பல கோஷங்­களை கொண்டு முதன்­முதல் அர­சாங்­கத்­திற்கு எதிராக கள­மி­றங்­கி­யது முஸ்லிம், தமி­ழர்கள் அல்ல பௌத்த துறவி­கள்தான்.

சோபித்த தேரர், ரத்­தினதேரர் போன்­ற­வர்கள் வெளியே இறங்கி எதிர்ப்பைக் காட்டியிருந்­தனர். தற்­பொ­ழுதும் போராடிக்கொண்டு தான் இருக்­கின்­றார்கள்.

அவர்­களே முதலில் எழுந்தவர்கள். நாம் பின்னால் சென்று இணைந்து கொண்­ட­வர்கள். எங்களால் தான் வெற்­றி­கி­டைத்தது.

வடக்கு, கிழக்கு இரண்டும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஆட்­சியில் கீழ் இருப்­பது பற்றி பிரச்­சி­னைகள் எது­வு­மில்லை. ஆனால், ஒரு யதார்த்­த­மான முறையில் இருக்க வேண்டும் என கரு­து­கின்றோம்.

காரணம் ஏழு மாவட்­டங்­க­ளிலும்  சிங்­க­ள­வர்கள் இருக்­கின்ற   போதிலும் கிழக்­கி­லா­வது முஸ்லிம் முத­ல­மைச்சர் இருப்பாராக இருந்தால் அது சம­நி­லையில் இருக்கும் என எதிர்­பார்க்­கின்றோம்.

ஆனால் கிழக்­கிலும் முஸ்­லிம்கள் தேவை­யில்லை.   அங்கும் நாங்கள் தான் ஆட்சி செய்வோம் என பிடி­வாதப் போக்கில் தான் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் இருக்­கின்­றார்கள் என்று முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லா­ளரும் சுகா­தார இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான ஹஸனலி தெரி­வித்தார்.

அவர் வழ ங்­கிய நேர்­கா­ண­லி­லேயே அவர் இத னைத் தெரி­வித்தார். அவர் வழங்­கிய நேர்­காணல் முழு­மை­யாகக் கீழே தரப்படு­கி­றது.

கேள்வி: கிழக்கு மாகாண சபை முத­ல­மைச்சர் தொடர்பில் முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பு க்கு இடையில் பல­த­ரப்­பட்ட பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­றுள்­ளன. ஆனால், எந்­த­வி­த­மான முடிவும் இது­வரை எட்டப்படவில்லை. அது குறித்து நீங்கள் என்ன கரு­து­கின்­றீர்கள்?

பதில்: கிழக்கு மாகாண சபையில் தமக்கு பதி­னொரு ஆச­னங்­க­ளுடன் கூடிய பெரும்­பான்மை இருக்­கின்­ற­மை­யினால், முதல­மைச்சர் மற்றும் அமைச்சர் பதவி தர­வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் கேட்­டனர்.

ஆனால், நாங்கள் அதற்கு உடன்­ப­ட­வில்லை. காரணம் என்­ன­வென்றால், நாங்கள் ஏற்­க­னவே இருந்த அர­சாங்­கத்­துடன் ஆட்சிய ­மைத்த பொழுது முதல் இரண்­டரை வரு­டங்­க­ளுக்கு அவர்கள் முத­ல­மைச் சர் பத­வியை எடுத்­துக்­கொண்­டனர்.

இரண்டாம் கட்­ட­மாக கடைசி இரண்­டரை வரு­டத்­திற்கு முத­ல­மைச்சர் பத­வியை நாங்கள் எடுத்துக் கொள்­கின்றோம் என்ற ஒப்­பந்தம் எமக்கு இருந்­தது. இந்த ஒப்­பந்த அடிப்­ப­டையில் நாங்கள் இரண்டாம் கட்ட முத­ல­மைச்சர் பத­வியை கேட்டிருக்கின்றோம்.

அதே­நேரம் ஆட்சி மாறி­யதால், முன்­னைய அர­சாங்கம் பெரும்­பான்­மையை இழந்­துள்­ளது. எனவே, புதி­தாக ஒரு சபையை அமைத்து தேர்தல் இல்­லாமல் பெரும்­பான்மை பலத்தைக் காட்டி புதி­ய­தொரு ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்த வேண்டும் என கூட்­ட­மைப்­பினர் கேட்­டனர்.

அதற்கு அவர்கள் தங்­க­ளுக்கு முத­ல­மைச்சர் பத­வியைத் தரும்­படி கேட்­டனர். அதற்கு நாங்கள் இணங்­க­வில்லை.

வடக்கு, கிழக்கு இரண்டும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஆட்­சியில் கீழ் இருப்­பது பற்றி பிரச்­சி­னைகள் எது­வு­மில்லை. ஆனால், ஒரு யதார்த்­த­மான முறையில் இருக்க வேண்டும் எனக் கரு­து­கின்றோம்.

காரணம் ஏழு மாவட்­டங்­க­ளிலும் சிங்­க­ள­வர்கள் இருக்­கின்ற போதிலும் கிழக்­கி­லா­வது முஸ்லிம் முத­ல­மைச்சர் இருப்­பா­ராக இருந்தால் அது சம­நி­லையில் இருக்கும் என எதிர்­பார்க்­கின்றோம்.

ஆனால் கிழக்­கிலும் முஸ்­லிம்கள் தேவை­யில்லை. அங்கும் நாங்கள் தான் ஆட்சி செய்வோம் எனப் பிடி­வாத போக்கில் தான் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் இருக்­கின்­றார்கள்.

அதற்கு நாம் கூறு­வது என்­ன­வென்றால், பிடி­வாதம் பிடித்­தாலும் பர­வா­யில்லை. நீங்­களே ஆட்­சி­ய­மை­யுங்கள் உங்களுடைய பலத்தை நிரூ­பித்து நீங்கள் ஆட்­சி­ய­மை­யுங்கள்.

அதே­வேளை நாங்­களும் உங்­க­ளு­டைய ஆட்­சியில் இருப்போம். ஆனால், எந்­த­வி­த­மான அமைச்­சுக்­க­ளையும் எடுக்காமலிருந்து உங்­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­குவோம் என்ற தெரி­வையும் அவர்­க­ளுக்கு வழங்­கினோம்.

ஏனெனில், தமிழ், முஸ்லிம் உறவுகள் முறிந்துக் கொண்டு செல்­வ­தையும், பிரச்­சி­னைக்கு உட்­ப­டு­வ­தையும் நாங்கள் விரும்ப­வில்லை. அதனால் தான் நாங்கள் அவர்­க­ளுடன் ஒத்­து­ழைப்­ப­தாக கூறினோம்.

மூன்று மாதங்­களில் தேர்தல் இடம்­பெ­ற­வுள்­ளது. எனவே மக்கள் மத்­தியில் சென்று எங்­க­ளுக்கு உண்­மையை நியா­யப்­ப­டுத்த முடி­யாமல் இருக்­கின்­றது.

முத­ல­மைச்சர் பத­வியை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு நாங்கள் வழங்­கு­வதால், அதனை முஸ்லிம் மக்கள் எவ்­வ­ள­வு ­தூரம் ஏற்­றுக்­கொள்­வார்கள் என்று தெரி­ய­வில்லை.

அவ்­வா­றில்­லா­விடில் தேர்தல் இடம்­பெ­றும்­வரை இப்­போ­துள்­ள­வாறு கிழக்கு மாகாண சபையை நடை­மு­றைப்­ப­டுத்­துங்கள் என்றும் தேர்­த­லுக்குப் பின்னர் ஓர் முடிவை எடுப்போம் என்றும் நாங்கள் கூட்­ட­மைப்­பிடம் தெரி­வித்­துள்ளோம்.

ஆனால், உட­ன­டி­யாக முடி­வெ­டுக்க வேண்டும் என்று அவர்கள் கூறு­கின்­றார்கள். கூட்­ட­மைப்பு இவ்­வாறு கூறு­வதால் நாங்கள் எதிர்க்­கட்சிப் பக்கம் சென்று அம­ர­மாட்டோம். அதிலும் நாங்கள் உறு­தி­யா­கவே இருக்­கின்றோம்.

கேள்வி: பொதுத் தேர்­தலைக் கருத்தில் கொண்­டுதான் நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு முத­ல­மைச்சர் பத­வியை விட்டுக் கொடுக்கத் தயக்கம் காட்­டு­கின்­றீர்­களா?

பதில்: தேர்­த­லையும் ஒரு கார­ணமா கக் கூறலாம். அது­மட்­டு­மல்­லாது முஸ் லிம் காங்­கி­ரஸின் வாய்ப்பு வரும் போது அதை எப்­படி நாங்கள் மக்களி டம் நியா­யப்­ப­டுத்­து­வது? அதற்கு கூட்­ ட­மைப்­பினர் காரணம் குறிப்­பி­டு­கை யில், நாங்கள் கடந்த முறை அமைச்சுப் பதவி தரலாம் என்று கூறி உங்­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­னோம்­ என்று கூறு­கின்­றார்கள்.

ஆனால் அந்­நேரம் இருந்த சூழல் எங்­க­ளுக்கு சாத­க­மாக அமை­ய­வில்லை. காரணம் இந்த நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான அடா­வ­டித்­த­னங்கள் தெடங்­கி­யி­ருந்த கால­கட்டம் அது.

வட­கி­ழக்­குக்கு வெளியில் இருக்கும் முஸ்­லிம்கள் பெரிதும் அச்­சப்­பட்­டனர். நாங்கள் போய் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இணைந்து ஆட்­சி­ய­மைத்தால்  வட­கி­ழக்­கிற்கு வெளியில் இருக்கும் முஸ்­லிம்கள் தமி­ழீழம் அமைக்க சென்று விட்­ட­தாக கூறி முன்­னைய அர­சாங்கம் முஸ்­லிம்கள் மீது பெரும் அடா­வ­டித்­த­னத்தை கட்­ட­விழ்த்­து­விட்­டி­ருக்கும்.

எங்­களை அந்தக் கால­கட்­டத்தில் அப்­ப­டி­யொரு முடிவு எடுக்க வேண் டாம் என்று மார்க்க அறி­ஞர்கள், உல­மாக்கள் எனப் பலரும் வந்து கேட்­டுக்­கொண்­டனர்.

காரணம் வெளியில் உள்ள முஸ்­லிம்­க­ளுக்கு ஆபத்து ஏற்­படும். இன­வா­தப்­போக்கில் அப்­போ­தைய அர­சாங்க பிர­சா­ரத்தை கொண்டு செல்லும் என்­றெல்­லலாம் கூறி­னார் கள். ஆகவே நாங்கள் அதையும் பரி­சீ­ லிக்க வேண்­டி­யி­ருந்­தது.

ஆனால், அதனை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் இப்­பொ­ழுது விமர்­சிக்­கின்­றனர். நாங்கள் ஒரு தனி சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்கள். எங்­க­ளு­டைய சமூ­கத்­திற்கும், சூழ­லுக்கு ஏற்ப முடி­வெ­டுக்கும் எமக்கு உரிமை இருக்­கின்­றது. எங்­களை பிழை கூற வேண்­டிய தேவை அவர்­க­ளுக்கு இல்லை. நாங்கள் தனி சமூகம் என்­பதை உண­ராத அவர்கள் ஆதிக்கம் செலுத்த நினைப்­பது நியா­ய­மாக இல்லை.

கேள்வி: ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ் மக்­களும் முஸ்லிம் மக்­களும் ஒரு­மித்த கருத்­துக்­கொண்டு ஆட்­சி­மாற்­ற­மொன்றை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றார்கள். இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன? எதிர்­கா­லத்­திலும் இது தொடர்­வ­தற்கு நீங்கள் என்ன நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளீர்கள்?

பதில்: இத்­தேர்தல் முடிவில் எங்­களால் தான் இந்த முடிவு வந்­த­தென்று தமிழ் மக்கள் எண்­ணு­கின்­றார்கள், தங்­க­ளால்தான் இந்த முடிவு வந்­தது என்று முஸ்­லிம்கள் சொல்­கி­றார்கள்.

ஆனால் இதில் ஒன்றை மறக்க கூடாது. என்­ன­வென்றால் வெறு­மனே முஸ்லிம், தமிழ் மக்கள் இணைந்து இவ்­வாட்சி மாற்­றத்தை கொண்டு வந்­தி­ருக்க இய­லாது.

இதில் சிங்­கள வாக்­கு­களும் மிக முக்­கியம் என்­பதை உண­ர­வேண்டும். மித­வாத போக்­குள்ள சிங்­கள வாக்­கு­களை ஒவ்­வொரு தேர்தல் தொகு­தி­யிலும் எடுத்துப் பார்த்தால், 2010ஆம் ஆண்டு இடம்­பெற்ற தேர்­தலை காட்­டிலும் சிங்­கள வாக்­குகள் இந்ததேர்­தலில் அதி­க­ரித்தே காணப்­ப­டு­கின்­றன.

முன்­னைய அர­சாங்­கத்­திற்கு எதி­ராக வீழ்ந்த வாக்­குகள் அதி­க­ரித்­துள்­ளன. எமது மனதில் மட்டும் மாற்றம் வர­வில்லை. சிங்கள மக்கள் மன­திலும் ஒரு மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது.

மேலும், நல்­லாட்­சியை உரு­வாக்­க­வேண்டும், இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒரு தீர்வைப் பெற்றுத் தர வேண்டும், 18ஆம் திருத்­தத்தை இல்­லாமல் செய்ய வேண்டும், சுயா­தீன ஆணைக்­கு­ழுவை மீண்டும் கொண்­டு­வ­ர­வேண்டும் என பல கோஷங்­களை கொண்டு முதன்­முதல் அர­சாங்­கத்­திற்கு எதி­ராக கள­மி­றங்­கி­யது முஸ்லிம், தமி­ழர்கள் அல்ல பௌத்த துற­வி­கள்தான். சோபித்த தேரர், ரத்­தின தேரர் போன்­ற­வர்கள் வெளியே இறங்கி எதிர்ப்பைக் காட்­டி­யி­ருந்­தனர்.

தற்­பொ­ழுதும் போரா­டிக்­கொண்டு தான் இருக்­கின்­றார்கள். அவர்­களே முதலில் எழுந்­த­வர்கள். நாம் பின்னால் சென்று இணைந்து கொண்­ட­வர்கள். எங்­களால் தான் வெற்­றி­கி­டைத்தது. நாம் தான் ஆட்சி மாற்­றத்தைக் கொண்டு வந்தோம் என்றெல்லாம் கூற முடி­யாது.

இதில் முக்­கிய பங்கு பெரும்­பான்மை மக்­க­ளுக்கு உண்டு. சிங்­கள மக்­களின் மனதில் ஏற்­பட்ட அந்த மாற்­றங்கள் எங்­க­ளுக்கு ஒரு சாத­க­மான மாற்­றங்­க­ளாக இருந்­ததால் நாங்­களும் அதற்கு பின்னால் போய்ச் சேர்ந்து கொண்டோம் என்­பது தான் உண்மை.

கேள்வி: அண்­மையில் முஸ்லிம் காங்­கிரஸ் உயர் மட்டக் குழு ஜனா­தி­ப­தியைச் சந்­தித்து. என்ன விட­யங்கள் தொடர்பில் ஜனா­தி­ப­தி­யுடன் கலந்­தா­லோ­சித்­தது?

பதில்: பரஸ்­பரம் விளக்­க­மான ஒரு சந்­திப்பு என்றே இதனைக் கூற வேண்டும். ஜனா­தி­பதி எல்லா கட்­சி­க­ளையும் சேர்ந்த முக்­கி­யஸ்­தர்­க­ளையும் சந்­திக்­கின்றார்.

அந்த வரி­சையில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகாண சபை உறுப்­பி­னர்கள், உள்­ளூ­ராட்சி மன்ற தலை­வர்கள், மாவட்ட அமைப்­பா­ளர்கள் உட்­பட முஸ்லிம் காங்­கி­ரஸின் உயர்­மட்ட குழு­வையும் அவர் சந்­தித்­தி­ருந்தார். இதன்­போது நாங்கள் அவருக்கு வாழ்த்­துக்கள் தெரி­வித்தோம்.

பின் அவ­ரு­டைய நூறுநாள் வேலைத்­திட்டம் தொடர்­பிலும் அதன் அவ­சியம் பற்­றியும் கலந்­தா­லோ­சித்தோம். மேலும் அந்த நூறுநாள் வேலைத் திட்டம் ஜனா­தி­பதி எதிர்­பார்ப்­பது போல் நிறை­வே­று­மாக இருந்தால், உண்­மை­யி­லேயே நல்­லாட்­சிக்­கான ஒரு களம் அமைந்­து­விடும்.

மற்றும் சமூ­கங்­க­ளுக்­கி­டை­யே­யான பிரச்­சி­னைகள் தீர்ந்­து­விடும். ஓர­ள­விற்கு ஜன­நா­யகம் நிலை­நாட்­டப்­படும் என்றும் அவர் அதீ­த­மாக நம்­பு­கின்றார்.

மற்றும் கிழக்கு மாகாண சபை தொடர்­பிலும் அவர் பேசி­யி­ருந்தார். கிழக்கு மாகாணம் தொடர்பில் கருத்து தெரி­விக்­கையில், முன்­னைய அர­சாங்­கத்­துடன் நாங்கள் ஒப்­பந்தம் செய்­தி­ருந்­த­போது, தற்­போ­தைய ஜனா­தி­ப­தியும் அங்கம் வகித்­தி­ருந்தார்.

எனவே ஒப்­பந்­தத்தை தொடர்ந்து நிறை­வேற்­று­வ­தற்கு தான் ஆத­ரவு தருவேன் என்று அவர் கூறினார். இதற்கு மேல் ஜனா­தி­ப­தி­யிடம் நாங்கள் எந்தவித­மான கோரிக்­கையும் முன்­வைக்­க­வில்லை.

அதேபோல் மஹிந்த ராஜபக் ஷவி­டமும் இந்த தேர்­தலில் நாங்கள் எந்­த­ வி­த­மான புது நிபந்­த­னை­க­ளையும் முன்­வைக்­க­வில்லை. அப்­போது நாங் கள் வைத்த ஒரே ஒரு நிபந்­தனை. இந்த கிழக்கு மாகாண சபை தேர்தலின் ­போது கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றுங்கள் என்­றுதான். இதை­தவிர்த்து நாங்கள் வேறு எந்த நிபந்­தனை­ க­ளையும் முன்­வைக்­க­வில்லை.

கேள்வி: கரை­யோர மாவட்டம் தொடர் பில் எந்தக். கோரிக்­கை­க­ளையும் முன்­வைக்­கப்­போ­வ­தில்லை என்று நீங்கள் தெரி­வித்­துள்­ளீர்கள். எனவே உங்­க­ளது கரை­யோர மாவட்டக் கோரிக்­கையை மீளப் பெற்­று­விட்­டீர்­களா?

பதில்: இந்த நூறு நாள் திட்­டத்தின் பின் தேர்தல் ஒன்று நடத்­தப்­படும். அதன்பின் புதிய அர­சாங்கம் நிறு­வப்­படும். அந்த அரசாங்­கம்தான் எமது கரை­யோர மாவட்டக் கோரிக்கை ­யினை நிறை­வேற்­றக்­கூ­டிய அரசாங் கம்.

இந்த நூறு நாள் வேலைத்­ திட்டம் வெற்­றி­க­ர­மாக நிறை­வேற்­றப்­பட்டால், அதா­வது ஒரு நிறை­வேற்று­ அதிகாரமுள்ள கடும்­போக்­கான ஒரு ஜனா­தி­பதி இல்­லாமல் போவார். அதற்கு பதி­லாக சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள் அந்த இடத்தில் அமைக்­கப்­படும். நீதி­மன்­றங்கள் நிலை­யா­கவும் நீதி­யா­கவும் இயங்கும்.

நாட்டில் மக்கள் நலன்­சார்ந்த புதிய சட்­ட­திட்­டங்கள் உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளன. அப்­ப­டி­யான சூழ்­நி­லையில் இந்த கரை­யோர மாவட்ட விட­யத்தை சிங்­கள மக்கள் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய ஒரு சூழல் தானா­கவே ஏற்படும். நாங்கள் முஸ்லிம்களுக்கு என்று ஒரு தனி மாவ ட்டம் அல்லது தமிழர்களுக்கு என்று ஒரு மாவட்டம் கேட்கவில்லை.

தமிழ்ப் பேசும் மக்­க­ளுக்கு வச­தி­யான சூழ­லையே கேட்­கின்றோம். உதா­ரண­மாக பார்த்தால், அம்­பாறை மாவட்­டத்தில் 76 சத­வீ­த­மான தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்­கின்­றனர். இந்த 76 சதவீத­மா­ன­வர்கள் அனை­வரும் இந்த கரை­யோரப் பிர­தே­சத்­தி­லேயே வாழ்­கின்­றனர்.

ஆனாலும் கச்­சே­ரி­களை முழுக்க முழுக்க சிங்­கள மக்கள் வாழும் பிர­தே­ச­மாக வைத்­துக்­கொண்டு நிர்­வாக நட­வ­டிக்­கை­களை செய்­கின்­றார்கள். அவ்­வா­றி­ருக்­கும்­போது நாங்கள் எவ்வாறு அந்த நிர்வாகத்தில் பங்குகொள்ள முடி யும்.

53 வருடத்திற்கு முன்னரே அம் பாறை மாவட்டம் உருவானது. அன்று முதலே இதுவரை ஒரு தமிழ் அல்லது முஸ்லிம் சமாதான நீதவான் கூட அங்கு நியமிக்கப்படவில்லை. மேலும் தமிழ் தெரியாத ஒரு நபரே அங்கு அனைத்திற்கும் முதலிடம் வழங்குபவ ராக இருப்பார்.

எனவே, அப்படியான ஒரு இரும்புப் பிடிக்குள் அம்பாறை மாவட்டத்தை வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே அதிலிருந்து ஒரு விமோசன த்தை தான் நாங்கள் கேட்கின்றோம்.

Share.
Leave A Reply

Exit mobile version