யுத்தக்  குற்­றச்­சாட்­டுக்கள் மற்றும்  மனித உரிமை மீறல்கள் தொடர் பில் உள்­ளக விசா­ரணை நடத்­தப்­ப­டு­வது அத்தியாவசிய­மா­ன­தாகும்.

இதனை விளங்­கிக்­கொள்­ளாமல் பலரும் இந்த உள்­ளக விசா­ர­ணை யில் நம்­பிக்கையில்­லை­யென்று தெரிவித்துவருகின்றனர்.

ஐ.நா.மனித உரிமைப் பேர­வையில்   நிறை­வேற்­றப்­பட்ட  பிரே­ர­ணையின் 10ஆவது பந்­தியில் சர்­வ­தேச விசா­ர­ணையும் உள்­ளக விசா­ர­ணையும் நடத்­தப்­ப­ட­வேண்டும் என்றே கூறப்­பட்­டி­ருக்­கி­றது என்று தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் பாராளுமன்ற உறுப்­பினர் சுமந்­திரன் தெரி­வித்தார்.

தமிழ் மக்­க­ளுக்கு நடந்த அநீ­திகள் அதன் உண்­மைகள் முழு­மை­யாக வெளி­வர வேண்டும் என்­பதே எம் அனை­வ­ரதும் ஒரே எதிர்­பார்ப்­பாகும்.

எனவே உள்­ளக  விசா­ர­ணை­யா­னது  இது­வ­ரையில் தெரிந்த உண்­மை­க­ளுக்கு அப்பால் வேறு வெளி­வ­ராத பல உண்மைகளை கண்­ட­றிய வாய்ப்­பாக அமை­யு­மெ­னவும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

நேற்று கொழும்பில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே சுமந்­திரன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்­ளக விசா­ரணை நடத்­தப்­ப­டாமல் சர்­வ­தேச விசா­ரணை மட்டும் நடத்­தினால் அந்த அறிக்கை வெறும் அறிக்­கை­யாக மட்­டுமே இருக்கும்.

உள்­ளக விசா­ரணை நடத்­தப்­பட்டால் இரண்­டையும் ஒப்­பிட்டு நாம் ஒரு முடி­வுக்கு வர­மு­டியும். அதே­நேரம் உள்­ளக விசாரணையின்  மூலம்தான் போர்­குற்ற விசா­ர­ணையை முன்­னெ­டுத்து தக்க நட­வ­டிக்கை எடுக்க முடியும். சர்­வ­தேச விசார­ணையை மட்டும் நடத்தி எந்­த­வித பயனும் ஏற்­பட்­டு­வி­டப்­போ­வ­தில்லை.

எவ்­வாறு நடக்கும்?

அது வெறும் ஒரு அறிக்கை அள­வி­லேயே வெளி­யி­டப்­பட்டு எங்கோ ஒரு மூலையில் முடங்கி கிடக்கும். மேலும் குற்றம் இளைத்­த­வர்­களே விசா­ரணை நடத்­து­வதில் எமக்கு உடன்­பாடு இல்லை.

ஆனால் இப்­போது அப்­ப­டி­யல்ல, உள்­ளக விசா­ர­ணையை நடத்­து­வது இந்­நாட்டு அதி­கா­ரிகள் என்­றாலும், அது சர்­வ­தேச விசா­ர­ணை­களை நடத்­தி­ய­வரின் மேற்­பார்­வையின் கீழ்தான் செயற்­படும்.

இந்த விதி­முறை ஐ.நா. பிரே­ர­ணை­யி­லேயே சொல்­லப்­பட்­டி­ருக்­கின்­றது. சர்­வ­தேச விசா­ர­ணையை நடத்­தி­ய­வர்­களின் மேற்பார்­வை­யின்­கீழ்தான்  உள்ள விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும் என்று குறித்த பிரே­ர­ணையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ஆர்வம் காட்­டாத மஹிந்த அரசு

கடந்த மஹிந்த ராஜ­பக்ஷ அரசு உள்­ளக விசா­ரணை நடத்­து­வதில் ஆர்வம் காட்­ட­வில்லை. அவர்கள் அதைக் கண்­டு­கொள்ளவே இல்லை. ஆனால் இப்­போ­தைய அர­சாங்கம் உள்­ளக விசா­ரணை நடத்த முன்­வந்­தி­ருக்­கி­றது. இதை நாம் வரவேற்­கிறோம்.

அப்­படி நடக்கும்  பட்­சத்தில் சர்­வ­தேச விசா­ர­ணையின் அறிக்­கையும், உள்­ளக விசா­ர­ணையின் அறிக்­கையும் ஒன்­றா­கத்தான் இருக்க வேண்டும். ஒன்­றுக்கு ஒன்று முர­ணாக இருக்க முடி­யாது. அதனால் உள்­ளக விசா­ரணை எமக்கு சாத­க­மா­கத்தான் அமையும்.

அறிக்கை தாமதம்

சர்­வ­தேச விசா­ரணை அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­டு­வது பிற்­போ­டப்­பட்­டுள்­ளதே தவிர, ஒட்­டு­மொத்­த­மாக அதை கைவிட்டுவிட­வில்லை.

எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் சர்­வ­தேச விசா­ரணை அறிக்கை சமர்ப்­பிக்­கப்­படும். அதற்குள் உள்­ளக விசா­ர­ணையும் நடத்தப்­பட்டால் இரண்­டையும் வைத்­துக்­கொண்டு நாம் அடுத்த கட்ட நட­வ­டிக்­கைக்கு முன்­னே­றலாம்.

காணி விவ­காரம்

தேர்தல் காலங்­களில் வழங்­கப்­பட்ட வாக்­கு­று­திக்­க­மைய வடக்கு கிழக்கில் இரா­ணு­வத்­தினால் கைய­கப்­ப­டுத்­தி­யுள்ள காணிகளை விடு­விக்க நாம் அழுத்­தங்­களைக் கொடுத்து வரு­கிறோம். அது நடக்­கும்­வரை நாம் அதற்­கான அழுத்­தங்­களை தொடர்ந்து வழங்­கிக்­கொண்டே இருப்போம்.

காணாமல் போனவர் விவ­காரம்

காணாமல் போன­வர்கள் இறந்­தி­ருந்தால் அவர்­க­ளுக்கு நிதி­ய­தவி வழங்­கப்­படும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரிவித்­துள்ளார்.

வெறும் நிதி­யு­தவி மட்டும் வழங்­கு­வதால் எந்தப் பயனும் கிட்­டப்­போ­வ­தில்லை. அவர்­களைக் கடத்­தி­யது யார்? அவர்கள் எப்படி இறந்­தார்கள் என்­பது பற்றி முறை­யான விசா­ரணை நடத்தி குற்­ற­வா­ளி­க­ளுக்கு தக்க தண்­ட­னையை வழங்க வேண்டும் என்றார்.

இதே­வேளை இந்த விவ­காரம் தொடர்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன்  கருத்து வெளி­யி­டு­கையில்

காலம் பிற்­போ­டப்­பட்­டாலும்  பல­மா­ன­தொரு சர்­வ­தேச விசா­ரணை அறிக்கை வெளி­வ­ரு­மாயின் அதுவே எமக்கு கிடைக்கும் சாத­க­மான விளை­வாகும்.

உள்­ளக விசா­ரணை எவ்­வாறு அமையும் என்­பதை தீர்­மா­னிப்­பது வெளி­வ­ர­வி­ருக்கும் சர்­வ­தேச விசா­ரணை அறிக்­கை­யேயாகும். எதிர்­வரும் செப்­டம்பர் வரை­யிலே இலங்­கைக்கு காலக்­கெடு விதிக்­கப்­பட்­டுள்­ளது.

விசா­ரணை அறிக்கை

எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் வெளி­வர இருப்­பது ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் சர்­வ­தேச விசா­ரணை அறிக்­கை­யே­யாகும். இலங்­கையின் உள்­ளக விசா­ரணை அறிக்கை அல்ல.

இறுதிக் கட்ட யுத்­தத்தின் போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்­வ­தேச விசா­ரணைப் பொறி­மு­றை­யொன்­றினை உரு­வாக்க  வேண்டும்  என நாம்  ஆரம்­பத்தில் இருந்தே வலி­யு­றுத்தி வரு­கின்றோம்.

கண்­து­டைப்­பாக இருக்­கக்­கூ­டாது

எனினும் முன்­னைய அர­சாங்கம் இவை எத­னையும் கவ­னத்­திற்கு கொள்­ளாது தான்­தோன்­றித்­த­ன­மா­ன­தொரு செயற்­பாட்டில் சென்று கொண்­டி­ருந்­தது.

எனினும் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­ட­துடன் புதிய அர­சாங்கம் இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரி­மைகள் மீறல்கள் தொடர்பில் கவ­னத்தில் கொண்­டுள்­ள­துடன் இவ் விட­யங்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொள்ள நடவடிக்கைகளையும் எடுத்­துள்­ளமை வர­வேற்­கத்­தக்க விட­ய­மே­யாகும்.

எனினும் இவை வெறும் கண் துடைப்­பாக இருப்பின் நாம் தொடர்ந்தும் எமது அழுத்­தங்­களை கொடுக்க வேண்­டிய நிலை ஏற்படும்.

ஐ.நா. தீர்­மா­னத்­தின்­படி இலங்கை விட­யத்தில் இரு வேறு வித­மான வழி­மு­றை­களை தெரி­வித்­தனர். அதா­வது இலங்கையில் இடம்­பெற்ற   மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்­ளக விசா­ரணைச் செயற்­பா­டொன்று சுயா­தீ­ன­மாக இடம்­பெற வேண்டும்.

அவ் விசா­ரணை  ஐ.நா. உயர்ஸ்­தா­னி­கரின்  மேற்­பார்­வையின் கீழ் இடம்­பெற வேண்டும் எனவும் அதே சந்­தர்ப்­பத்தில் உள்ளக  விசா­ர­ணைக்கு சமாந்­த­ர­மான   சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்றும் இடம்­பெ­று­மென சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

பாரிய தவ­றுகள்

சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­ப­டு­வது சாதா­ரண செயற்­பா­டாகும். ஆனால் இலங்­கையின் அனு­ம­தி­யுடன் சர்­வ­தேச விசாரணை நடத்­தப்­ப­டு­வதே உண்­மை­களை கண்­ட­றிய சாத­க­மாக அமையும்.

அதையே ஐ.நா. மனித உரிமை பேரவை இலங்­கை­ய­ரிடம் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­தி­யது. எனினும் இச்­செ­யற்­பாட்டில் முன்­னைய அர­சாங்கம் பாரிய தவ­று­களை இழைத்து விட்­டது.

இப்­போது அனைத்து விட­யங்­க­ளுக்கும் நல்­ல­தொரு சந்­தர்ப்பம் அமைந்­துள்ள நிலையில் ஐ.நா. விசா­ரணை அறிக்கை பிற்போ­டப்­பட்­டி­ருப்­பது எமக்கு ஏமாற்­ற­ம­ளிக்கும் விட­யமே.

தெரி­யாத உண்­மைகள் வரலாம்

எனினும் ஒரு விட­யத்­தினை கருத்திற் கொண்டு நாம் செயற்­பட வேண்டும். என்­ன­வெனில் இலங்கை தொடர்பில் ஐ.நா. விசா­ரணை அறிக்கை செப்­டெம்பர் மாதம் வரை பிற்­போ­டப்­பட்­டி­ருப்­பது.

இது­வ­ரையில் தெரிந்த உண்­மை­க­ளுக்கு அப்பால் வேறு வெளி­வ­ராத பல உண்­மை­களை கண்­ட­றிய வாய்ப்­பாக அமையுமெனவும்  செப்­டெம்­பரில் கட்­டாயம் ஐ.நா. விசா­ரணை அறிக்கை வெளி­யி­டப்­படும் எனவும் ஐ.நா. மனித உரி­மைகள் உயர்ஸ்­தா­னிகர் வாக்­கு­று­தி­ய­ளித்­துள்ளார்.

அநீ­திகள் முழு­மை­யாக வர­வேண்டும்

எனவே, தற்­போது பிற்­போ­டப்­பட்­டி­ருக்கும் அறிக்கை மேலும் பலப்­ப­டுத்­தப்­பட்டு நடு­நி­லை­யா­னதும் தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்­பினை நிறைவு செய்யக் கூடிய வகை­யிலும் அமையுமெனின் இவ் அறிக்கை பிற்போடப்பட்டதால் பாதகம் ஏதும் இல்லை.

ஏனெனில் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகள் அதன் உண்மைகள் முழுமையாக வெளிவர வேண்டும் என்பதே எம் அனைவரதும் ஒரே எதிர்பார்ப்பாகும்.

அதனை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் முற்றாக   நிராகரித்தது. இப்போது புதிய அரசாங்கம் இவ் விசாரணைகள் தொடர்பில் கவனம் செலுத்துவது  சர்வதேச ஒத்துழைப்பினை ஏற்றுக்கொண்டமைக்கு சமமானது.

எனவே எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளிவரவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையினை வெளியிடுவதனால் அவ் அறிக்கையின் மூலம் வெளிவரும் உண்மைத் தன்மைகள் இலங்கையின் உள்ளக விசாரணைப் பொறிமுறைகளை சிறப்பாக கொண்டு பிரச்சினைக்கு தீர்வுகளையும் உண்மைகளையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க அடிப்படையாக அமையும். என்பதனை கருத்திற் கொள்ள வேண்டும்.

Share.
Leave A Reply

Exit mobile version