ஃபிலிபைன்ஸ் தீவுக்கூட்டத்தில் அடங்கியிருக்கும் இஸ்லாமியப் பகுதிகளான மிண்டானோ மற்றும் சுலுத் தீவுகளை “அமைதியான” முறையில் இஸ்லாம் பரவியதற்கு எடுத்துக்காட்டாக இன்றைய இஸ்லாமியக் கல்வியாளர்கள் கூறுவதனை நீங்கள் அறிந்திருக்கலாம்.
எந்த இஸ்லாமியப் படை இந்தத் தீவுகளுக்குச் சென்று அவர்களை வாள்முனையில் மதம் மாற்றியது? என்பதே அவர்கள் நம் முன் வைக்கும் கேள்வியாகும்.
இந்தியாவிலிருந்து சென்ற இஸ்லாமிய சூஃபிக்களும், இஸ்லாமிய வணிகர்களும், மலாய் தீபகற்பத்தைச் சேர்ந்த முஸ்லிம்களும் மத போதனையில் ஈடுபட்டு அங்கிருந்தவர்களை “அமைதியான” மதம் மாற்றியதாக நம்மிடம் வாதிடுவார்கள்.
முதன் முதலாக இஸ்லாம் 1330-ஆம் வருடம் அரேபிய வணிகனான மக்தூம் கரிம் என்பவனால் தெற்கு ஃபிலிப்பைன்சில் அமைந்திருக்கும் சுலு தீவுக்கூட்டங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாக வரலாறு.
அங்கு தன்னைக் குடியமர்த்திக் கொண்ட மக்தூம் கரிம் ஒரு மசூதியைக் கட்டினான் (ஃபிலிப்பைனில் மிகவும் பழமைவாய்ந்த மசூதியாக அது இன்றைக்குக் கருதப்படுகிறது).
ஆனால் பழங்குடிப் பழக்க, வழக்கங்கள் கொண்ட ஃபிலிப்பைன் நாட்டினர் பெருமளவில் இஸ்லாமிற்கு மதம் மாறியது மலாக்கா தீபகற்கத்திலும், இந்தோனேஷியாவிலும் முஸ்லிம்கள் வலிமை பெற்ற பிறகு நிகழ்ந்த ஒன்று.
1450களில் மலேஷியாவின் ஜோஹோர் பகுதியில் பிறந்த அரேபியனான ஹாசிம் சையத் அபுபக்கர் என்பவன் போர்னியோவிலிருந்து ஒரு பெரும் முஸ்லிம் படையுடன் சென்று ஃபிலிப்பைனின் சுலு தீவுக்கூட்டங்களைக் கைப்பற்றினான்.
அதுவே 1457-ஆம் வருடம் ஃபிலிப்பைன்ஸில் சுலு சுல்தானேட் அமைய அடித்தளம் வகுத்தது. அதனைத் தொடர்ந்த வருடங்களில் ஃபிலிப்பைனைச் சேர்ந்த பழங்குடிகளை வலுக்கட்டாயமாக மதம் மாற்றும் வேலையும் துவங்கியது.
போர்னியோ சுல்தானேட்டின் ஆதரவுடன் நிகழ்த்தப்பட்ட சுலு “புனிதப் போரின் (ஜிகாத்)” விளைவாக பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதிக்குள் மத்திய ஃபிலிப்பைனின் பெரும்பகுதியும் (விசயாஸ் – Visayas), வடக்கு ஃபிலிப்பைனைச் சேர்ந்த லுசானின் பாதியளவு பகுதிகளும், தெற்குப் பகுதியைச் சேர்ந்த மிண்டானோ பகுதிகளும் முஸ்லிம்களின் ஆளுகையின் கீழ் வந்தன.
தொடர்ந்து நடந்த இஸ்லாமிய பயங்ககரவாதத் தாக்குதல்கள் ஃபிலிப்பைனின் பழங்குடி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியது.
விடாமல் தொடர்ந்து நடத்தப்பட்ட ஜிகாதுகளின் விளைவாக இஸ்லாம் 1565-ஆம் வருடம் மணிலாவை அடைந்தது. இஸ்லாமியர்களல்லாத ஃபிலிப்பைனியர்கள் ஜிகாதிகளை எதிர்க்கும் பொருட்டு “பரான்காய்” எனும் சிறு படையணிகளை அமைத்தார்கள்.
பெருமளவு கிராமப்புற, பழங்குடிகளைக் கொண்ட படையணிகள் அவை. ஆனால் அவற்றால் வெறிகொண்ட இஸ்லாமிய ஜிகாதிகளை எதிர்த்து நிற்க இயலவில்லை.
இஸ்லாம் ஃபிலிப்பைனை முழுமையாக ஆக்கிரமிக்கும் ஆபத்தில் இருந்த நேரத்தில் அதிர்ஷ்டவசமாக அங்கு வந்து சேர்ந்த ஸ்பானியர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது (சயாமில் நிகழ்ந்ததைப் போன்று).
ஸ்பானியர்கள் தங்களின் படை வலிமையால் இஸ்லாமியப் பரவலைத் தொடர விடாமல் செய்து தங்களின் ஆளுமையை மெல்ல மெல்ல ஃபிலிப்பைனின் பெரும்பகுதியில் பரவலாக்கினார்கள்.
ஆனால் துரதிருஷ்டவசமாக இது நிகழ்வதற்கு முன்பே தெற்கு ஃபிலிப்பைனின் பெரும்பாலான பழங்குடிகள் கொடூரமான முறைகளை உபயோகித்து இஸ்லாமிற்கு மதம் மாற்றப்பட்டிருந்தார்கள்.
இஸ்லாமியர்களிடமிருந்து அவர்கள் கைப்பற்றிய பகுதிகளைப் பிடிக்கும் ஸ்பானியர்களின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. ஆனால் இஸ்லாம் ஃபிலிப்பைனில் பரவ விடாமல் செய்வதில் ஸ்பானியர்கள் வெற்றி பெற்றார்கள்.
இஸ்லாம் சுலு தீவுகளிலும், மிண்டானோவிலும் மட்டுமே முடக்கப்பட்டது. இன்றுவரை ஃபிலிப்பைன் முஸ்லிம்களில் பெரும்பகுதியினர் வாழுமிடமாக அப்பகுதி இருக்கிறது.
தென் கிழக்கு ஆசியப்பகுதியில் அமைந்துள்ள துறைமுக நகரங்களில் குடியேறிய முஸ்லிம் வணிகர்கள், அந்தப் பகுதியிலிருக்கும் சகிப்புத்தன்மை இயல்பாக உடைய காஃபிர் பெண்களை மணந்தார்கள். அப்பெண்களுக்குப் பிறந்த குழந்தைகள் முஸ்லிம்களானார்கள்.
முஸ்லிம் வணிகர்களின் இவ்வாறான குடியேற்றம் பத்தாம் நூற்றாண்டிலிருந்து நடந்து கொண்டிருப்பதால், இவ்வாறான கலப்புத் திருமணங்களே அவர்களின் எண்ணிக்கை பெருக உதவியாக இருந்திருக்கிறது.
எண்ணிக்கையில் குறைந்த அவர்கள் தங்களால் இயன்ற அளவிற்கு அங்கிருக்கும் காஃபிர்களை போதனைகள் மூலம் மதம் மாற்றியிருக்கலாம்.
அதையும் விட, இஸ்லாம் ஒரு முஸ்லிம் நான்கு பெண்களை மணக்க அனுமதிக்கின்றது. மேலும் ஒரு முஸ்லிம் கணக்கற்ற பாலியல் அடிமைகளை வைத்திருக்கவும் (Sex Slaves) இஸ்லாம் ஊக்கப்படுத்துகிறது. இதன் காரணமாக அவர்களின் ஜனத்தொகை மிக வேகமாகப் பெருகியது. பெருகிக் கொண்டிருக்கின்றது.
இஸ்லாம் தென் கிழக்கு ஆசியாவில் பரவத் துவங்கிய காலத்தில் பெரும்பாலானா காஃபிர்கள் இஸ்லாமின் “சிறந்த மகத்துவத்தினைக்” கண்டு பெருமளவில் மதம் மாறியதாக எங்கும் சரித்திரமில்லை.
1290-களில், இஸ்லாமியக் குடியேற்றங்கள் ஏற்பட்டு ஏறக்குறைய நானுறு வருட காலத்திற்குப் பின்னரும் வெறும் இரண்டு இஸ்லாமிய நகர அரசுகளே வடக்கு சுமத்திராவில் அமைந்திருந்தது என்பதினைக் காண்கிறோம்.
ஸ்ரீவிஜய அரசனான பரமேஸ்வரன் மதம் மாறி மலாக்கா சுல்தானிய அரசை நிறுவிய பின்னரே இஸ்லாம் தென் கிழக்கு ஆசியாவின் பிற பகுதிகளுக்கு வேகமாகப் பரவியது.
மலாய் தீபகற்பம், இந்தோனேஷிய தீவுக் கூட்டங்கள், ஃபிலிப்பைன், தெற்கு தாய்லாந்தின் பகுதிகள் போன்றவை இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன.
சூஃபிக்கள் அமைதியான முறையில் தென் கிழக்கு ஆசியாவில் இஸ்லாமைப் பரவச் செய்தார்கள் என்பது வெறுக் கட்டுக்கதையே அன்றி வேறோன்றுமில்லை.
மேலும் அப்பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட கொடூரமான ஷாஃபி இஸ்லாமிய சட்டங்களும் இதற்கு இன்னொரு காரணம். இந்தியாவில் கொடூரங்கள் ஓரளவிற்குக் குறைந்த ஹனீஃபி இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு, இந்து காஃபிர்கள் “திம்மி”க்களாக நடத்தப்பட்டார்கள்.
ஆனால் ஷாஃபி சட்டங்கள் “மதம் மாறு அல்லது மரணம்” என்னும் கொள்கையை உடையது.
உதாரணமாக, ஷாஃபி சட்டம் ஒரு காஃபிர் மதம் மாற நான்கு மாதங்கள் மட்டுமே அனுமதியளிக்கும் (பிற இஸ்லாமிய சட்டங்கள் ஒரு வருடம் வரையிலும் நேரம் கொடுப்பவை). எனவே, இதன் காரணமாக தென் கிழக்கு ஆசியப்பகுதிகளி இஸ்லாம் மிக வேகமாகப் பரவியது. போர்ச்சுக்கீசியர்களும், டச்சுக்காரர்களும், ஸ்பானியர்களும் வரும் வரையிலும்.
மலாயாவின் அசே பகுதியில் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் 1618-24 ஆண்டு காலங்களில் தொடுத்த கொடூரமான புனிதப் போர்களின் காரணமாக மலேசியாவின் பெருமளவு காஃபிர்கள் கொல்லப்பட்டார்கள்.
உதாரணமாக, மட்டாரமை ஆண்ட சுல்தான் அகுங், சுரபயா மற்று அதன் அருகாமை நகரங்களின் மீது ஐந்து வருடங்கள் (1620-25) முற்றுகையிட்டான்.
80,000 முஸ்லிம் படைகளைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தப் போரின் போது சுல்தான் அங்கிருந்த வயல்களை நாசம் செய்து, குடி நீரில் விஷத்தைக் கலந்தான்.
காஃபிர்களின் நகரங்களுக்குச் செல்லும் ஆறுகளின் மத்தியில் அணைகளைக் கட்டி அவர்களைத் தாகத்தில் தவிக்க வைத்தான். 50,000 முதல் 60,000 பேர்கள் வரை வாழ்ந்த அந்த நகரங்களில் போரின் இறுதியில் வெறும் 500 பேர்கள் மட்டுமே உயிருடன் மிஞ்சினார்கள். மற்ற அனைவரும் பசியிலும், தாகத்திலும் தவித்து இறந்தார்கள்.
இந்தியாவைப் போலவே தென் கிழக்கு ஆசிய இஸ்லாமிய “புனிதப் போர்கள்” பெருமளவு அடிமைகளை முஸ்லிம்களுக்கு அளித்தன.
போர்த்துக்கீசியர்கள் முதன் முதலாக தென் கிழக்கு ஆசியப் பகுதிகளுக்கு சென்றபோது அவர்களிடம் வேலை செய்வதற்கு ஒருவரும் கிடைக்காமல் தவித்ததாக எழுதி வைத்திருக்கிறார்கள். வேலை செய்யும் வலிமையுடைய அனைவருமே யாரேனும் ஒரு முஸ்லிமுக்கு அடிமைகளாக இருந்தார்கள் எனக் குறிப்பிடுகிறார்கள் போர்ச்சுக்கீசியர்கள்.
இதனையே பாரசீகப் பயணியான மொஹமது இப்ன்-இப்ராஹிமும், சீனப்பயணியான ஹ்வாங்க்-சங்க்கும் உறுதி செய்கிறார்கள்.
(தொடரும்)
மூலம் : Islamic Jihad – A Legacy of Forced Convesion, Imperialism and Slavery BY M.A. Khan
தமிழில் : அ. ரூபன்