நாட்டின் முழு வரி வருமானத்தையும் மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ, கோதபாய ராஜபக்ஷ என ஒரு குடும்பமே நிர்வகித்தது என்பதைக் குறிப்பிட்ட அமைச்சர் உலகில் இந்தளவு மோசமான நிர்வாகம் வேறெந்த நாட்டிலும் இருந்ததில்லை என்றும் தெரிவித்தார்.

வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் 2000 முறைப்பாடுகள் அரசாங்கத்துக்குக் கிடைத்துள்ளன. இது தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

கடந்த ஐந்து வருட காலத்தில் எந்த சட்ட திட்டங்களும் மதிக்கப்படாமல் ஊழல் மோசடிகள் பெருமளவில் இடம்பெற்றுள்ளன. நாட்டின் தேசிய வருமானத்தில் பெருமளவு பகுதியை ராஜபக்ஷ குடும்பமே நிர்வகித்துள்ளது.

எமது ஏற்றுமதித்துறை பாரிய பின்னடைவை அடைந்துள்ளது. மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்படாமல் வரிச் சுமைகள் மக்கள் மீதே சுமத்தப்பட்டன.

வெளிநாட்டு கையிருப்பு தொடர்பில் தொடர்ந்தும் மக்களுக்கு பொய்யே கூறப்பட்டு வந்துள்ளது. மத்திய வங்கி அறிக்கைகளும் திரிபுபடுத்தியே வெளி யிடப்பட்டுள்ளன.

கடன்பெற்ற பணமே வெளிநாட்டுக் கையிருப்பு என காட்டப் பட்டது. 100 ற்கு 8 வீதமான பொருளாதார அபிவிருத்தி எனக் காட்டுவதற்காக சரியான புள்ளி விபரங்கள் திரிபு படுத்தப்பட்டதையும் குறிப்பிட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மஹிந்த பாவித்த வாகனங்களின் எண்ணிக்கையை தெரிந்துகொள்ள மைவெளிச்சம் பார்க்கவேண்டும் சபையில் பிரதமர் ரணில் பரிகாசம்

07-02-2014

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ பாவித்த வாக­னங்­களின் எண்­ணிக்­கையை தெரிந்து கொள்ள வேண்­டு­மென்றால் சும­ண ­தா­ஸ­விடம் சாஸ்­திரம் கேட்க வேண்டும். அத்­தோடு மைவெ­ளிச்சம் பார்க்க வேண்­டிய

நிலையும் ஏற்­ப­டு­மென்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று சபையில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை நிலை­யியற் கட்­டளை 23இன் கீழ் இரண்டின் விசேட உரை­யொன்றை ஆற்றினார்.

இதன்­போது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ பாவித்த வாக­னங்கள் இன்று நாட்டின் பல்­வேறு பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து தினம் தினம் கண்­டு­பி­டிக்­கப்­ப­டு­கின்­றன.

ஜனா­தி­பதி மாளி­கைக்கு முன்­பாக பெருந்­தொ­கை­யான வாக­னங்கள் நிறுத்­தப்­பட்­டுள்­ளன. பாரா­ளு­மன்­றத்தின் அரு­கி­லுள்ள பாதை­யோ­ரத்­திலும் வாக­னங்கள் நிறுத்­தப்­பட்­டுள்­ளன.

அது மட்­டு­மல்­லாமல் வீடு­களில் பல்­வேறு வாகனத் தரிப்­பி­டங்­க­ளிலும் முன்னாள் ஜனா­தி­பதி பாவித்த வாக­னங்கள் கண்டுபிடிக்­கப்­ப­டு­கின்­றன.

டிபென்டர் வாக­னங்கள் உட்­பட பெறு­ம­தி­மிக்க வாக­னங்கள் கண்­டு­பி­டிக்­கப்­ப­டு­கின்­றன. சில வாக­னங்கள் பழு­த­டைந்­துள்­ளன. இவ் வாக­னங்கள் முன்னாள் ஜனா­தி­ப­தியின் சொந்த பணத்தில் கொள்­வ­னவு செய்­யப்­பட்­ட­வை­யல்ல.

மக்கள் மீது வரி­களை சுமத்தி அதன் மூலம் பெறப்­பட்ட பணத்­தி­லேயே இவ்­வா­க­னங்கள் கொள்­வ­னவு செய்­யப்­பட்­டன.

எனவே நாம் மக்­க­ளுக்கு பதில் கூற கட­மைப்­பட்­டுள்ளோம். எனவே ஜனா­தி­பதி பாவித்த வாக­னங்­களின் தொகை எவ்­வ­ளவு? அவ்­வா­க­னங்கள் யார் யாருக்கு எதற்­காக வழங்­கப்­பட்­டது?

இவை தொடர்­பாக பதி­வுகள் உள்­ளதா என்­பது தொடர்பில் பிர­தமரின் பதிலை எதிர்­பார்க்­கின்றேன் என்றும் அனுர திஸாநாயக்க எம்.பி. தெரி­வித்தார்.

இதற்கு பதி­ல­ளித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நீங்கள் கேட்ட கேள்­வி­க­ளுக்கு பதில் வழங்­கு­வ­தற்கு எம்­மிடம் எது­வி­த­மான தர­வு­களும் இல்லை. ஜனா­தி­பதி எத்­தனை வாக­னங்­களை பாவித்தார் ? வாக­னங்கள் யார் யாருக்கு வழங்­கப்­பட்­டது? எங்கு நிறுத்­தப்­பட்­டுள்­ளது என்­பது தொடர்பில் எவ்­வி­த­மான தக­வல்­களும் இல்லை.

ஜனா­தி­ப­தி­யிடம் லம்­போ­கினி கார்கள், ?????? கார்கள் எத்­தனை இருந்­தது என்­பதும் தெரி­ய­வில்லை.

கம்­ப­னி­க­ளி­ட­மி­ருந்து கொள்­வ­னவு செய்­யப்­பட்ட வாக­னங்­களின் தொகை எவ்­வ­ளவு என்­பதும் தெரி­யாது. 100, 1000, ஒரு இலட்சம் வாக­னங்கள் பாவிக்­கப்­பட்­டதா என்­பதும் கேள்­விக்­கு­றி­யா­கவே உள்­ளது.

இவ் வாக­னங்கள் தொடர்­பாக எவ்­வி­த­மான பதி­வே­டு­களும் இல்லை. எனவே இவை தொடர்­பாக எதிர்­கா­லத்தில் விசாரணைகள் நடத்தப்படும். தேவையெனில் பாராளுமன்றத்தில் நாமனைவரும் இணைந்து இது தொடர்பாக ஆராய வேண்டும்.

இல்லாவிட்டால் சுமணதாஸவை அழைத்து சாஸ்திரம் கேட்க வேண்டும். அவராலும் முடியா விட்டால் மைவெளிச்சம் தான் பார்க்க வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

அரியநேத்திரன் எம்.பியிடம் ரூ.50 மில். நஷ்டஈடு கோரி கடிதம்

arijenthiran

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பி. அரியநேத்திரனிடம் இருந்து 50 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி சட்டத்தரணி யினூடாக கோரிக்கை கடிதம் அனுப்பி யுள்ளதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே எம்.பி. நேற்று பாராளும ன்றத்தில் தெரிவித்தார்.

சிறப்புரிமை மீறல் பிரச்சினை யொன்றை முன்வைத்து உரையாற்றிய அவர், எமது அரசாங்கத்துடன் இணைந்தால் 50 கோடி ரூபா தருவதாக நான் கூறிய தாக, அரியநேத் திரன் எம்.பி. ஊடகங் களுக்கு தெரிவித்துள் ளார்.

இவருடன் நான் ஒருபோதும் பேசியது கிடையாது. ஆனால் பாராளுமன்றத்தில் நேரில் கண்ட போது சிரித்திருக்கிறேன். எனக் கெதிராக பொய்க் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. என்னை கைது செய்வதற்காகவே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அண்மையில் திஸ்ஸ அத்தநாய க்கவையும் இவ்வாறு கைது செய்தனர்.

ஒரு வருடத்துக்கு முன்னர் தாம் கண்ட கனவைத் தான் அவர் இப்படி கூறியிருக்கிறார் என்றார். இதனை சபாநாயகரின் கவனத்திற் கொண்டு வருவதாக குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்ரகுமார் தெரிவித்தார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version