மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பும் பெண்களிடம் சில விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் லஞ்சம் பெறுகின்றமை மற்றும் வெளிநாட்டு பெண்களை துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்குகின்றமை தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமான நிலையத்தை தலை சிறந்த இடமாக மாற்றுவதற்கு விமான சேவைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக, இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

உரிய முறையில் கடமைகளில் ஈடுபடுகின்ற பாதுகாப்பு பிரிவினர் இந்த செய்தியுடன் தொடர்புப்பட மாட்டார்கள். இலங்கைக்கு அதிகளவிலான அந்நிய செலாவணி மத்திய கிழக்கு நாடுகள் உட்பட வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கைப் பணியாளர்களால் கிடைக்கின்றது.

கடந்த வருடத்திற்கான தரவுகளின் அடிப்படையில் அந்நிய செலாவணி 823 பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என தெரியவந்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளில் கஷ்டத்தின் மத்தியில் உழைத்து, நாட்டிற்கு பெருந்தொகையான பணத்தைக் கொண்டுவரும் பெண்கள் விமான நிலையத்தில் உள்ள தந்திரமான பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் கழுகுப் பார்வையில் இருந்து தப்பமுடிவதில்லை.

பொருட்களுடன் நாடு திரும்பும் பெண்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி, பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்கள் பணம் அறவிடுவதனை காணமுடிகின்றது. பணத்தை வழக்காவிடின், அவர்களின் நேரம் விமான நிலையத்தில் ​தேவையற்றவகையில் விரயம் செய்யப்படுவதாகவும், சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சில சந்தர்ப்பங்களில் அவர்களின் பயணப் பைகள் காணாமற்போகின்ற நிலைமையும் ஏற்படுகின்றது.

இந்த இலஞ்ச மாபியாவை நிறுத்துவது இலகுவான விடயம் அல்லவென விமானநிலையத்தின் தகவல்கள் குறிப்பிடுகின்றன. ஆயினும் எந்தவொரு உத்தியோகத்தரும் அந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை எனவும், சிலர் தொழிற்சங்களின் ஊடாக அரசியல் பலத்தை பாவிப்பது முக்கியமானதொரு விடயமாக காணப்படுகின்றது.

விமான நிலையத்தில் பணியில் இருக்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் 300 ரூபாவை மாத்திரமே வைத்திருக்க முடியும்.

அந்தநிலையில் திடீர் சோதனைகளை முன்னெடுக்கும் சந்தர்ப்பத்தில் இலஞ்சம் பெற்றுக்கொள்ளும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை பிடிப்பது கடினமானதொரு விடயமல்ல.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் மற்றுமொரு விடயமே பாலியல் மாபியா.

வெளிநாட்டு பெண்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version