வவுனியா நோக்கி பயணித்த ரயிலுடன் கெப் வாகனம் மோதியதில் நால்வர் பலி. ராகமை பட்டுவத்த ரயில் கடவையில் சம்பவம்
ராகமை பட்டுவத்த ரயில் கடவையில் ரயிலு டன் கெப் வண்டியொன்று மோதி நால்வர் உயிரிழந் ததுடன் இருவர் படுகாய மடைந்தனர்.
கெப் வண்டியில் பய ணம் செய்த ஒரே குடும் பத்தைச் சேர்ந்த மூன்று ஆண்களும் ஒரு பெண் ணும் இவ்விபத்தில் உயி ரிழந்திருப்பதாக பொலி ஸார் கூறினார். இச்சம்பவம் நண்பகல் 2.20 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரினதும் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
விபத்தினைத் தொடர்ந்து குறித்த கெப் வண்டி கம்பில இடத்திலிருந்து அகற்றப் பட்ட பின்னர் ரயில் சேவை வழமைபோல வவுனியா நோக்கி நடத்தப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரி வித்தது. கெப் வண்டி மற்றும் அதில் பயணம் செய்தவர்கள் பற்றிய தகவல்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் ஆர்.தர்மசிறி (52), ஆர். அஞ்சலி பிரபுதி (22), ஆர்.லஹிரு சாலிந்த (15), ஆர். ஹர்ஷ தரிந்து (20) ஆகிய நால்வருமே உயிரிழந்துள்ளனர். துஷாரிக்கா சில்வா (41), தருஷி சந்தமினி (11) ஆகியோர் ராகமை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
செய்திகள் தமிழில்