சென்னை: நான் அணிந்தது ருத்ராட்ச மாலை அல்ல. பாரம்பரியமிக்க நகையின் ஒரு பகுதிதான் அது. தாலி அணிவது நமது சம்பிரதாயம். நான் என்ன வகையான தாலி அணிந்துள்ளேன் என்று மற்றவர்களிடம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை குஷ்பு தனது பட ஆடியோ விளையாட்டு விழாவில் ருத்திராட்ச மாலையில் தாலி கோர்த்து கழுத்தில் அணிந்திருந்தார். இது அப்போதே சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த படம் சில வாரங்களுக்கு முன்பு வார இதழ் ஒன்றில் வெளியானது.
துறவிகளும், ஆன்மீக வாதிகளும் அணியும் ருத்ராட்ச மாலையை அவர் இழிவுபடுத்தி விட்டதாக எதிர்ப்புகள் கிளம்பின. குஷ்புவின் இத்தகைய செயல் இந்து மதத்தையும், ருத்ராட்சத்தையும் களங்கப்படுத்துவதாக உள்ளது என இந்து மக்கள் கட்சி தஞ்சை மாவட்ட செயலாளர் பாலா கும்பகோணம் 2-வது கூடுதல் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் தாலி சர்ச்சைக்கு தற்போது அவர் விளக்கம் அளித்துள்ளார் குஷ்பு.27-1422342071-kushboo3115
பாரம்பரிய நகை
நான் அணிந்தது ருத்ராட்ச மாலை அல்ல. பாரம்பரியமிக்க நகையின் ஒரு பகுதிதான் அது. நகரம் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தபோது அந்த நகையை கழுத்தில் அணிந்து இருந்தேன்
படங்களால் சர்ச்சை
அது பார்க்க அழகாக இருந்தது. அதை ருத்ராட்ச மாலை என நினைத்து பலரும் என்னிடம் கேட்டார்கள். நான் விளக்கம் சொன்னேன். ஆனால் இப்போது பத்திரிகைகளில் அந்த படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ருத்ராட்ச மாலையில்லை
நான் உண்மையான ருத்ராட்ச மாலையை தாலியாக செய்து அணிந்துள்ளதாக செய்தி வெளியிட்டு விட்டார்கள். இதை உண்மை என்று நம்பி ஒருவர் எனக்கு எதிராக வழக்கும் போட்டு விட்டார்.
தெய்வீக மாலை
ருத்ராட்ச மாலை அணிவதால் நல்ல பலன்கள் உண்டாகும் என்றும் கேள்விப்பட்டு உள்ளேன். ருத்ராட்சம் தெய்வீகமானது என்றும், முனிவர்கள், யோகிகள் அணியக்கூடியது என்றும் படித்து இருக்கிறேன்.
அவசியம் இல்லை
ஆனால் ருத்ராட்ச மாலைக்கும் நான் கழுத்தில் அணிந்த மாலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. தாலி அணிவது நமது சம்பிரதாயம். நான் என்ன வகையான தாலி அணிந்துள்ளேன் என்று மற்றவர்களிடம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை.
சர்ச்சை நாயகி
ஏற்கனவே படவிழா ஒன்றில் செருப்பு காலுடன் சாமி சிலை அருகில் உட்கார்ந்து இருந்ததாக சர்ச்சையில் சிக்கினார். அதன்பிறகு கற்பு பற்றி கருத்து சொல்லி எதிர்ப்புக்கு ஆளானார். இப்போது ருத்ராட்ச மாலை தாலி பிரச்சினையில் சிக்கியுள்ளார்.
Share.
Leave A Reply

Exit mobile version