தைவான் நாட்டின் தலைவர் தைபெய்யில் ட்ரான்ஸ் ஏசியா நிறுவன விமானம் ஒன்று பாலத்தின் மீது மோதி, ஆற்றுக்குள் விழுந்தது. இதில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த விமானம் விபத்திற்குள்ளானபோது, 58 பேர் அதில் பயணம் செய்தனர். கீலங் என்ற ஆற்றுக்குள் விழுந்த இந்த விமானம், தற்போது பாதி மூழ்கிய நிலையில் ஆற்றுக்குள் கிடக்கிறது.

மீட்புப் படையினர் விமானத்தின் சில பகுதிகளை வெட்டியெடுத்து, விமானத்திற்குள் இன்னமும் சிக்கியிருப்பவர்களை மீட்டு வருகின்றனர்.

150204071344_taiwan-ap__640x360_ap_nocredit

16 பேர் காயமடைந்திருப்பதாக, தைபெய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேறு முப்பது பேருக்கு என்ன ஆனது என்பது இன்னமும் தெளிவாகவில்லை.

இந்த ஏடிஆர் – 72 ரக விமானம், கின்மென் தீவுகளுக்குச் செல்வதற்காக தைபெய்யின் சாங்ஷான் விமான நிலையத்திலிருந்து அப்போதுதான் புறப்பட்டிருந்தது.

உள்ளூர் நேரப்படி காலை 10.55 மணியளவில் விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

விமானம் கீழே விழும்போது, அந்த வழியாகச் சென்ற கார்களுக்குள் இருந்தவர்கள் எடுத்த வீடியோ காட்சிகள் இப்போது வெளியாகியிருக்கின்றன. இதில் அந்த விமானம் மிக வேகமாக கீழேவிழுந்து, ஒரு காரின் மீது மோதி, பின் பாலத்தில் மோதி, அதற்குப் பிறகு ஆற்றுக்குள் விழுகிறது.

நொறுங்கி விழுந்த விமானத்தின் பாகங்களில் நின்றபடி, மீட்புப்படையினர் விமானத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் காட்சிகள் தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டுவருகின்றன. ஒரு சிறுவன் உட்பட பலர் இதிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

விமானத்தில் இருந்த 58 பேரில் 53 பேர் பயணிகள் என்றும் மீதமிருப்பவர்கள் பணியாளர்கள் என்றும் நம்பப்படுகிறது. இதில் 31 பேர் சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள்.

கடந்த ஆண்டு ஜூலையில், ட்ரான்ஸ் ஏசியாவின் விமானம் ஒன்று, மோசமான வானிலையின் போது, தைவானின் பெங்கு தீவுக் கூட்டத்தின் மீது விழுந்து நொறுங்கியது. இதில் 48 பேர் கொல்லப்பட்டனர். விமான ஓட்டியின் தவறே இந்த விபத்திற்குக் காரணம் என தைவான் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version