இலங்கையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிகிரியா (அல்லது சீகிரிய) சுவரோவியம் மீது பெயரை எழுதியதாக கூறப்படும் தமிழ் யுவதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் சித்தாண்டியை சேர்ந்த 28 வயதுதான இந்த யுவதி தனியார் நிறுனமொன்றில் தொழில் புரிகின்றார்.

வார விடுமுறையில் சக ஊழியர்கள் உள்ளிட்ட 50 பேர் கொண்ட குழுவுடன் தம்புள்ளை மற்றும் சிகிரியா பிரதேசங்களுக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த நிலையிலேயே, குறித்த யுவதி சுவரோவியத்தில் பெயரை கிறுக்கியுள்ளார்.

இந்தியாவில் உள்ள அஜந்தா குகை ஓவியங்களை ஒத்த புராதன காலத்து சுவரோவியங்கள் சிகிரியா குன்றில் காணப்படுகின்றன.

இந்த சுவரோவியங்களில் குறித்த யுவதி தன்னையறிமாலே தனது பெயரை எழுதிவிட்டதாக கூறப்படுகின்றது.

அதை கண்டுள்ள அங்கிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அந்த யுவதியைப் பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

150215164112_sigiriya_paintings_art_512x288_gettyஅங்கு கடமையிலுள்ள தொல்பொருளாய்வு அதிகாரிகளின் தகவலின் படி, அந்த ஓவியங்களில் 10க்கும் மேற்பட்ட எழுத்துக்கள் கிறுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஓவியத்துடன் காணப்பட்ட புராதன கவி வரிகளில் நான்கு சேதமடைந்துள்ளன.

தம்புள்ளை நீதவான் உதய சஞ்சீவ குமார முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட இந்த யுவதியை, எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர், கல்விச் சுற்றுலா சென்றிருந்த கல்முனை பிரதேச முஸ்லிம் பாடசாலை ஒன்றின் மாணவியும் இது போன்ற குற்றத்திற்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version