இஸ்லாம் இந்தியாவை அழித்தொழிப்பதற்கு முன்னால் இருந்த இந்தியா குறித்து நாம் அறிந்து கொள்வதுவும் இங்கு அவசியமாகிறது. எனவே, அது குறித்துச் சுருக்கமாக சிறிது காணலாம்.
இந்தியாவின் மீதான இஸ்லாமிய ஆக்கிரமிப்பிற்கு முன்னால் பல சாதனைகள் புரிந்த உலகின் மிகப்பெரும் நாகரீக சமுதாயமாக இந்தியா இருந்தது என்பதற்கு மாற்றுக் கருத்துக்கள் இல்லை.
அறிவியலிலும், கணிதத்திலும், இலக்கியத்திலும், தத்துவத்திலும், மருத்துவத்திலும், வான சாஸ்திரத்திலும், கட்டிடக்கலையிலும் இன்ன பிற தொழில் நுட்பங்களிலும் உலகின் வேறெந்த கலாச்சாரங்களை விடவும் இந்தியர்கள் மிக உயர்வானதொரு நிலையை எட்டியிருந்தனர்.
இந்திய கணிதவியலாளர்கள் சைபரின் (Zero) அவசியத்தைக் கண்டறிந்ததுடன், அல்ஜீப்ராவின் அடிப்படைகளையும் உலகிற்கு அளித்தவர்கள்.
இந்திய கல்வியின் உயரிய நிலையை அறிந்திருந்த பாரசீக அப்பாஸித் கலிஃபாக்கள், தங்களின் நாடுகளிலிருந்து கல்வியாளர்களையும், வியாபாரிகளையும் இந்தியாவிற்கு அனுப்பி வைத்து, அவர்களை இந்தியர்களிடமிருந்து கல்வி கற்று வரும்படி ஊக்குவித்தவர்களாக இருந்தார்கள்.
இதனைக் குறித்து எழுதும் ஜவஹர்லால் நேரு, “பாரசீக மற்றும் அரேபிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மருத்துவம், கணிதம் போன்றவற்றை மிகப்பெருமளவில் இந்தியர்களிடமிருந்து கற்றார்கள்.
பெருமளவிளான இந்திய கணித வல்லுனர்களும், கல்வியாளர்களும் கற்பிக்கும் நோக்குடன் பாக்தாத் போன்ற நகரங்களுக்குச் சென்றார்கள்.
வட இந்தியாவின் தக்ஷசீலத்தி அமைந்திருந்த மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயில பெருமளவிலான அராபியர்கள் வந்தார்கள்” என்கிறார்.
770-ஆம் வருடம் இந்தியாவைச் சேர்ந்த ஒரு மிகப் பெரும் கணித அறிஞர் பாக்தாதிற்கு இரண்டு பெரும் கணிதக் கண்டுபிடிப்புகளைக் கொண்டு சென்றார்.
முதாலவது, ஏழாவது நூற்றாண்டில் இந்தியாவின் மிகப்பெரும் கணித மேதைகளில் ஒருவரான பிரம்மகுப்தர் கண்டுபிடித்த கணித அறிவியலான ப்ரஹ்மசித்தாந்தா (இன்றைக்கும் அரேபியர்களால் அறியப்படும் சிந்த்ஹிந்த்). ப்ரஹ்மசித்தாந்தா இன்றைய அல்ஜீப்ராவின் ஆரம்பகால சூத்திரங்களை உடையது.
இன்றைக்கு க்வாரிஸிமி அல்ஜீப்ராவின் தந்தையாக அறியப்படுகிறார். ஆனால் அதன் அடிப்படை இந்திய முறைகளை உடையது என்பது அதிகம் அறியப்படவில்லை. அல்ஜீப்ரா முதன் முதலில் இந்திய எண்களின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டது.
எண்களைப் பிரித்தறியும் முறை, பூஜ்யத்தின் உபயோகம் ஆகியவை பற்றிய தகவல்களுடன் கூடிய இரண்டாவது நூலும் மேற்கூறிய கணித அறிஞருடன் பாக்தாதிதிற்குச் சென்றது.
அதுவரையிலும் உலகம் அந்தக் கணிதமுறைகளைக் குறித்து அறிந்திருக்கவில்லை. அதனை இஸ்லாமிய கல்வியாளர்கள் உபயோகிக்கக் கற்றுக் கொண்டனர்.
பிற்காலத்தில் இஸ்லாமியர்கள் தாங்களே இந்தக் கணிதமுறைகளைக் கண்டறிந்ததாக உலகிற்கு அறிவித்துக் கொண்டனர். ஆனால் அதில் சிறிதளவும் உண்மையில்லை.
இஸ்லாமிய ஆக்கிரமிப்பிற்கு முந்தையை இந்தியா அற்புதமான சிற்பிகளையும், கட்டிடக்கலை வல்லுனர்களையும் கொண்டதாக இருந்தது.
சிற்பங்கள் நிறைந்த அழகு நிறைந்த மாட, மாளிகைகள் அவர்களால் நிர்மாணிக்கப்பட்டன. இஸ்லாமியர்கள் கொண்டுவந்த கட்டிட முறைகளையும் இணைத்துக் கொண்ட இந்தியர்கள் பிற்காலத்தில் இந்தோ-இஸ்லாமிக் கட்டிட பாணியைத் தங்களுடையதாக ஆக்கிக் கொண்டனர். ஆனால் இஸ்லாமியர்கள் அதனையும் தங்களுடைய “கண்டுபிடிப்பாக”க் கூறிக்கொண்டனர்.
Al-birunis-india-book அல்-புரூனி அவருடைய புகழ்பெற்ற படைப்பான “கிதப் ஏ ஹிந்த்” என்ற நூலில் பழம்பெரும் இந்திய கலாச்சாரத்தின் சாதனைகளைப் பட்டியலிட்டிருக்கிறார்.
அந்த நூல் 1030-ஆம் வருடம் அராபிய மொழியில் எழுதப் பட்டது. அராபிய ஆராய்ச்சியாளரான எட்வர்ட் சச்சவு (Edward Sachau) அல்-புரூனியின் இண்டிகாவை 1880-ஆம் வருடம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
அந்தப் புத்தகம் 1910-ஆம் வருடம் “Alberuni’s India” என்னும் பெயரில் வெளியானது. சச்சவு, “அல்-புரூனியைப் பொறுத்தவரையில் இந்துக்கள் அற்புதமான தத்துவவாதிகள்; கணிதத்திலும், வான சாஸ்திரத்திலும் சிறந்தவர்கள்” என விளக்குகிறார்.
கணிதத்தில் இந்தியர்களில் சாதனைகளைக் குறித்து அல்-புரூனி இவ்வாறு கூறுகிறார்,
“அராபியர்களான நாம் ஹீப்ரு சொற்களைப் பயன்படுத்தி எண்களைக் குறிப்பிடுவது போல, அவர்கள் (இந்துக்கள்) எண்களைக் குறிப்பிட ஒரு போதும் சொற்களைப் பயன்படுத்தமாட்டார்கள்.
இன்றைக்கு அராபியர்களான நாம் பயன்படுத்தும் எண் குறியீடுகள் அழகான இந்திய குறியீடுகளிலிருந்து வந்தவை. எண்ணிக்கை செய்கையில் நாம் (அராபியர்கள்) ஆயிரத்துடன் நிறுத்திக் கொள்வோம்.
ஆனால் இந்தியர்களோ ஒரு ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்களைக் கண்டுபிடித்து அதனை தினமும் உபயோகிப்பவரகளாக இருக்கிறார்கள்…..எண்களின் பல்வேறு பட்ட உபயோகங்கள் அவர்களின் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் உபயோகிக்கப்படுகிறது. இந்த இரண்டு முறைகளும் பிற்காலத்தில் இணைந்தது…..”
இன்னொரு வரலாற்றாசிரியரான சச்சவு (Sachau) இந்தியாவிலிருந்து இரு வேறு பட்ட வகைகளில் இந்திய புத்தகங்கள் பாக்தாதிற்கு வந்தடைந்ததாகக் கூறுகிறார்.
“காலிஃப் மன்சூர் (753-74) சிந்துப் பகுதியை ஆண்டுகொண்டிருந்த காலத்தில் இந்தியாவிலும், பாக்தாதிலும் அமைக்கப்பட்ட தூதரகங்கள் மூலமாக இரண்டு முக்கியமான புத்தங்கள் பாக்தாதினை வந்தடைந்தன.
முதலாவது, ஏற்கனவே கூறிய பிரம்மகுப்தரின் ப்ரஹ்மசிந்தாந்தா மற்றும் கண்டகாடயக்கா (Khandakhadayaka or Arkanda). அராபியர்களான அல்-ஃபசாரி மற்றும் யாகுப்-இப்ன்-தாரிக் போன்றவர்கள் இந்திய அறிஞர்களின் உதவுடன் இதனை அரபியில் மொழிபெயர்த்தார்கள்.
இந்த இரு புத்தகங்களும் அராபிய உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இந்த புத்தகங்களின் மூலமாகத்தான் அராபியர்கள் வானசாஸ்திரம் குறித்த அறிவினை முதன்முதலாகப் பெற்றார்கள்.”
இதனைக் குறித்து மேலும் விளக்கும் சச்சவு, காலிஃபா ஹாருன்-அல்-ரஷீத் (786-808) காலத்தில் இந்திய கல்வியறிவு பெருமளவில் அரேபியாவை வந்தடைந்தது என்கிறார்.
பால்க்கைச் சேர்ந்த பார்மாக் அரச குடும்பத்தினர் வெளிப்படைக்கு முஸ்லிம்களாக மதம் மாறினாலும், தங்களின் முன்னோர்களின் நம்பிக்கையான பவுத்தத்தை பல தலைமுறைகளுக்குத் தொடர்ந்தனர்.
“பார்மாக் அரச குடும்பத்தினர் தங்கள் நாட்டிலிருந்து பலரை மருத்துவம் மற்றும் மருந்து தயாரிப்பு முறைகளை அறிந்து வரும்படி இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர்.
இந்தியாவிலிருந்து இந்து கல்வியாளர்களை பாக்தாதிற்கு வரவழைத்து அவர்களைத் தங்களின் மருத்துவ மனைகளில் முக்கிய பதவிகளில் நியமித்தனர்.
அவர்களின் மூலமாகப் பல முக்கியமான இந்திய அறிவியல், மருத்துவ, கணித புத்தகங்கள் சமஸ்கிருதத்திலிருந்து அராபிய மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டன…..”
பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்பானிஷ் முஸ்லிம் அறிஞரான சையத் அல்-அண்டலுசி (Al-Andalusi) அவரது புத்தகமான The Categories of Nations-இல் இந்தியாவைப் பெரும் அறிவியல், கணித, கலாச்சார மையமாகக் குறிப்பிடுகிறார்.
ஏழாம்-எட்டாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த பல இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் இந்தியா ஒரு துடிப்பான, வளமையான நாடாகவும், மிக முன்னேறிய பல நகரங்களைக் கொண்டதாகவும் எழுதிவைத்துச் சென்றிருக்கிறார்கள்.
“இஸ்லாமிய ஆக்கிரமிப்புகளின் உச்சத்தில் (8 முதல் 11-ஆம் நூற்றாண்டுகள்), இந்தியா உலகத்தின் மிக செல்வ வளமுடைய நாடாக இருந்தது.
தங்கமும், வெள்ளியும், விலையுயர்ந்த வைரமும், ரத்தினமும், மதங்களும், கலாச்சாரமும், கலைகளும், இலக்கியமும் பெரு வளர்ச்சியடைந்ததாக இருந்தது.
பத்தாம் நூற்றாண்டு இந்தியா அன்றைய மேற்கத்திய நாடுகளை விடவும் தத்துவத்திலும், அறிவியல் கண்டுபிடிப்புகளிலும், கணிதத்திலும், இயற்கையின் சுழற்சி குறித்த அறிவிலும் பெருமளவு முன்னேறியிருந்தது.
உதாரணமாக, இஸ்லாமியர்கள் காட்டுமிராண்டித்தனமாக உடைத்து அழித்த பழங்கால இந்தியக் கடவுளர்களின் சிலைகள் கலையழகின் உச்சத்தில் அமைந்தவை. அந்தச் சிலைகளுக்கு இணையாகக் கூற கிரேக்கர்களைத் தவிர வேறொருவருமில்லை.
இந்தியக் கோவில்களின் கட்டமைப்பு பார்ப்பவர்களைப் பேச்சிழக்க வைக்கும் அதிசயம் வாய்ந்த ஒன்று. அதற்கினையான கட்டிட அமைப்பு அன்றைய உலகில் வேறெங்கிலும் இல்லை.
இந்திய சிற்பிகளுகளும், கலைஞர்களும் ஈடு இணையற்றவர்களாக, அழகின் உச்சத்தைத் தொட்டு அதிசயிக்கச் செய்பவர்களாக இருந்தார்கள். இஸ்லாமிய ஆக்கிரமிப்பு அவர்களை முற்றிலுமாக அழித்து ஒழித்தது.”
இஸ்லாமிய அழிப்பிற்கு முந்தைய இந்தியாவினைக் குறித்து ஓரிரு பத்திகளில் எழுதிவிட இயலாது. அவ்வப்போது இது குறித்து மேலும் எழுத முயற்சி செய்வேன்.
(தொடரும்)