மூன்று பேரின் உயிர்க்கலங்களைக் கொண்டு உலகின் முதல் குழந்தையை உருவாக்கும் பரிசோதனைக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. மரபணு மருத்துவ விஞ்ஞானிகள் இதை வரவேற்றிருக்கிறார்கள். மதத்தலைவர்கள் எதிர்க்கிறார்கள்.
மனித செல்கள் ஒவ்வொன்றிலும் ஒரு நியூக்ளியஸும் பல மைடோகாண்ட்ரியாக்களும் இருக்கும். நியூக்ளியஸ் என்பது செல்களின் மையக்கரு என்றால், இந்த மைடோகாண்டிரியாக்கள் எனப்படுபவை செல்களுக்குத் தேவைப்படும் சக்தியை உற்பத்தி செய்யும் பேட்டரிகளைப் போன்றவை. செல்களுக்குத் தேவைப்படும் சக்தியை அளிப்பது தான் இவற்றின் முதன்மையான பணி.
மனித செல்களில் இருக்கும் இந்த மைடோகாண்ட்ரியாக்கள் பெண்களின் கருமுட்டைகளிலும் இருக்கும். செல்களில் இருப்பதைப்போலவே ஒவ்வொரு கருமுட்டையிலும் ஒரு நியூக்ளியஸும் பல மைடோகாண்ட்ரியாக்களும் இருக்கும்.
சிலபெண்களின் கருமுட்டைகளில் இருக்கும் மைடோகாண்ட்ரியாக்கள் பாதிப்படைந்திருக்கும். இப்படி பாதிப்படைந்த மைடோகாண்ட்ரியாக்கள் இருக்கும் கருமுட்டையில் இருந்து உருவாகும் குழந்தைகளின் செல்களில் இருக்கும் மைடோகாண்ட்ரியாக்களும் பாதிக்கப்பட்டிருக்கும். அது அந்த குழந்தைகளின் உயிரையே பறிக்கும் அளவுக்கு மோசமான மரபணு நோய்களை உண்டாக்கும்.
இயற்கையின் இந்த மோசமான சிக்கலுக்கு மருத்துவ விஞ்ஞானிகள் ஒரு தீர்வைக் கண்டிருக்கிறார்கள். இந்த மரபணு மருத்துவ தீர்வு பல கட்டங்களில் நடக்கிறது.
இதன் முதல்கட்டம் பாதிக்கப்பட்ட பெண்களின் கருமுட்டையில் இருக்கும் சேதமடைந்த மைடோகாண்ட்ரியாக்களை அகற்றிவிடுவது.
அந்த கருமுட்டையில் இருக்கும் நியூக்ளியஸ் மட்டும் அப்படியே இருக்கும். அடுத்து, வேறொரு பெண்ணின் கருமுட்டையில் இருந்து பாதிக்கப்படாத ஆரோக்கியமான மைடோ காண்ட்ரியாக்களை மட்டும் தனியாக பிரித்து எடுப்பது.
இப்படி பிரித்தெடுக்கப்பட்ட ஆரோக்கியமான மைடோகாண்ட்ரியாக்களை, முதல் பெண்ணின் கருமுட்டைக்குள் செலுத்துவது மூன்றாவது கட்டம்.
இதன் நான்காவது கட்டம் என்பது, இப்படி ஒரு பெண்ணின் நியூக்ளியஸையும், மற்ற பெண்ணின் மைடோகாண்ட்ரியாக்களையும் தன்னுள் கொண்டிருக்கும் இந்த கருமுட்டைக்குள் விந்தணுவை சேர்த்து கருவுறச்செய்வது.
இந்த நடைமுறையையே கொஞ்சம் மாற்றி, மைடோகாண்ட்ரியாக்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் கருமுட்டையில் இருக்கும் நியூக்ளியஸை மட்டும் தனியாக பிரித்து எடுத்து, ஆரோக்கியமான மைடோகாண்ட்ரியாக்களை கொண்டிருக்கும் பெண்ணின் கருமுட்டைக்குள் இருக்கும் நியூக்ளியஸை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்த முதல் பெண்ணின் நியூக்ளியஸை பதியவைத்து அந்த கருமுட்டையை கருவுறச்செய்யும் நடைமுறையும் செய்யப்படுகிறது.
இப்படி இரண்டுவிதமாக செய்யப்படும் நடைமுறையின் மூலம் ஆரோக்கியமான குழந்தையை பிறக்கவைக்க முடியும் என்பதை விஞ்ஞானிகள் சோதனைச் சாவடியில் விலங்குகளைக் கொண்டு செய்துகாட்டியிருக்கிறார்கள். இதன் அடுத்தகட்டமாக மனிதர்கள் மத்தியில் இந்த பரிசோதனைகளை நடத்த உலக நாடுகளின் அரசுகள் எவையும் இதுவரை அனுமதியளிக்கவில்லை.
அப்படியான சட்டரீதியிலான அனுமதியை பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை அளித்திருக்கிறது.
இந்த விஞ்ஞான முயற்சியின் முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார் சென்னையில் இருக்கும் செட்டிநாடு மருத்துவமனையின் இனப்பெருக்கத்துறையின் தலைமை மருத்துவர் என் பாண்டியன்.
மைட்டகொண்ட்ரியா நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பிறந்து மோசமாக பாதிக்கப்படுவதை தடுக்கும் நோக்கிலான இந்த மருத்துவ முயற்சி வரவேற்கத்தக்கது என்கிறார் பாண்டியன்.
இந்த நடைமுறையை மூன்று பெற்றோருக்கான குழந்தை என்பதாக இதை சொல்வதே தவறு என்று கூறும் பாண்டியன், இதில் ஆரோக்கியமான மைடோகாண்ட்ரியாக்களை கொடுப்பவரின் குழந்தையாக இதை கருத முடியாது என்றும் கூறினார்.
சாதாரணமாக ரத்த தானம் செய்வதைப் போலத்தான் இவர் மைடோகாண்ட்ரியாக்களை தானம் செய்கிறார் என்றும், எனவே பிறக்கும் குழந்தையானது அவரது மரபணுக்கூறுகளை கொண்டிருக்காது என்றும் பாண்டியன் தெரிவித்தார்.
இந்த குழந்தையின் தோற்றம் உள்ளிட்ட அனைத்துவகையான மரபணுக்கூறுகள் அனைத்துமே அதனது கருமுட்டையின் நியூக்ளியசை கொடுத்த உண்மையான தாய் மற்றும் அதை கருவுறக்காரணமான விந்தணுவைக் கொடுத்த தந்தையிடம் இருந்து மாத்திரமே வருவதால் இந்த குழந்தைக்கு மூன்று பேர் பெற்றோர் என்பது தவறான கருத்து என்றும் பாண்டியன் கூறினார்.
MPs vote in favour of ‘three-person embryo’ law
MPs have voted in favour of making Britain the first country in the world to permit IVF babies to be created using biological material from three different people to help prevent serious genetic diseases.
In a historic debate, the House of Commons voted by 382 to 128 – a majority of 254 – to allow mitochondrial donation through a controversial amendment to the 2008 Human Fertilisation and Embryology Act. They approved the regulation in spite of some critics warning it was a step towards creating “three-parent” designer babies.
The regulations will now have to be approved in the House of Lords, where they are likely to be passed.
MPs were allowed a free vote on the issue of conscience but both the Conservative and Labour front benches made it clear they believed it was an important scientific step forwards that did not amount to genetic modification.
Jane Ellison, the Conservative public health minister, told MPs the techniques provided in the regulations offered the only hope for some women who carried the disease to have “healthy, genetically-related children” who would not suffer from the “devastating and often fatal consequences” of mitochondrial disease. She said mitochondrial DNA made up 0.054% of a person’s overall DNA and none of the nuclear DNA that determined personal characteristics and traits.
Critics of the motion had been given hope of defeating it after the Church of England and the Catholic Church in England and Wales said it was not yet clear that the technique was safe or ethical.
Opposition was led by Conservative MP Fiona Bruce, who said parliament needed more time to debate the issues.
“I believe the regulations before us today fail on both counts, ethics and safety, and they are inextricably interlinked,” she said. “One of these procedures we are asked to approve today, pronuclear transfer, involves the deliberate creation and destruction of at least two human embryos, and probably in practice many more, in order to create a third embryo which it is hoped will be free from human mitochondrial disease.
“Are we happy to sacrifice two early human lives to make a third?”
Several other MPs objected to the shortness of the 90-minute period for debate, saying a subject of such ethical controversy should be given more time for consideration. However, the minister said mitochondrial donation had been subject to extensive scrutiny for years and it was now time for MPs to vote.
Advertisement
Andrew Miller, the Labour chairman of the science and technology committee, urged his colleagues to back the “overwhelming interest” of those families who have suffered from mitochondrial disease.
“I put it to this house that the benefits to those – about 2,500 families – affected by mitochondrial disease up and down this nation, they deserve the support of this house because of the potential benefits,” he said. “Yes, of course, we’ve got to assess the risks as we do with all risks but they’ve got to be done in a rational and balanced way.”
Mitochondrial diseases are caused by genetic faults in the DNA of tiny structures that provide power for the body’s cells. The DNA is held separately to the 20,000 genes that influence a person’s identity, such as their looks and personality. Because mothers alone pass mitochondria on to children, the diseases are only passed down the maternal line.
Around 40 scientists from 14 countries have urged the British legislature to approve laws allowing mitochondrial DNA transfer.
The “three parent” IVF therapy, which could help to eliminate certain incurable genetic diseases, involves swapping a fraction of a mother’s DNA with that from an anonymous female donor.
Around 100 children each year are affected by genetic defects in the mitochondria and in around 10 cases the defects cause severe illnesses such as liver failure, muscle wasting, blindness and brain damage.
The mitochondria sit outside the nucleus of cells and contain tiny quantities of DNA. Mitochondrial genes provide the cells’ energy, rather than conferring inherited traits such as appearance, intelligence or personality, and are sometimes referred to as cellular “batteries”.
The mitochondria are passed down the maternal line, meaning that any mutations are guaranteed to be passed on to the next generation.
However, scientists will now legally be able to prevent this happening by taking two eggs, one from the mother and another from a donor. The nucleus of the donor egg is removed, leaving the rest of the egg contents, including the mitochondria, and this is replaced with the nucleus from the mother’s egg. This can be carried out either before or after the egg is fertilised with sperm.
Technically the baby would have three biological parents, with 99.8% of genetic material coming from the mother and father and 0.2% coming from the mitochondrial donor.
Dr Jeremy Farrar, director of the Wellcome Trust, said: “Families who know what it is like to care for a child with a devastating disease are best placed to decide whether mitochondrial donation is the right option for them. We welcome this vote to give them that choice, and we hope that the House of Lords reaches a similar conclusion so that this procedure can be licensed under the UK’s internationally-admired regulatory system.”
Prof Alison Murdoch, head of Newcastle Fertility Centre at Life, which has pioneered the IVF technique, said: “This is good news for progressive medicine. In a challenging moral field, it has taken scientific advances into the clinic to meet a great clinical need and Britain has showed the world how it should be done.”r