5 வய­து­டைய சிறு­வர்கள் உள்­ள­டங்­க­லான சிறார்கள் இரா­ணுவ பயிற்சி முகா­மொன்றில் பயிற்சி பெறு­வதை வெளிப்படுத்தும் புதிய வீடியோ காட்­சி­யொன்றை ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் வெளி­யிட்­டுள்­ளனர்.

25F6A53400000578-2964224-image-a-14_1424637555055

சிரிய ரக்கா நக­ரி­லுள்ள அல் -பாரூக் சிங்கக் குட்­டி­க­ளுக்­கான நிறு­வனம் என பெயர் சூட்­டப்­பட்ட தீவி­ர­வாத பயிற்சி முகாமிலேயே மேற்­படி சிறு­வர்­க­ளுக்கு பயிற்சி வழங்­கப்­பட்­டுள்­ளது.

இந்த 9 நிமிட வீடியோ காட்­சியில் சின்­னஞ்­சி­றார்கள் தீவி­ர­வாத குழுவைச் சேர்ந்த ஆசி­ரியர் ஒரு­வரின் கட்­ட­ளை­க­ளுக்கு அடி பணிந்து பயிற்­சி­களில் ஈடு­ப­டு­கின்­றனர்.

அந்த வீடியோ காட்­சியின் பின்­ன­ணியில் அரே­பிய இசை ஒலிக்­கி­றது.சிறு­வர்கள் நீரைப் ­ப­யன்­ப­டுத்தி மத ரீதி­யான சுத்திகரிப்பை மேற்­கொண்ட பின்னர் பிரார்த்­த­னையில் ஈடு­ப­டு­கின்­றனர்.  தொடர்ந்து அவர்கள் இரா­ணுவ பயிற்­சி­களை ஒத்த பயிற்­சி­களில் ஈடு­ப­டு­கின்­றனர்.


இந்த வீடியோ காட்­சி­யா­னது ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுடன் தொடர்­பு­டைய சமூக இணை­யத்­த­ளத்தில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

அந்த இணை­யத்­தள பக்­கத்தில் சின்­னஞ்­சி­றார்கள் துப்­பாக்­கி­களை ஏந்­தி­யி­ருக்கும் காட்சிகளும் அவர்கள் தலை துண்டித்து கொல்லப்பட்டவர்களின்  தலைகளை  ஏந்தியிருக்கும்  காட்சிகளும்  வெளியிடப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version