பெங்களூரு: ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ள சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீது கடந்த 38 நாட்களாக நடந்து வந்த விசாரணை நேற்று நிறைவடைந்தது. வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கும் தேதி நாளை மறுநாள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்பட நான்கு பேர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன் நேற்று விசாரணை நடந்தது. அரசு தரப்பு வக்கீல் பவானிசிங் தனது இறுதி வாதத்தை தொடங்கினார்.
அவர் வாதம்: குற்றவாளிகள் வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்த்துள்ளதை அரசு தரப்பில் தனி நீதிமன்றத்தில் உரிய, சாட்சி ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளோம். முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு வழக்கு காலத்திற்கு முன்பு இருந்த அசையும் மற்றும் அசையா சொத்து எவ்வளவு…..,
மற்ற குற்றவாளின் உண்மையான ஆண்டு வருமானம் எவ்வளவு, வழக்கு காலத்தில் அவர்கள் பல கம்பெனிகளில் இயக்குனர் மற்றும் பங்குதாரராக இருந்து கோடிக்கணக்கில் பணபரிமாற்றம் செய்தது, அந்த பணம் யார் மூலம் எப்படி வந்தது என்பன உள்பட பல விவரங்கள் தனி நீதிமன்றத்தில் மட்டுமில்லாமல், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையிலும் உறுதி செய்துள்ளோம்.
முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு சொந்தமான சென்னை போயஸ் கார்டனில் உள்ள இரண்டு வீடுகள் யி7.50 கோடி மதிப்பிலும், ஆந்திர மாநிலம் ஐதராபாத் திராட்சை தோட்டத்தில் உள்ள வீடு ரூ.5.50 கோடி செலவிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளதை ஆதாரத்துடன் தெரிவித்துள்ளோம்.
மேலும் நான்கு குற்றவாளிகளுக்கு சொந்தமான வீடு, பங்களா உள்பட கட்டிடங்களின் மொத்த மதிப்பு ரூ.28 கோடியாகவுள்ளது. அதையும் உரிய ஆதாரத்துடன் நிரூபித்துள்ளோம். மேலும் ஜெயலலிதாவுக்கு சொந்தமான திராட்சை தோட்டம் மற்றும் பண்ணை தோட்டங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது.
நமது எம்.ஜி.ஆர். பத்திரிகைக்கு சந்தா மூலம் ரூ.14 கோடி வசூல் செய்ததாக கூறியுள்ளனர். ஆனால் அது முழுக்க முழுக்க வருமானத்திற்கு அதிகம் சேர்த்த பணத்தை பத்திரிகைக்கு டெபாசிட் என்ற பெயரில் மாற்றம் செய்துள்ளதையும் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளோம்.
குற்றவாளிகளுக்கு சொந்தமான கம்பெனிகளுக்கு தமிழகத்தின் பல பகுதியில் யி9 கோடிக்கும் அதிகம் ரொக்கம் கொடுத்து பல ஆயிரம் ஏக்கர் நிலம் வாங்கி குவித்துள்ளதையும் உறுதி செய்துள்ளோம்.
குற்றவாளிகளுக்கு சொந்தமான தங்க, வைர, வெள்ளி ஆபரணங்கள், வாகனம் ஆகியவை வழக்கு காலத்திற்கு முன் எவ்வளவு இருந்தது, வழக்கு காலத்தில் வாங்கியது எவ்வளவு என்ற விவரங்களை யும் புள்ளி விவரங்களையும் முழுமையாக உறுதிபடுத்தி உள்ளோம்.
வழக்கின் 3வது குற்றவாளியான சுதாகரனுக்கு 6 கோடி செலவில் திருமணம் செய்தது, வரவேற்பு, மின் அலங்காரம், அழைப்பிதழ், இசை நிகழ்ச்சி, உணவு பரிமாற்றம், வி.வி.ஐ.பிகளுக்கு நினைவு பரிசு வழங்கியதையும் நிரூபித்துள்ளோம் என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘குற்றவாளிகளுக்கு சொந்தமான வீடுகளில் மார்பில் மற்றும் டைல்ஸ் வாங்கியது தொடர்பாக நீங்கள் கூறியுள்ள கணக்கு சரியானதா?’ என்றார். அதற்கு பதிலளித்த வக்கீல் பவானிசிங், ‘ஒரு சதுர மீட்டர் மார்பில் யி1,800 கொடுத்து வாங்கியதாக மதிப்பீட்டாளர்கள் கூறியுள்ளனர்’ என்றார்.
‘வழக்கு பதிவு செய்த காலத்தில் நீங்கள் சொல்லும் விலையில் மார்பில் இருக்க வாய்ப்பில்லை. வேண்டுமானால் யி100 முதல் 150 வரை இருக்கலாம். தொகையை மிகைப்படுத்தி காட்டியுள்ளீர்கள்’ என்று அதிருப்தி தெரிவித்தார்.
அதற்கு பதில் சொல்லாமல் பவானிசிங் மவுனமாக இருந்தார். அதைத் தொடர்ந்து, அவர் வாதிடும் போது, ‘குற்றவாளிகள் மீது ரூ.66.65 கோடி வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்த்துள்ளதாக குற்றம்சாட்டி அதற்கான ஆதாரம் தனிநீதிமன்றத்தில் கொடுத்தோம்.
நீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பில் சில தவறுகளை காரணமாக வைத்து யி11 கோடியை தள்ளுபடி செய்து, யி55 கோடி வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்த்ததாக உறுதிப்படுத்தி குற்றவாளியாக தீர்ப்பளித்துள்ளது. அந்த தீர்ப்பை இந்நீதிமன்றமும் உறுதி செய்து நியாயத்தை நிலைநாட்ட வேண்டும்’ என்று கூறி தனது வாதத்தை நிறைவு செய்தார்.
அதை தொடர்ந்து குற்றவாளிகள் தரப்பில் டெல்லியில் இருந்து வந்திருந்த மூத்த வக்கீல் நாகேஷ்வரராவ் வாதிட்டார். அவர் வாதம்: எங்கள் கட்சிக்காரர்களை அரசியல் ரீதியாக பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வழக்கு தொடரப்பட்டது.
இந்திய தண்டனை சட்டம், இந்திய ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது தவறு. முதல் குற்றவாளியான ஜெயலலிதா வீட்டில் மற்ற மூன்று குற்றவாளிகள் வசிக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் கூட்டு சதி செய்ததாகவும், பினாமி பெயரில் சொத்து வைத்துள்ளதாகவும் கூறப்படுவது சரியல்ல.
பொது ஊழியர் யார், தனிநபர் யார் என்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் பல கால கட்டங்களில் பல்வேறு விதமான தீர்ப்புகள் வழங்கியுள்ளது. முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு வழக்கு காலத்திற்கு முன்பே சொந்தமான வீடு, திராட்சை தோட்டம், பண்ணை வீடு, ஆபரணங்கள் உள்பட அசையும் மற்றும் அசையா சொத்துகள் இருந்தது.
மற்ற மூன்று குற்றவாளிகளும் பல தொழில்கள் செய்து வந்துள்ளனர். ஆனால் முதல் குற்றவாளியை பயன்படுத்தி மற்றவர்கள் கூட்டு சதி செய்துள்ளார்கள் என்பது தவறான குற்றசாட்டாகும். அதை அரசு தரப்பில் உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்கவில்லை.
நமது எம்.ஜி.ஆர். நிறுவனத்திற்காக யி14 கோடி சந்தா மூலம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஒரு அரசியல் கட்சியின் பொதுச் செயலாளர் தனது கட்சி தொடர்பான தகவல்களை பத்திரிக்கை மூலம் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை தொடங்கினார்.
அதன் மேம்பாட்டிற்காக சந்தா என்ற பெயரில் வாசகர்களின் டெபாசிட் வசூலிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பல அரசியல் கட்சிகள் மற்றும் தனியார் பத்திரிகை நிறுவனங்களும் சந்தா வசூலிக்கிறது. அப்படி வசூலித்த தொகையை வருமானமாக சேர்த்துள்ளது தவறு.
மேலும் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வீடுகள் ரூ.13 கோடி செலவில் புதுப்பித்துள்ளதாக சொல்வது கட்டுக்கதை. வீடுகளுக்கு ரூ.3 கோடி மட்டுமே செலவிடப்பட்டது. மேலும் நான்கு குற்றவாளிகளுக்கு சொந்தமான வீடு, பங்களா உள்பட கட்டிடங்கள் ரூ.28 கோடி செலவில் கட்டியுள்ளதாக டிவிஏசி சொல்வது பொய்யான கணக்காகும். அந்த கட்டிடங்களுக்கு யி10 கோடி மட்டுமே செலவு செய்துள் ளோம். அதை வருமான வரித் துறையிலும் கணக்கு காட்டியுள்ளோம்.
வருமான வரி தீர்ப்பா யம் வழங்கியுள்ள தீர்ப்பை எந்த வகையிலும் புறக்கணிக்க முடியாது. மேலும் வி.என்.சுதாகரன் திருமணத்திற்கு ரூ.29 லட்சம் மட்டுமே ஜெயலலிதா செலவு செய்துள்ளார். அதற்கான ஆதா ரம் கொடுத்துள்ளோம்.
திராட்சை தோட்டம் மற்றும் விவசாயத்தின் மூலம் ஓராண்டில் ரூ.52 லட்சம் என்ற வகையில் 5 ஆண்டுகளில் யி2.50 கோடி வருமானம் கிடைத்துள்ளது. அதை டிவிஏசி வருமானமாக கணக்கில் எடுக்கவில்லை.
மேலும் கடந்த 1992ம் ஆண்டு ஜெயலலிதாவின் 44வது பிறந்த நாளின் போது கட்சி தொண்டர்கள் மூலம் ரூ.2.15 கோடி பரிசாக கிடைத்தது. அதில் ரூ.77.52 லட்சம் வெளிநாட்டில் இருந்து கிடைத்தது. அதை வருமானமாக ஏற்றுக் கொள்ளாமல், வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டி இருப்பது தவறு. மேலும் எனது கட்சிக்காரருக்கு வழக்கு காலத்திற்கு முன்பே 28 கிலோ தங்க, வைர ஆபரணங்கள், வெள்ளி பொருட்கள் இருந்தது. டிவிஏசி குற்றம்சாட்டியுள்ள புகாருக்கு முழுமையான ஆதாரம் தனி நீதிமன்றத்தில் கொடுத்தும், அதை கருத்தில் கொள்ளாமல் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டது.
குற்றவாளிகள் என்றும், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் யி100 கோடி வரை அபராதம் விதித்து தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சட்டப்படி தவறானதாகும். இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பாகும். முதல் குற்றவாளியான ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலம் பாழாகியுள்ளது. ஆகவே தனிநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து அனைவரும் விடுதலை செய்ய வேண்டும் என்றார்.
நாளை மறுநாள்: நேற்று இறுதி வாதம் முடித்த அரசு வக்கீல் பவானிசிங், சுமார் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வமான ஆவணங்களை தாக்கல் செய்தார். அதை பார்த்த நீதிபதி இவ்வளவு ஆவணங்களா? என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.
அதற்கு பவானிசிங், குற்றவாளிகள் தரப்பில் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதில் கொடுப்பது எனது கடமை. வாதம் செய்தபோது மறந்துவிட்ட சில தகவல்கள் உள்பட குற்றவாளிகள் தரப்பு வாதத்திற்கு பதில் கொடுக்க இது அவசியம் என்றார்.
அதைத் தொடர்ந்து சுப்ரமணிய சுவாமி எப்போது எழுத்து பூர்வமான ஆவணம் தாக்கல் செய்கிறார் என்று நீதிபதி கேட்டதற்கு மார்ச் 9ம் தேதி என்று பதிலளித்தார். பின் தி.மு.க மனு என்னவானது என்ற நீதிபதியின் கேள்விக்கு அம்மனுவும் உச்சநீதிமன்றத்தில் மார்ச் 9ம் தேதி விசாரணைக்கு வருவதாக தெரிவித்தார். இதனால், நாளை மறுநாள் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
38 நாள் நடந்த வாதம்:
ஜெயலலிதா உள்பட நான்கு பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த ஜனவரி 5ம் தேதி முதல் நேற்று வரை 38 நாட்கள் நடந்தது. ஜெயலலிதா, சார்பில் வக்கீல் நாகேஷ்வரராவ் 9 நாட்களும், சசிகலா தரப்பில் வக்கீல் பசந்த் 9 நாட்களும், சுதாகரன், இளவரசி சார்பில் வக்கீல் சுதந்திரம் 8 நாட்களும், அரசு தரப்பில் பவானிசிங் 7 நாட்கள் வாதம் செய்தனர்.
இடையில் குற்றவாளிகள் தரப்பில் வக்கீல் குமார் சில நாட்களும், கம்பெனிகள் சார்பில் வக்கீல்கள் உதயஹொள்ளா, ஜெயகுமார்பாட்டீல், தி.மு.க. சார்பில் தாக்கல் செய்த மனு மீது வக்கீல் பி.வி.நாகேஷ் ஆகியோர் வாதம் செய்தனர்.