எனக்கு இப்போது காதலன் இல்லை, எனவே, உடனடியாக திருமணம் செய்துகொள்ள வாய்ப்பில்லை என்கிறார் நம்ம ஸ்ருதிஹாசன்.

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன், தமிழ் , தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாது, பாடல்களை பாடியும் வருகிறார்.

திருமணம் குறித்து, ஸ்ருதிஹாசன் தற்போது மனம் திறந்துள்ளார். எனக்கு காதலர் இல்லை., அதன்காரணமாக, உடனடியாக திருமணம் செய்துகொள்ள வாய்ப்பில்லை.

நான் இன்னும் பல்வேறு வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க வேண்டியுள்ளது. இன்னும் 6 ஆண்டுகள் நடித்த பிறகு தான், திருமணத்தை பற்றியே யோசிக்க உள்ளேன்.

என்னுடைய பாத்திரங்களை பார்த்து, எனது ரசிகர்களுக்கு வெறுப்பு வரும்வரை தொடர்ந்து தான் நடிக்க உள்ளேன் என்கிறார் ஸ்ருதிஹாசன்.

Shruthi_Haasan_(14) copie

Share.
Leave A Reply

Exit mobile version