விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு வெடிப்­பொ­ருட்கள் கடத்­திய குற்­றத்­திற்­காக இலங்கை அக­திகள் 3 பேருக்கு 7 ஆண்­டுகள் சிறைத்தண்­டனை விதித்து மதுரை நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

7 ஆண்­டு­க­ளுக்கு முன்னர், மதுரை சக்கி­மங்­க­லத்தில் உள்ள இலங்கை அக­திகள் முகா­முக்கு வெளி­மா­நி­லத்தில் இருந்து பயங்­கர   வெடி­குண்­டுகள்  தயா­ரிக்க பயன்­படும் இர­சா­யன   திரவம் கொண்டு   வரப்­பட்­ட­தா­கவும், அந்த திர­வத்தை மண்­டபம் அக­திகள் முகா­முக்கு கொண்டு சென்று பின்னர் படகு மூலம் இலங்­கையில் உள்ள விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு அனுப்ப இருந்ததா­கவும் கியூ பிரிவு பொலி­ஸா­ருக்கு இர­க­சிய தகவல் கிடைத்­தது.

அதன்­பேரில் பொலிஸார் சக்­கி­மங்­கலம் அக­திகள் முகாமில் கடந்த 8.4.2008 அன்று சோதனை செய்­தனர். அப்­போது 250 மில்லி கிராம் இர­சா­யன திர­வத்தை அவர்கள் கைப்­பற்­றினர்.

இது­தொ­டர்­பாக விசா­ரணை   நடத்­தி­யதில், இர­சா­யன திர­வத்தை இலங்­கைக்கு அனுப்பும் முயற்­சியில் அக­திகள் கண்ணன் (40), நவ­நீ­த­கி­ருஷ்ணன் (38), எட்வெட் ஜெயக்­குமார் (38), இலங்­கை­நாதன் (37) ஆகியோர் தொடர்பு பட்­டி­ருந்­தமை உறுதிப்படுத்­தப்­பட்­டதை அடுத்து அவர்­களை பொலிஸார் கைது செய்­தனர்.

இந்த வழக்கு மதுரை நீதி­மன்­றத்தில் நடை­பெற்­றது. இதில் எட்வெட் ஜெயக்­கு­மாரை  தவிர மற்­ற­வர்­க­ளுக்கு பிணை கிடைத்தது.  இதனையடுத்து இவர்களுள் சில நாட்­களில் கண்ணன் என்­பவர் இலங்­கைக்கு தப்பிச் சென்று விட்டார்.

இந்­நி­லையில் வழக்கு விசா­ரணை முடி­வ­டைந்த நிலையில், தலை­ம­றை­வான கண்ணனை தவிர மற்ற 3 பேருக்கும் தலா 7 ஆண்டு சிறைத்தண்டனையும், தலா 6ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து நீதிபதி என். வேங்கட வரதன் உத்தரவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version