யாழ். சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியில் உள்ள வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு 11.30 அளவில் மூன்று பேர் கொண்ட குழுவொன்று வீட்டினுள் அத்துமீறி நுழைந்து கணவன் மனைவி மீது கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர்.

இதில் காட்டுப்புலத்தை சேர்ந்த ம.சுஜந்தன் (வயது 28) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

அவருடைய மனைவியான சு.தனுசியா (வயது 25) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இவர்களுக்கு இரு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்கள் இருவருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை.

இச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version