மடு புகையிரத தரிப்பிடத்தில் இருந்து தலைமன்னார் பியர் புகையிரத தரிப்பிடம் வரைக்கும் பரீட்சார்த்த ரயில் சேவை இன்று(11) புதன் கிழமை காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம.வை.எஸ்.தேசப்பிரிய அவர்களினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 13 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் மறுநாள் 14 ஆம் திகதி மடுவில் இருந்து தலைமன்னாருக்கான புகையிரத சேவையினை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இந்த நிலையிலே இன்று புதன் கிழமை(11) காலை 10.50 மணியளவில் மன்னார் மாவட்ட அரசாங்;க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய அவர்களினால் மடு புகையிரத தரிப்பிடத்தில் இருந்து தலைமன்னார் பியர் புகையிரத தரிப்பிடம் வரையில் பரீட்சார்த்த புகையிரத சேவையை ஆரம்பித்து வைத்தார்.
குறித்த பரீட்சார்த்த புகையிரத சேவையினை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.வை.எஸ்.தேசப்பிரிய,புகையிரத திணைக்கள அதிகாரிகள் மற்றும் மன்னார் மாவட்ட செயலக அதிகாரிகள் ஆஅகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் நிதியுதவியுடன், மதவாச்சியிலிருந்து தலைமன்னார் வரையான வடக்கு மார்க்க ரயில் பாதை நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், இந்த திட்டத்திற்கென இலங்கை நாணயப் பெறுமதியில் சுமார் 2,530 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக ரயில்வே திட்டமிடல் பணிப்பாளர் தெரிவித்தார்.