புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரண பிடியில் உள்ள ஒரு சிறுமியை பொலிஸ் அதிகாரியாக்கி அவளது ஆசையை மும்பை பொலிசார் நிறைவேற்றி உள்ளனர்.

மும்பையை சேர்ந்த மெஹக் சிங் என்ற 7 வயது சிறுமி எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இவர் உயிர் பிழைக்க 10 முதல் 15 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணப்பிடியில் சிக்கி இருக்கும் மெஹக் சிங்க்கு பொலிஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பதே வெகு நாள் ஆசை.

policeaaஇந்நிலையில் மேக்-எ-விஷ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், பொலிஸ் அதிகாரி ஆக விரும்பிய அந்த சிறுமியின் ஆசையை நிறைவேற்ற முன்வந்தது.

இதை மும்பை பொலிசாரிடம் தெரிவித்தபோது அவர்களும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தனர்.

அதன்படி, அந்த சிறுமிக்கு பொலிஸ் இன்ஸ்பெக்டர் உடை அணிவிக்கப்பட்டு மும்பை போய்வாடா காவல் நிலையத்தில் ஒருநாள் பொலிஸ் அதிகாரியாக நாற்காலியில் அமர வைக்கப்பட்டார்.

அதிகாரி நாற்காலியில் அமர்ந்திருந்த மெஹக் சிங்குக்கு காவலர்கள் சல்யூட் அடித்தனர். அவரும், பொலிசாருடன் உரையாடி தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டார்.

அவளது ஆர்வத்தை கண்டு அங்கிருந்த பொலிசார் நெகிழ்ந்து போனார்கள்.

Share.
Leave A Reply

Exit mobile version