கட்டாரில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண் அமேந்திராவின் பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஊயழிர்கள் குழுவொன்று தோஹாவில் உள்ள பாலைவனம் ஒன்றில் சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கடந்த டிசெம்பர் மாதம் 12ஆம் திகதி அத்துருகிரிய, ஹோகந்தரவில் இடம்பெற்ற விமான விபத்தில் பலியான விமானியின் மனைவியே, இந்த விபத்தில் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பிட்ட விபத்தில் இறந்த அமேந்திரா சென்ற மாதம் 30 ஆம் திகதி உட்பட கட்டார் – இலங்கை பயணிக்கும் UL 218 விமானத்தில் விமானப்பணிப் பெண்ணாக கடமை புரிந்து வந்த நிலையிலேயே குறிப்பிட்ட விமானத்தில் அவரின் சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ammendra-www.nethfm.com-01

Share.
Leave A Reply

Exit mobile version