நெல்லை: இலங்கை அகதிகளின் குடும்பம் ஒன்றில் ஏற்பட்ட தகராறில் அக்காவை தம்பி அரிவாளினால் வெட்டி காயப்படுத்தியுள்ள சம்பவம் கங்கைகொண்டான் கலைஞர், காலனியில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் கலைஞர் கொலனியில் இலங்கை அகதி முகாம் உள்ளது. இங்கு மயூரன் (வயது28) என்பவர் தனது சகோதரி மலர்(வயது37) என்பவருடன் வசித்த வருகிறார்.
மலர் தனது கணவர் நவராஜினை பிரிந்து தனது குழந்தையுடன் வசிக்கிறார். நவராஜ் வேறொரு அகதி முகாமில் தனியாக வசித்து வருகிறார். இந் நிலையில் சம்பவத்தன்று தனது குழந்தையை பார்க்க நவராஜ் வந்துள்ளார்.
இந்த தகவல் மயூரனுக்கு தெரிய வந்துள்ளது. அவர் தனது சகோதரியிடம் ‘உன்னை வேண்டாம் என்று கூறிய கணவரிடம் ஏன் குழந்தையை பார்க்கவிட்டாய்’, என இது தொடர்பில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள் ளார்.
வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த மயூரன் அரிவாளால் மலரை வெட்டியுள்ளார். இதில் அவரது கை விரல் துண்டாகியது. காயம் அடைந்த மலர் சிகிச்சைக்காக பாளை அரச மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுபற்றி கங்கைகொண்டான் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டமையை அடுத்து. வழக்கு பதிவு செய்த பொலிஸார் மயூரனை கைது செய்துள்ளனர்.
அதிக ‘லைக்குகளை’ பெற நினைத்த இளைஞன் கைது
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஹைதராபாத்தைச் சேர்ந்த பசல் ஷேக் என்ற இளைஞர் கடந்த ஆண்டு மே மாதம் நேரு உயிரியல் பூங்காவுக்கு சென்றபோது, விலங்குகளைப் பாதுகாக்க வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் மீது தாவி குதித்து பின்னர் அங்கிருந்த ஓர் ஆமை மீது ஏறி நின்றவாறு புகைப்படம் எடுத்து பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இந்தப் புகைப்படத்தை கண்ட உள்ளூர் பத்திரிகை ஒன்று பேஸ்புக்கில் வெளியான வியப்பான பகிர்வு என்று தலைப்பிட்டு, பசல் ஷேக்கின் படத்தை வெளியிட்டுள்ளது.
அந்தப் பத்திரிகையில் வெளியாகியுள்ள படத்தைப் பார்த்த வனத்துறை அதிகாரிகள், பசல் ஷேக்கின் மீது முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து பேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்த பொலிஸார் கடந்த புதன்கிழமை இரவு அவரை கைது செய்துள்ளனர்.
விசாரணையின் போது விளையாட்டு நோக்கத்தோடு புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் லைக்குகளுக்காக பகிரவே அப்படி செய்ததாக பசல் கூறியுள்ளார்.
பசல் ஷேக் மீது தடை செய்யப்பட்ட பகு திக்குள் அத்துமீறி நுழைந்து மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.