குவைத் நாட்டில் உயிரிழந்த மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்ணின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை (13) காலை சத்துருக்கொண்டானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மூன்றாம் குறுக்குத்தெருவில் வசித்து வந்த சோமசுந்தரம் சர்நீதியா (22) என்பவரே இவ்வாறு குவைத்தில் உயிரிழந்தார்
.
ஆரம்ப காலத்தில் உறவினர்களுடன் தொடர்புகொண்டு கதைத்த இவரைப் பற்றி கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தகவல் எதுவுமில்லாததால் யுவதியின் உறவினர்கள் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்
.
இந்த பெண்ணின் உறவினர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினால் அதன் அலுவலகத்துக்கு வருகை தருமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டது
.
நேற்றைய தினம் வியாழக்கிழமை (12) இரவு வீட்டிற்குக் கொண்டுவரப்பட்ட சடலம் உடனடியாக நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த பெண் நான்கு வயதுடைய குழந்தையையுடைய கைம்பெண் ஆவார்.