இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பிற்பகல் (15 ஆம் திகதி) புதுடில்லி சென்றடைந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வுக்கு புதுடில்லி விமான நிலையத்தில் அரச மரியாதையுடன் கூடிய மகத்தான செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை சென்றடைந்ததும் இந்திய இராஜாங்க அமைச்சர் பி. இராதாகிருஷ்ணன்.

இலங் கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் வை. கே. சிங்கா, இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் சுதர்ஷன் செனவிரட்ன ஆகியோர் வரவேற்றனர்.

இதேவேளை, அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று காலையில் புதுடில்லியைச் சென்றடைந்ததோடு ஜனாதிபதியை விமான நிலையத்தில் வரவேற்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.

MS-delhi-1நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை இந்தியாவுக்கு மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான யு. எல். 195 என்ற சாதாரண பயணிகள் விமானத்தில் கட்டுநாயக்கா பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவேயாகும்.

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருடன் இன்று காலையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

அதேசமயம் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். நிதியமைச்சர் அருண் ஜெட்லி உட்பட அந்நாட்டு அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் முக்கியஸ்தர்களையும் ஜனாதிபதியும் அவர் தலைமையிலான குழுவினரும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர். அவர்களில் காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தியும் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கும் அடங்குவர்.

இதேவேளை நேற்று பின்னேரம் புதுடில்லி சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையைத் திறந்து வைத்ததோடு பூசை வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியும் தூதுக்குழுவினரும் இந்தியா விலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகரின் இராப் போஷன விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி தலைமையிலான தூதுக் குழுவில் அமைச்சர்கள் மங்கள சமரவீர, டொக்டர் ராஜித சேனாரட்ன. பாட்டலி சம்பிக்க ரணவக்க, டி. எம். சுவாமிநாதன், கிழக்கு மாகாண ஆளுநர் ஓஸ்ரின் பெர்னாண்டோ, ஜனாதிபதி செயலாளர் பி. பி. அபேகோன் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.

 

ஆங்கில செய்திகள்

Share.
Leave A Reply

Exit mobile version