தூத்துக்குடி: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள பணத்தை மாலையாக அறிவித்துள்ளார் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜோயல்.

மதிமுகவின் 23வது மாநில பொதுக்குழு கூட்டம் தூத்துக்குடியில் கடந்த 1ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் ஜோயல் மிக பிரமாண்டமாக செய்திருந்தார். சாலைகளில், பேனர்கள், கட்அவுட்டுகள் என வைத்து அசத்தினார்.

கூட்டத்திற்கு வந்த வைகோவை அதிரவைக்கும் விதமாக ஜோயல், ஐந்து லட்சம் மதிப்புள்ள 100 ரூபாய் நோட்டை மாலையாக செய்து அவருக்கு அணிவித்துள்ளார்.

vaiko 20curancy 201ஜோயல் மீது வைகோவுக்கு எப்போதும் தனி மதிப்பு உண்டு. உடன்குடி அருகே உள்ள லெட்சுமிபுரத்தை சேர்ந்த ஜோயல் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார்.

கடந்த 15 ஆண்டு காலமாக மாவட்ட செயலாளராக இருக்கும் இவர், தென் மாவட்டங்களில் கட்சியை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார். வைகோ தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தால் அவருக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்து அசத்தும் ஜோயல் தற்போது, பண மாலையால் வைகோவை பிரமிக்க வைத்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version