வவுனியாவில் ரோந்து சென்ற சிறிலங்கா காவல்துறையினர் மீது இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா, பெரிய உலுக்குளம் பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டில், காலிலும், கையிலும் காயமடைந்த சிறிலங்கா காவல்துறை அதிகாரி, வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 police-injured2

இந்தச் சம்பவம் தொடர்பாக செட்டிக்குளம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version