கன்­னத்தில் முத்தம் கொடுப்­பது தெரியும், நெற்­றியில் முத்தம் கொடுப்­பது தெரியும், உதட்டில் முத்தம் கொடுப்­பது தெரியும். ஆனால், அந்த இடத்தில் கூட முத்தம் கொடுக்­கலாம் என்­பதை ‘ஷமிதாப்’ படம் மூலம் புதி­தாகக் காட்­டி­யி­ருக்­கிறார் இயக்­குநர் பால்கி.

thanushaசில நாட்­க­ளுக்கு முன் ‘ஷமிதாப்’ படத்தின் இரண்­டா­வது டிரைலர் வெளி­யி­டப்­பட்­டது. அந்த டிரை­லரின் கடைசி வினா­டி­களில் படத்தின் நாய­கி­யான அக் ஷராவின் பின்­புறம் தனுஷ் முத்தம் கொடுப்­பது போன்ற காட்சி இருப்­பது அனை­வ­ரையும் அதிர்ச்சிக்குள்­ளாக்­கி­யி­ருக்­கி­றது.

முத்­தத்­திற்கு பெயர் போன கமல்­ஹா­சனின் மகள் அப்­ப­டிப்­பட்ட காட்­சியில் நடிப்­பது தாராள மனம் படைத்­த­துதான், இருந்­தாலும் ஏற்­கெ­னவே சினி­மாவில் இன்­றைய இளை­ஞர்கள் கெட்டுப் போய்க் கொண்­டி­ருக்­கி­றார்கள் என ஒரு பக்கம் குரல் கேட்டுக் கொண்­டி­ருக்க இப்­ப­டிப்­பட்ட ஒரு காட்­சியை படத்தில் எப்­படி வைத்­தார்கள் என்­ப­துதான் கேள்­வி­யாக எழுந்­துள்­ளது.

அதை தணிக்கைத்  துறையும்  அனு­ம­தித்­துள்­ளது பல­ரையும்  ஆச்­ச­ரி­யப்­ப­டுத்தி உள்­ளது.

இந்­திய அளவில் மிகப் பெரும் நட்­சத்­தி­ரங்­க­ளான கமல்­ஹா­சனின் மக­ளான அக் ஷரா ஹாசன், ரஜி­னி­காந்தின் மரு­ம­க­னான தனுஷ் ஆகியோர் அந்தக் காட்­சியில் நடித்­தி­ருப்­பது இங்கும் அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இயக்­கு­ன­ரிடம் கேட்டால், அது ஒரு யதார்த்­த­மான காட்சி, வேண்­டு­மென்றே திணிக்­கப்­ப­ட­வில்லை என்­றுதான் நியாயம் கற்­பித்­துள்ளார்.

ஆனால், குறைந்த பட்ச சமூக அக்­கறை கூட இல்­லாமல் இப்­படி ஒரு காட்சி இருக்க வேண்டிய அவசியம் என்ன? இந்திய சினிமா எங்கோ போய்க் கொண்டிருக்கிறது? என்று சில சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முன்­னணி நடி­கை­யாகும் நம்­பிக்­கை­யுடன் பூனம் கவுர்

03-02-2014

தமிழ், தெலுங்கு, கன்­னடம், மலை­யாளம் என அனைத்து தென்­னிந்­திய மொழி­க­ளிலும் நடித்து, சிறந்த நடிகை என பெயர் பெற்­றுள்ள பூனம் கவுர், இன்னும் நடிப்பில் உய­ரத்தை எட்ட வேண்டும் என்ற முனைப்­புடன் செயல்­பட்டு வரு­கிறார். ‘என் விழி மான் விழி’ தற்­போது படத்தில் நடித்­து­வரும் பூனம் கவு­ரு­ட­னான நேர்­காணல்.

சினி­மாவில் நுழைந்­தது எப்­படி?

நான் பிறந்து, வளர்ந்து, படித்­தது எல்லாம் ஹைத­ரா­பாத்­தில்தான். +2 முடித்­த­வுடன் ‘பாஷன் டிசைனிங்’ படித்தேன். அப்­போது, தெலுங்கு இயக்­குநர் தேஜா இயக்­கிய “ஒக்க விசித்­திரம்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்­தது.

அந்தப் படத்தில் நடித்துக் கொண்­டி­ருக்கும் போதே இயக்­குநர் எஸ்.வி.ரெட்டி இயக்­கத்தில் “மாயா­ஜாலம்’ என்ற படத்­திலும் நடித்தேன். “மாயா­ஜாலம்’தான் முதலில் வெளி­வந்த படம். அதன்பின், “நிக்கி அண்டே நீரஜா’, “ககணம்’ போன்ற தெலுங்குப் படங்­களில் நடித்தேன்.

தமிழில் எப்­படி வாய்ப்பு கிடைத்­தது?

இயக்­குநர் எஸ்.ஏ. சந்­தி­ர­சேகர், நான் நடித்த தெலுங்குப் படங்­களைப் பார்த்­து­விட்டு, “நெஞ்­சி­ருக்கும் வரை’ படத்தில் கதா­நா­ய­கி­யாக அறி­முகம் செய்தார்.

அதற்குப் பின், கமல்­ஹா­சனின் “உன்னைப் போல் ஒருவன்’, “பயணம்’, “வெடி’, “6 மெழு­கு­வர்த்­திகள்’, “ரணம்’ ஆகிய படங்­களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்­தது.

இத்­தனை மொழி­களில் நடித்­தாலும் ஹீரோ­யி­னாக புகழ் பெற­வில்­லையே?

அதுதான் எனக்கும் புரி­யாத புதி­ரா­கவே உள்­ளது. அதற்குக் காரணம் ஒரு­வேளை எனக்கு சினிமா பின்­புலம் இல்­லாமல் இருப்­பதால் கூட இருக்­கலாம். அல்­லது, சரி­யான வழி­காட்­டுதல் இல்­லா­ததால் இருக்­கலாம். ஆனால், காலம் தாழ்த்­தி­னாலும் ஒரு நல்ல நடி­கைக்­குண்­டான இடத்தை நிச்­சயம் தக்க வைத்துக் கொள்வேன் என்ற நம்­பிக்கை எனக்குள் இருக்­கி­றது.

தற்­போது தமிழில் நடித்து வரும் படங்கள் எவை?

தமிழில் “அச்­சாரம்’, “வதம்’, “என் வழி தனி வழி’, “வேட்டை மன்னன்’ போன்ற படங்­களில் நடித்து வரு­கிறேன். இதில் “என் வழி தனி வழி’ விரை வில் வெளி­வ­ர­வுள்­ளது.

Share.
Leave A Reply

Exit mobile version