புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஒத்துழைப்பு இல்லாமல் ஒருபோதும் வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாது எனவும் அதனாலேயே தான் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர் கலந்துகொண்ட முதலாவது மக்கள் சந்திப்பு நேற்று பொலன்னறுவை தோபாவெவ மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற நிலையில் அங்கு கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

showImageInStoryமுன்னதாக நேற்று காலை அனுராதபுரம்  ஜய ஸ்ரீ மகாபோதிக்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

மக்களின் துயரங்களை அறிந்த ரஜரட்டயை சேர்ந்த மைந்தன் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமையானது நாட்டுக்கு கிடைத்த பெருமை என இதன் போது  ஸ்ரீ லங்கா ராமஞ்ஞ நிகாயவின் மக நாயக்க தேரர் ஆனந்த அனுனானந்த தேரர் தெரிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.

இதனை அடுத்து அனுராதபுரத்திலிருந்து நேற்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவைக்கு சென்று ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டதன் பின்னரான முதலாவது மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டார்.

பிரதமர் ரணில் விகரமசிங்கவுடன் ஒரே வாகனத்தில் இதன் போது பயணித்திருந்த மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி அங்கிருந்த பொலன்னறுவை மக்களுக்கு நன்றிகளை தெரிவித்த வண்ணம் உரையாற்றினார்.

இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

உயிரை பணயம் வைத்தே நாங்கள் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தீர்மானம் ஒன்றுக்கு வந்தோம். ஏனெனில் அந்த தேர்தலில் நான் தோற்றிருந்தால் நான் இப்போது மண்ணுக்கடியிலேயே இருந்திருப்பேன் என்பதை அப்போது மிகத் தெளிவாக அறிந்திருந்தேன்.

தேர்தல் முடிந்ததும் எனது பிள்ளைகளை கைது செய்ய மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் அனைத்து தயார்படுத்தல்களையும் செய்திருந்தது. அதனூடாகவே என்னை கொடுமைப் படுத்த திட்டம் தயார் செய்யப்பட்டிருந்தது.

இன்று மஹிந்த ராஜபக் ஷ தனக்கு இருப்பதற்கு வீடில்லை என கூறுகின்றார். நான் தோல்வியடைந்திருந்தால் இருப்பதற்கு அவர் வீடு தந்திருப்பாரா என நான் அவரிடம் கேட்கிறேன்.

இன்று பலருக்கும் ஒரு கேள்வி எழலாம். நான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை ஏற்றமை தொடர்பிலான கேள்வியே அது.

நான் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமை பதவியை ஏற்றிராவிடில் அல்லது நிராகரித்திருப்பின் எமக்கு இன்று எமது 100 நாள் வேலைத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்ல முடியாமல் போயிருக்கும்.

அப்படியானால் பாராளுமன்றத்தை கலைத்து தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டியது தானே என ஒருவர் கேட்கலாம். அப்படி செய்தால் 100 திட்டம் அவ்வளவுதான். அதோடு முடிந்துவிடும்.

அதனால் எமக்குள்ள சிறந்த தீர்வு, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட தேர்தலில் எமக்கு ஆதரவு வழங்காதவர்களையும் இணைத்துக்கொண்டு தேவையான திருத்தங்களை செய்து நாம் வாக்களித்தவைகளை நிறைவேற்றுவதாகும். என குறிப்பிட்டார்.

ஊழல்,மோசடிகளுக்கு எதிராக புதிய சட்டங்கள்: விரைவில் நிறைவேற்றப்படும் என்கிறார் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ

ஊழல், மோச­டி­களில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்­கான புதிய சட்­டங்­களை விரைவில் பாரா­ளு­மன்­றத்தில் முன் வைத்து

நிறை­வேற்­ற­வுள்­ள­தாக நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.

தமிழ் அர­சியல் கைதிகள் விரைவில் விடு­தலை செய்­யப்­ப­டு­வார்­க­ளென்றும் அதற்­காக விசேட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

கடந்த ஆட்­சியில் 2100 கோடி ரூபா ஊழல் மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ள­தா­க குற்றம் சாட்டப்படுவதுடன் பல்­வேறு உயர் பதவி­களை வகித்­த­வர்­க­ளுக்கு எதி­ரா­கவும் ஊழல், மோச­டிகள் தொடர்­பாக குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­தோடு லஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழு­விலும் பல்­வேறு முறைப்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

இவை தொடர்­பாக நீதி­ய­மைச்சின் வகி­பாகம் எவ்­வாறு இருக்கும் என கேட்ட போதே நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜ­பக்ஷ மேற்கண்டவாறு தெரி­வித்தார்.

அமைச்சர் இது தொடர்­பாக மேலும் தெரி­விக்­கையில்;

கடந்த கால ஆட்­சியில் பாரிய ஊழல் மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ளன. இவை தொடர்­பாக முறைப்­பா­டுகள் தினம் தினம் கிடைத்து வரு­கின்­றன. நாட்டு மக்­களின் பணத்தை சூறை­யா­டி­ய­வர்­களை சும்மா விட முடி­யாது.

நாட்டில் ஊழல் மோச­டிகள் இல்­லாத சட்டம் ஒழுங்­கு­ட­னான நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஆட்சி மாற்­றத்தை ஐ.தே. க. தலை­மையில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.

எனவே மக்­க­ளுக்கு நாம் வழங்­கிய உறுதி மொழி­களை நிச்­ச­ய­மாக நிறை­வேற்­றுவோம். கடந்த கால ஆட்­சியில் இடம்­பெற்ற ஊழல் மோச­டி­களை விசா­ரிப்போம்.

இதன் போது உயர்­மட்டம், கீழ்­மட்டம் என தரா­தரம் பார்க்க மாட்டோம். சட்­டத்தின் முன் அனை­வரும் சம­மா­ன­வர்­களே ஆகும். குற்றம் செய்தோர் நிச்­சயம் தண்­டிக்­கப்­ப­டு­வார்கள்.

ஊழல் மோச­டி­களை விசா­ரணை செய்­வ­தற்­காக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் பிர­தான குழு அமைக்கப்பட்டுள்­ளது.

அத்­தோடு எனது தலை­மை­யிலும் உப குழு­வொன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. இரு குழுக்­க­ளிலும் தலா 8 உறுப்­பி­னர்கள் உள்ள­டக்­கப்­பட்­டுள்­ளனர்.

இதற்கு மேல­தி­க­மாக இக்­குற்­றச்­சாட்­டுக்­களை விசா­ரிப்­ப­தற்­கான பொறுப்பு லஞ்ச ஊழல் திணைக்­க­ளத்­தி­டமும் இர­க­சிய பொலி­ஸா­ரி­டமும் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னூ­டா­கவும் விசா­ர­ணைகள் நடாத்­தப்­படும். எனவே மோச­டி­களில் ஈடு­பட்டோர் எவ­ராயினும் தப்­பிக்க முடி­யாது போகும். அனை­வரும் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட்டு தண்­டிக்­கப்­ப­டு­வார்கள்.

அது மட்­டு­மல்­லாது இம் மோச­டி­களில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்கு கடு­மை­யான தண்­ட­னைகள் வழங்­கு­வ­தற்­காக புதிய சட்­டங்கள் பாரா­ளு­மன்­றத்தில் முன் வைக்­கப்­பட்டு அவ­ச­ர­மாக நிறை­வேற்­றப்­ப­ட­வுள்­ளன.

வெளி­நா­டு­களில் பதுக்கி வைக்­கப்­பட்­டுள்ள கறுப்பு பணம் மற்றும் சொத்­துக்கள் தொடர்­பா­கவும் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தோடு அதற்­காக அந்­தந்த நாடு­களின் ஒத்­து­ழைப்­பையும் பெற­வுள்ளோம்.

விசே­ட­மாக இந்­தி­யாவின் மத்­திய வங்­கியின் உதவி நாடப்­படும். தற்­போது சீசெல்ஸ் நாடும் இதற்­கான ஒத்­து­ழைப்பு வழங்க முன்­வந்­துள்­ளது.

போதைப்­பொருள்

போதைப்­பொ­ருட்கள் கடத்தல், விற்­பனை போன்­ற­வற்றை தடுப்­ப­தற்கு தற்­போது நாட்­டி­லுள்ள சட்­டங்கள் போது­மா­னவை. ஆனால் அச்­சட்­டங்கள் இது வரையில் சரி­யான முறையில் அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

இனிமேல் சட்­டங்கள் சரி­யான வழியில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும். போதைப்­பொ­ருட்கள் கடத்­தலை தடுப்­ப­தற்­காக எமது அமைச்சின் கீழ் விசேட வேலைத்­திட்­ட­மொன்றும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

அர­சியல் கைதிகள்

தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்­பாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விசேட கவனம் செலுத்­தி­யுள்ளார். தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­ன­ரு­ட­னான சந்­திப்­பிலும் இது தொடர்­பாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

இது தொடர்பில் ஜனா­தி­பதி பணிப்­பு­ரையில் விசேட குழு அமைக்கப்பட்டுள்ளது.

எனவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை துரிதப்படுத்தப்படும்.

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக விசாரணைகளும் துரிதப்படுத்தப்படும். குற்றமற்றவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுவார்கள்.

ஊழல் மோசடிகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுக்களில் மட்டுமல்லாது பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை அரசிற்கு நேரடியாகவும் சமர்ப்பிக்க முடியுமென்றும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version