இலங்கையின் வரலாற்றில் நாட்டின் முதல் பெண்மணியாக தமிழ் பெண் ஒருவர் விளங்கின்றார் என்பது இது வரை ஊடகங்களில் வெளிவந்து இராத செய்தி ஆகும்.

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாரியார் யாழ்ப்பாண தமிழர் ஆவார். இவரின் பெயர் ஜெயந்தி.

மைத்திரிபால சிறிசேன சிறிய வயது முதல் மார்க்ஸியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். இவர் ஐ. சண்முகதாஸன் தலைமையிலான இலங்கை கமியூனிஸ்ட் கட்சியிலேயே முதன்முதல் அரசியலில் ஈடுபட்டார்.

தலைவர் சண்முகதாஸனுக்கு நெருக்கமான தோழர்களில் ஒருவராக காணப்பட்டார்.

இவரின் பாரம்பரிய இல்லத்தில் இன்றும் கால் மார்க்ஸ், லெனின், மாவோஓ போன்ற தலைவர்களின் புகைப்படங்களை காண முடிகின்றது.

மார்க்ஸிய ஈடுபாடும், தலைவர் சண்முகதாஸனுடனான தொடர்பும் இவருடைய காதல் திருமணத்துக்கு ஊக்கிகளாக அமைந்தன.

maithri_ma

Share.
Leave A Reply

Exit mobile version