை தற்போது மருத்துவமனையில் உடல்நலத்துடன் உள்ளது. குழந்தை பிறந்து வெறும் 2 முதல் 3 மாதங்கள் ஆகியிருக்கலாம். குழந்தையை விட்டுசென்ற பெற்றோர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

 

Share.
Leave A Reply

Exit mobile version