தமிழ் தேசிய கூட்டமைப்பின (ரி.என்.ஏ) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இராஜவரோதயம் சம்பந்தன் மற்றும் ரி.என்.ஏயின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பெப்ரவரி 4ல் பத்தரமுல்லயில்  நடைபெற்ற  உத்தியோகபூர்வ  சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டதின் மூலம் அநேகரின் மனங்களையும் மற்றும் இதயங்களையும் வென்றிருந்தார்கள்.

கொழும்பிலிருந்த இராஜதந்திர வட்டாரங்கள், அதை பல தசாப்தங்களாக இனவாத பூசல்கள் மற்றும் இரத்தக்களரி என்பனவற்றால் துண்டங்களாக கிழிபட்டிருந்த நாட்டில் இன நல்லிணக்கத்துக்கான வரவேற்கத்தக்க குறியீடான ஒரு சைகை என வெகுவாகப் பாராட்டியிருந்தன.

நீதி, சமத்துவம், நட்பு மற்றும் நல்லிணக்கம் என்பனவற்றில் நாட்டம் மிக்க ஸ்ரீலங்காவின் அனைத்து முற்போக்கு பிரிவினராலும, சம்பந்தன் மற்றும் சுமந்திரன் எடுத்து வைத்துள்ள சிறிய அடி தேசிய ஐக்கியத்துக்கான மிகப் பெரிய பாய்ச்சல் என புகழ்ந்துரைக்கப் பட்டிருந்தது.

துரதிருஸ்டவசமாக மூன்று வாரங்களுக்கு முன்னர் மிகப் பெரிய முன்னோக்கிய பாய்ச்சல் என்று கருதப்பட்டது, இப்பொழுது அரசியல் அடிப்படையில் பின்னோக்கிய ஒரு பெரும் பாய்ச்சல் என்று பின்னடைவாகக் கருதப்படுவதாகத் தோன்றுகிறது.

அப்போது தங்களது போற்றப்படும் செயலுக்காக புகழப்பட்ட சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் இப்போது அதே செயலுக்காக தேசியவாதிகள் என தங்களை காட்டிக்கொள்ளும் தமிழ் தீவிரவாத சக்திகளினால் வறுத்தெடுக்கப் படுகின்றனர்.

MAS-SLI-600x400சுதந்திரதின நிகழ்வில் பங்கெடுத்ததுக்காக அந்த இருவரும் தமிழர் விடயத்துக்கு தீங்கிழைத்துவிட்டார்கள் என குற்றம் சாட்டப்படுகிறார்கள். தேசியவாதிகள் எனும் போலி வேடமணிந்துள்ள தமிழ் தீவிரவாதிகளின் கண்களின் முன்னால் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் துரோகிகளாகத் தோன்றுகிறார்கள்.

அவர்கள் இருவருக்கும் எதிராக மூர்க்கத்தனமானதும் விஷமத்தனமானதுமான பிரச்சாரங்கள் திட்டமிட்டு முன்னெடுக்கப் படுகின்றன.

உலகளாவிய தமிழ் புலம் பெயர்ந்தவர்களிடையே உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் (எல்.ரீ.ரீ,ஈ) எச்சங்களால் கடந்த வாரங்கள் முழுவதும் அவர்கள் இருவரையும் விமர்சித்து சரமாரியான கட்டுரைகள் பத்திரிகைகளிலும் மற்றும் இணையத் தளங்களிலும் உலா வந்ததை காணக்கூடியதாக இருந்தது.

எல்.ரீ.ரீ,ஈ மற்றும் எல்.ரீ.ரீ,ஈ சார்பு சக்திகளால் நடத்தப்படும் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்கள் ஏற்பாடு செய்திருந்த விவாதங்களில் மக்கள் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் மீது மோசமான தாக்குதல்களை மேற்கொண்டிருந்தார்கள்.

அதற்கு மேலாக இணையங்களில் தொடர்ச்சியாக  தரக்குறைவான காட்சிகள் பரப்பப்பட்டு வந்துள்ளன. இந்த இணையத்தள வீரர்களும் கூட அவர்கள் இருவருக்கும் எதிரான யுத்தப் பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை சொல்லத் தேவையில்லை. எனினும் சம்பந்தன் மற்றும் சுமந்திரனை பாதுகாக்கவும் கூட சிலர் முயற்சித்து வருகிறார்கள்.

“லண்டன் தமிழர்;”

மேலும் இது தொடர்பாக ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றன! சம்பந்தன் மற்றும் சுமந்திரனின் உருவப் படங்கள் லண்டன் வீதிகளில் வைத்து தீவிரவாத தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து ஆர்ப்பாட்டங்களில் எரியூட்டப்பட்டன.

அதில் சம்பந்தப்பட்டிருந்தவர்கள் தமிழ் இளைஞர் பேரவை மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை என்பனவற்றை சேர்ந்தவர்கள்.

சம்பந்தன் மற்றும் சுமந்திரனின் பெரிய அளவிலான படங்கள் பாதணிகளால் அடிக்கப்பட்டு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.

சில காலத்துக்கு முன்பு முன்னாள் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கூட தமிழ் எதிர்ப்பாளர்களால் லண்டனில் வைத்து இவ்வாறு வரவேற்கப்பட்டது நினைவுகூரத் தக்கது. லண்டன் தமிழர்களால் திரும்பத் திரும்ப மேற்கொள்ளப்படும் இத்தகைய நிகழ்வுகள் “நக்குற நாய்க்கு செக்கு என்ன? சிவலிங்கம் என்ன”? என்கிற தமிழ் பழமொழியைத்தான் நினைவு படுத்துகிறது.

ஸ்ரீலங்கா விடயத்தில், சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோருக்கு எதிரான விமர்சனங்கள் புலம் பெயர்ந்தவர்கள் வட்டாரத்தில் இடம்பெற்றதைப் போல அட்டகாச ஆர்ப்பரிப்புடன் இங்கு இடம்பெறவில்லை.

குறிப்பிட்டுச் சொல்லும்படி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய இரண்டையும் தலைமை தாங்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலமத்தினால்   ஒரு முன்னிலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

ஒரு அரசியல்வாதி என்கிற பண்பில் இது அவரிடமிருந்து எதிர்பார்க்கக் கூடியதுதான். எதிர்பாராதது என்னவென்றால் ரி.என்.ஏ க்குள் இருந்து கிளம்பிய விமர்சனங்கள்தான்.

இலங்கைத் தழிரசுக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியருமான சிற்றம்பலம் பி.பி.சிக்கு வழங்கிய செவ்வியில் அவர்கள் இருவருக்கும் எதிரான  ஒழுங்கு  நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார்.

ரி.என்.ஏ பேச்சாளரான  கந்தையா பிரேமச்சந்திரன் என்கிற  சுரேஸ், அவர்களது பிரசன்னத்துக்கு கூட்டணி அங்கீகாரமளிக்கவில்லை எனத் தெரிவித்தார்.

வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் தனது பங்குக்கு சர்ச்சையை கிளப்பும் சில கருத்து முத்துக்களை வாய்மலர்ந்தருளினார்.

பொதுவாக ஸ்ரீலங்கா தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பனவற்றிலுள்ள சில உட்பிரிவினர் யாழ்ப்பாணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வை அரங்கேற்றினார்கள்.

பெப்ரவரி 21ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு காணாமற் போனவர்கள் மற்றும் தவறிப் போனவர்கள் தொடர்பான கவனத்தை இழுப்பதற்கான ஆhப்பாட்டம் என்று வெளிப்படையான காரணம் சொல்லப்பட்டது.

யாழ்பாண மத்திய பேரூந்து நிலையத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்கள்   1974 ஜனவரி 10ல் நடந்த அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி இருந்த இடத்தை நோக்கி வைத்தியசாலை வீதி மற்றும் காங்கேசன்துறை வீதி வழியாக ஊர்வலமாகச் சென்றார்கள்.

சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக கோஷங்களை எழப்பியவாறு இளைஞர்களும் அதில் சென்றபோது, அதைப் பாhத்து நின்றவர்கள் காணாமற் போனவர்களின் நிலை பற்றிய கவனயீர்ப்பு ஆhப்பாட்டத்தில் இப்படியான கோஷங்கள் எப்படி எழுப்பப்படலாம் என எண்ணித் திகைப்படைந்தார்கள்.

அந்த ஊர்வலத்தில் இருந்த சில இளைஞர்கள் முதலில் ரி.என்.ஏ தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனது உருவப் பொம்மையை யாழ்ப்பாண வீதிகள் வழியாக இழுத்துச் செல்ல முயன்றார்கள்.

பின்னர் அவர்கள் தங்கள் திட்டத்தை சில காரணங்களுக்காக மாற்றிக் கொண்டு அதை வட மாகாணசபை உறுப்பினரான தற்பொழுது காணாமற் போனவராக அறிவிக்கப்பட்டுள்ள மூத்த புலித் தலைவரான எழிலனின் மனைவியான அனந்தி சசிதரனுக்குச் சொந்தமான வாகனத்துள் வைத்தார்கள்.

பின்னர் அந்த உருவப் பொம்மை பேச்சுக்கள் நடைபெறும் இடத்துக்கு வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு தீயிட்டுக் கொழுத்தப் பட்டது. சுமந்திரனின் கொடும்பாவி கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நினைவுத்தூபியின் முன் வைத்தே எரிக்கப்பட்டது. இந்த கொடும்பாவி எரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கும்பல்களின் தலைவர்கள் அனந்தி சசிதரனின் உதவியாளர்களே.

“கொடும்பாவி”

இந்த உருவப் பொம்யை எரிப்பது, விவசாயக் கிராமங்களில் விவசாயத்துக்கு மழையை வேண்டி நடத்தப்படும் ஒரு பண்டைய பழக்கமாகும்.

மழை இல்லாமல் வரட்சி ஏற்படும்போது, கிராமவாசிகள் கொடும்பாவி எனப்படும்  ஒரு உருவப்   பொம்மையை செய்வார்கள்.

இந்த நம்பிக்கை எப்படியானது என்றால்  மழையை வரவிடாமல் தடுத்து கடவுள் அவர்களைத் தண்டிக்கிறார், ஏனென்றால் மக்கள் பல பாவங்களைச் செய்திருக்கிறார்கள்.

அதற்குப் பரிகாரமாக மக்கள் மனந்திரும்பி மழை வேண்டி கடவுளை நோக்கி தவஞ்செய்ய வேண்டும். கொடும்பாவி எனப்படும் உருவப்பொம்மை தான் அந்த பாவங்களின் அடையாளம்.

அந்த நாட்களில் மக்கள் அந்த உருவப் பொம்மையுடன் “கொடும்பாவி சாகானோ? கோடி மழை பெய்யாதோ?” என பாடியபடி ஊர்வலமாகச் செல்வார்கள்.

இறுதியாக அந்த உருவப் பொம்மையை எரியூட்ட வேண்டும். அதனால் கடவுளை அவர்கள் சமாதானப்படுத்துவதாகவும், கடவுள் அவர்களை மன்னித்து மழையை பெய்யச் செய்து அவர்களை ஆசீர்வதிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த பண்டைய வழக்கம் இப்போது விவசாயிகள் மற்றும் விவசாய சமூகங்கள் மத்தியில் கிட்டத்தட்ட அழிந்துவிட்டது. எனினும் ஸ்ரீலங்கா அரசியல்  இந்த பண்டைய வழக்கத்தை கடந்த பல வருடங்களாக தொல்லை தரும் நச்சுப் பழக்கமாகத் தவறாக கையாண்டு சிதைத்து வருகிறது.

தமிழ் அரசியல்வாதிகளின் கொடும்பாவிகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அவர்களின் எதிராளிகளினால் எரிக்கப்படுகிறது. அநேக சிங்கள மற்றும் இந்திய தலைவர்களின் கொடும்பாவிகள் கூட எரிக்கப்பட்டிருக்கின்றன.

தமிழ் அரசியல்வாதிகளின் கொடும்பாவிகள் துரோகிகள் எனக் கூறப்பட்டு இவ்வாறு எரிக்கப்பட்டிருக்கின்றன. வழக்கமாக இத்தகைய நடவடிக்கைகள் தங்கள் குற்றத்தை தவிர்ப்பதற்காக தலைவர்கள் பொதுமக்களிடமிருந்து தூரத்தை கடைப்பிடிக்கும்போது சீற்றமடையும் அரசியல் ஆர்வலர்களால மேற்கொள்ளப் படுகின்றன.

இங்கு குறிப்பிட்டுக் கூறவேண்டியது என்னவென்றால் ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனது  கொடும்பாவி எடுத்துச் சென்று எரிக்கப்பட்டபோது, ரி.என்.ஏயின் உயர்மட்டக் குழவினர் பலர் அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்திருந்தார்கள்.

எல்.ரீ.ரீ.ஈயினது ஊதுகுழல் “தமிழ்நெற்” சொல்வதின்படி, ரி.என்.ஏயின் வட மாகாணசபை உறுப்பினர்கள் அனந்தி சசிதரன், மற்றும் கஜதீபன், ரி.என்.ஏ பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரான அனுபவம் வாய்ந்த பேராசிரியர் எஸ்.கே. சிற்றம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி அரசியல்வாதிகள் செல்வராஜா கஜேந்திரன், மணிவண்ணன், மேல் மாகாண ஜனநாயக மக்கள் முன்னணி ஊடக ஒருங்கிணைப்பாளர் பி.பாஸ்கரா மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த அநேக ரி.என்.ஏ சிவில் சமூக அங்கத்தவர்கள் அப்போது அந்த பேரணியில் கலந்து கொண்டிருந்தார்கள்.

இருந்தும் தங்கள் சக ரி.என்.ஏ அங்கத்தவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் உருவப் பொம்மை எரிப்பதை தடுத்து நிறுத்த அவர்கள் யாரும் முன்வரவில்லை.

அனந்தி சசிதரன் பேசிக்கொண்டிருந்த வேளையிலேயே, உண்மையான எரியூட்டல் சம்பவம் இடம்பெற்றது. அந்த கொடும்பாவி அவரது வாகனத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு நிலத்தில் வீசப்பட்டு காலால் மிதிக்கப்பட்ட பின்னர் எண்ணையூற்றி எரிக்கப்பட்டது.

பெப்ரவரி 21ல் நடைபெற்ற சுமந்திரனது கொடும்பாவி எரிப்பு சம்பவம் பற்றி பெப்ரவரி 25ல் நடைபெற்ற வட மாகாணசபை கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சர் பாலசுப்பிரமணியம் டெனிஸ்வரானால் கேள்வி எழுப்பப்பட்டது. அந்தச் சம்பவம் பற்றி பெரிதும் கவலையடைந்த டெனிஸ்வரன், சுமந்திரனது கொடும்பாவி எரிப்பில் சில ரி.என்.ஏ அங்கத்தவர்களும் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்கிற உண்மையை எடுத்துக்கூறி அதற்காக வருத்தப்பட்டார். டெனீஸ்வரன் மன்னார் மாவட்டத்திலிருந்து தெரிவானவர்.

அனந்தி சசிதரன்


டெனிஸ்வரன் எவருடைய பெயரையும் குறிப்பிடாத போதிலும், சட்டென்று எழுந்த ஆனந்தி தொப்பி தனது தலைக்குத்தான் பொருத்தம் என நிரூபித்தார். தங்களுடைய காணாமற் போனவர்களின் நிலை பற்றி கவலையிலிருந்த அவர்களுடைய குடும்ப அங்கத்தவர்கள் உணர்ச்சி பூர்வமாக கிளர்ச்சியடைந்து உடனடியாக எதிர்பாராத இந்த எரியூட்டலில் ஈடுபட்டார்கள் என்று அவர் சொன்னார். அது எதிர்பாராமல் தன்னிச்சையாகவும் உடனடியாகவும் நடந்துவிட்டதால் தன்னால்கூட அதை தடுத்து நிறுத்த முடியவில்லை என்று அனந்தி தெரிவித்தார்.

அனந்தியின் அப்பட்டமான பொய்களை சபையின் துணைத் தலைவர் அன்ரன் ஜெயநாதன் உடனடியாக மறுத்துரைத்தார். அவர் கோபத்துடன் அனந்தியை நோக்கி “ அந்த நடவடிக்கை எதிர்பாராத தன்னிச்சை சம்பவமாக இருந்தால், எப்படி அந்த உருவப் பொம்மை முன்கூட்டியே தயாரிக்கப்பட்டு சம்பவம் நடந்த இடத்துக்கு உங்களுடைய வாகனத்தில் எடுத்து வரப்பட்டது? என்று கேட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில்  இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயநாதன், சுமந்திரன் சிறந்த புத்திசாலி என்பதை உள்ளுர் பாஷையில் “மண்டைக்காய்” என வாணித்தார். காணாமற்போனவர்களின் குடும்ப அங்கத்தவர்களின் எதிர்பாராத தன்னிச்சையான கோபத்தில் நிகழ்ந்தது என்கிற அனந்தியின் விளக்கத்துக்கு சூடு கொடுக்கும் விதமாக அவர்  “தங்களுடைய உறவினர்கள் இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டதற்காக ஏன் அவர்கள் சுமந்திரனது கொடும்பாவியை எரிக்க வேண்டும்”? என்று பதில் கேள்வி தொடுத்தார்.

“புலிகளினால் பிடித்துச் செல்லப்பட்டவர்களது குடும்பங்கள் யாருடைய கொடும்பாவியை எரிக்கவேண்டும்?” என்று மற்றொரு எதிர் கேள்வியை தொடுத்து அவர் அனந்தியை மௌனமாக்கினார். அனந்தியின் கணவர் எழிலன் மீது பெருமளவு இளைஞர்களை கட்டாய ஆட்சேர்ப்பு மூலமாக யுத்தத்தில் இணைத்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்ததால் இந்த அடி அவர்மீதுதான் விழுந்தது.

(இந்த எழுத்தாளர் தனது முந்தைய கட்டுரைகளில் மனித நேயத்துக்கு விரோதமாக எழிலன் புரிந்துள்ள குற்றங்களையும் மற்றும் மனித உரிமை மீறல்களையும் பற்றி விரிவாக வெளிக்காட்டி உள்ளார்)

ஜெயநாதனது கோபமான வெளிப்பாட்டால் அனந்தி மௌனமாக்கப்பட்ட அந்த வேளையில் மற்றொரு மாகாணசபை உறுப்பினர் அந்தப் போட்டிக்குள் நுழைய முயன்றார். அது வேறு யாருமல்ல ரி.என்.ஏ யின் பேச்சாளரும் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் என்கிற பிரேமச்சந்திரனது சகோதரர் கந்தையா சர்வேஸ்வரன்தான் அவர்.

அப்போது சபைக்கு தலைமை தாங்கியிருந்த வட மாகாணசபை தலைவர் சி.வி.கே சிவஞ}னம், சர்வேஸ்வரன் பேசுவதற்கு அனுமதி மறுத்ததுடன் சபையில் இந்த கொடும்பாவி விடயத்தை பற்றி பேசுவதற்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

சபையில் இந்த பரபரப்பு தணிந்து விட்டபோதிலும், இந்த சர்ச்சை வெறுமனே நின்றுவிடும் என்பது சந்தேகம்தான். போலி தேசியவாதிகளின் லண்டன் சம்பவத்தை பைத்தியக்கார தமிழ் வெறியர்களின் வேலை என்று தள்ளிவிட்டாலும் கூட, ரி.என்.ஏ சக்திகளினால் ஸ்ரீலங்காவில் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் தாக்கப்படுவதை தள்ளிவிட முடியாது.

ரி.என்.ஏயின் முக்கிய உறுப்பான இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு மார்ச் 1, ஞ}யிறு அன்று வவுனியாவில் கூட உள்ளது. அப்போது இந்த விடயம் பற்றி விரிவான விவாதம் மற்றும் அது பற்றிய மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.

(தொடரும்)

Leave a Reply

Share.
Leave A Reply

Exit mobile version