லண்டனில் இருந்து வந்த கணவன் மனைவி மீது மண்ணென்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்ற போது மனைவி கணனையும் கட்டிப் பிடித்ததால் இருவருக்கும் தீ மூண்டதில் மனைவி பலியாகியுள்ளதுடன்
கணவன் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா, உக்குளாங்குளத்தில் அமைந்துள்ள வீடொன்றில் வசித்த வெளிநாட்டில் இருந்த கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டையடுத்து மனைவி மீது மண்ணென்ணெய் ஊற்றி கணவன் கொழுத்தியுள்ளார்.
இதன் போது மனைவி கணவனை எட்டி கட்டிப்பிடித்துள்ளார்.
இந் நிலையில் இச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரகளை மேற்கொண்டு வருகின்றனர்.