கோடிக்கணக்கான நிதி மோசடி மற்றும் நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் தம்பி துவாரகேஸ்வரன் யாழ்ப்பாணச் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பல் வேறு வர்தகர்களிடமிருந்து கோடி கணக்கான ரூபாய்களை மோசடி செய்த குற்றச்சாட்டில் இவர்  மீது வழக்கு இருந்ததாகவும் இவ் வழக்கு சம்மந்தமாக  இவருக்கு நீதிமன்றத்தால் அனுப்பட்ட சம்மனை இவர் கிழித்து எறிந்ததாகவும்  அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

மேலும் இவரை தேடுவோருக்கு சீனாவிற்கு சென்றுள்ளதாக அவரது பணியாளர்கள் கூறிவருகின்றனராம். மேலும் மண் அகழ்வதற்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற துவாரகேஸ்வரன் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தாகவும் தெரியவருகின்றது.

இவருக்கும் இவரது அண்ணனின் மனைவியான பிரதி அமைச்சர் விஜயகலாவுக்கும் இடையில் கடும் பகை இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

தனது அண்ணன் மகேஸ்வரனின் சொத்துக்களை அமுக்குவதற்கு துவாரகேஸ்வரன் முயன்று அதனை விஜயகலா தடுத்து நிறுத்தியதும் குறிப்பிடத்தக்கது. இந்தப்பகை காரணமாக துவாரகேஸ்வரனின் முதுகில் அசிற் வீசப்பட்டதும் அனைவரும் அறிந்ததே

Share.
Leave A Reply

Exit mobile version