மாகோ: கரீபியன் தீவில் உள்ள மாகோ கடற்கரையில் சுற்றுலாப்பயணிகள் குளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், பிரம்மாண்டமான பயணிகள்  விமானம் ஒன்று கடலில் மிதந்து வருவது போல் தோற்றமளித்தது.

அப்போது அந்த விமானம் கடலுக்கு மிக நெருக்கமாக வந்து கொண்டிருப்பது  தெரிந்தது. விமானத்தின் அந்த இடத்தை கடக்கும் நேரத்தில் கடற்கரையை இருட்டாகிறது. கடற்கரையில் உள்ளோர் அந்தஅரிய காட்சியை தங்கள்  கேமராக்களில் பதிவு செய்தனர்.

இன்னும் சிலர் விமானத்தின் முன் நின்று செல்பி எடுக்க முயற்சி செய்தனர். விமானம் கடற்கரையை நெருங்கி வந்ததும் அனைவரும் விமானத்தை  தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையில் உற்சாகமாக கத்தியபடி துள்ளிக்குதிக்கின்றனர்.

சில அடி தூரத்தில் விமானம் தொடமுடியாத தரத்தில் செல்கிறது. பின்னர், செயின்ட் மார்டினில் உள்ள பிரின்சஸ் ஜூலியானா சர்வதேச விமான  நிலையத்தில் அந்த விமானம் பத்திரமாக தரை இறக்கப்பட்டது.

264E7BED00000578-2979014-The_aircraft_is_captured_in_slow_motion_as_it_approaches_Princes-a-37_1425496171989

 

Share.
Leave A Reply

Exit mobile version