காதலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது சென்னை மாணவி அருணா கொலை சம்பவம். சென்னை சூளை சட்டண்ணநாயக்கன் தெருவை சேர்ந்தவர் அருணா. பி.காம் படித்து விட்டு ஆடிட்டிங் சம்பந்தமாக படித்து வந்தார்.
அவரது வீட்டில் வறுமை என்றாலும் அருணாவை அவரது பெற்றோர் சிரமங்களுக்கு நடுவே படிக்க வைத்தனர். இதை உணர்ந்த அவரும் படிப்பில் சுட்டியாக இருந்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை நம்மாழ்வார்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த தினேசுடன் அருணாவுக்கு பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்துள்ளது. என்ஜினீயரிங் முடித்த தினேஷ் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
கடந்த 10ஆம் தேதி தினேஷ் வீட்டுக்குச் சென்ற அருணா கொலை செய்யப்பட்டுள்ளார். காதலியை கொலை செய்து விட்டு அவரை சாக்குமூட்டையில் கட்டி கார் மூலம் கொண்டு செல்ல தினேஷ் முயற்சித்தப் போது அவரால் முடியவில்லை.
இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு தினேஷ் கூப்பிட, சாக்கு மூட்டையிலிருந்து ரத்தம் கசிந்ததால் அவர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தினேஷிடம் கேட்க முன்னுக்குப்பின் முரணான தகவலை அவன் தெரிவித்தான்.
அதோடு அங்கிருந்து அவன் ஓட்டம் பிடித்தான். இதுகுறித்து தலைமை செயலக காலனி காவல் நிலையத்துக்கு மக்கள் தகவல் தெரிவிக்க அவர்கள் வந்து அருணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த வழக்கை விசாரிக்கும் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “பிரேத பரிசோதனையில் அருணா கண்ணாடி பூந்தொட்டியால் தாக்கப்பட்டும், கழுத்தை நெரித்தும் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
அவர் பாலியல் வன்முறையில் ஈடுபடுத்தற்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது.
கொலையாளி பிடிப்பட்டால் மட்டுமே என்ன நடந்தது என்பது தெரியவரும். தலைமறைவான தினேஷ் அடிக்கடி இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு வருகிறான்.
இதனால் அவனைப் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் விரைவில் கைது செய்து விடுவோம்” என்றார்.
இந்த சம்பவத்தில் காதல் ஜோடி தனிமையில் இருந்த போது இனிமை காண தினேஷ் நினைத்து இருக்க வாய்ப்புள்ளதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இதற்கு அருணா சம்மதிக்காததால் தினேசுக்கும் அவருக்கும் இடையே போராட்டம் நடந்திருக்கிறது.
கற்பை காப்பாற்றிக் கொள்ள அருணா கடுமையாக போராடி இறுதியில் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
இதற்கு ஆதாரமாக நகக்கீறல்கள் அருணாவின் உடலில் ஆங்காங்கே காணப்படுவதாக காவல்துறையினர் சொல்கிறார்கள்.
அருணா கொலை செய்யப்பட்டப்பிறகு அவருடன் தினேஷ் சந்தோஷமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது.
இருப்பினும் முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கை வந்தப்பிறகே எதையும் சொல்ல முடியும் என்கின்றனர் விவரம் தெரிந்த காவல்துறையினர்.
இந்த சம்பவத்தில் இரண்டு ஆண்டுகளாக காதலித்த தினேசுக்கு அன்றைய தினம் காதலியின் அன்பை விட காமம் அவனது கண்ணை மறைத்து இருக்கிறது. இதுவே அவனை கொலைக்காரனாக இன்று மாற்றி இருக்கிறது.
திருமணத்துக்கு முன்பு கற்பை இழக்க விரும்பாத அருணாவுக்கு அன்று தான் தினேசின் சுயரூபம் தெரிந்து இருக்கும்.
அதற்கு அருணா மறுப்பு தெரிவித்ததால் கொலை செய்யும் அளவுக்கு தினேஷ் துணிந்து இருக்கிறான். இது தான் இன்றைய பெரும்பாலான காதலர்களின் நிலை என்று வருத்தப்படுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
‘கண்டதும் காதல் கொண்டதும் கோலம்’ என்ற கோட்பாட்டில் பல காதல் ஜோடிகள் உலா வருகின்றனர்.
பொது இடம் என்று கூட பார்க்காமல் சில காதலர்கள் செய்யும் அநாகரீக செயல்கள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை முகம் சுளிக்க வைக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலில் மெரீனா கடற்கரை மணலில் அமர்ந்து அட்டகாசம் செய்யும் காதலர்களும் இருக்கிறார்கள்.
தனிமை கிடைத்தும் தவறு செய்ய மறுத்த அருணா போன்ற காதலிகளும் இன்று இருக்கத் தான் செய்கிறார்கள்.
அவர்களுக்கு அருணாவின் கொலை ஒரு எச்சரிக்கை. தினேஷ் போன்ற காதலர்களை அடையாளம் கண்டு அவர்களை விட்டு விலகாவிட்டால் ஒருநாள் அருணாவின் நிலை ஏற்படலாம். இல்லையெனில் கற்பை இழந்து ஏமாந்து தவிக்க வேண்டியதிருக்கும்.
காதலிப்பது தவறில்லை. திருமணத்துக்கு முன்பு எல்லை மீறுவதுத் தான் தவறு. உண்மையான காதலில் காமம் இருப்பதில்லை. அங்கு அன்பு மட்டுமே நிலைகொள்ளும்.