யாழ்.எழுவைதீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவரின் படகை மோதி, அந்த மீனவர் உயிரிழக்க காரணமாகவிருந்தார்கள் என்ற சந்தேகத்தில் 8 கடற்படையினரை புதன்கிழமை (11) கைது செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி கியூ.ஆர்.பெரேரா தெரிவித்தார்.

கடந்த டிசெம்பர் மாதம் 18ஆம் திகதி இரவு, எழுவைதீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர் ஒருவரின் படகு மீது, கடற்படையின் டோறா ரக படகொன்று மோதியதில் மீனவரின் படகு சேதமடைந்தது.

அத்துடன், சம்பவத்தில் படுகாயமடைந்த எழுவைதீவு 4ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அன்ரனி யேசுதாஸ் (வயது 60) என்ற மீனவர், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பில் மீனவரின் உறவினர்கள் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு, காரைநகர் கடற்படை முகாமைச் சேர்ந்த 8 கடற்படையினரை கைது செய்ததாக பொறுப்பதிகாரி கூறினார்.

யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள் மீது முறைப்பாடு

11-02-2014
யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள் இருவர் பாடசாலை பொருட்களை சேதப்படுத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்றையதினம் உயர்தர வகுப்பில் கற்கும் மாணவர்கள் இருவருக்கு எதிராகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருவரும் பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வரும் இந்த நேரத்தில் அதிபருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் பிரகாரம் இரு மாணவர்களும் பஸ், முச்சக்கரவண்டி உட்பட பூச்சாடிகளையும் உடைத்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியானவற்றினை சேதப்படுத்தியுள்ளதாக பாடசாலை அதிபர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த வருடமும் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version