முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்து திருட்டு வழியில் பணம் சம்பாதித்தமை தொடர்பில், அவரை பணச் சலவை சட்டமூலத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரியவருதாக லங்கா ஈ நிவ்ஸ் சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சட்டரீதியான பாதுகாப்பு நிறுவனத்தை நடத்துவதாக காட்டி அதன் ஊடாக பெருமளவிலான ஆயுதங்களை சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுக்கு விற்பனை செய்ததாக கோத்தபாய மீது குற்றம் சுமத்தப்படுகிறது.

அவற்றின் மூலம் கிடைத்த கோடிக்கணக்கான பணத்தை அரசாங்கத்தின் பொது நிதியத்தில் வைப்புச் செய்யாது, அதனை தனிப்பட்ட ரீதியில் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் அவரை பணச் சலவை சட்டமூலத்தின் கீழ் கைது செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களம் தயாராகி வருவதாக தெரியவருகிறது.

இதற்கு தேவையான சட்டமா அதிபரின் உத்தரவு ஏற்கனவே குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைத்துள்ளதாக திணைக்களத்தின் உட்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரக்னா லங்கா நிறுவனம் மற்றும் அதன் செயற்பாடுகளை மேலோட்டமாக அரச பாதுகாப்பு அமைச்சின் இணை நிறுவனம் என காட்டி, அதன் மூலம் பெருந்தொகையான வெளிநாட்டு அந்நிய செலாவணி ஈட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு கிடைத்த கோடிக்கணக்கான பணத்தில் பெரும்பாலான தொகை கோத்தபாய ராஜபக்சவும் அவருக்கு நெருக்கமானவர்களும் பகிர்ந்து கொண்டுள்ளனர். அந்நிய செலாவணி மோசடி தொடர்பில் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக பல முக்கியமான சாட்சியங்களை குற்றப் புலனாய்வு திணைக்களம் ஏற்கனவே கண்டறிந்துள்ளது.

கோத்தபாய 38 பேருக்கு அவர்கள் யார் என்று அறியாமலேயே மாதாந்தம் 90 லட்சம் ரூபாவை செலுத்தி வந்துள்ளார். எந்த வெளிப்படை தன்மையும் இன்றி இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சகல நிதி கொடுக்கல் வாங்கல்களும் கோத்தபாயவின் விருப்பத்திற்கு அமைய மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரக்னா லங்கா நிறுவனத்தை அரச நிறுவனம் என்று காட்ட கோத்தபாய முயற்சித்துள்ளார்.

எனினும் அந்த நிறுவனம் அரச நிறுவனம் என்ற போர்வையில் கோத்தபாயவினால் நடத்தப்பட்ட தனியார் நிறுவனம் என அரச கணக்காய்வாளர்களும், சட்டமா அதிபர் திணைக்களமும் சுட்டிக்காட்டியுள்ளன.

இப்படியான நிறுவனத்தை நடத்தி வெளிநாட்டு அந்நிய செலாவணியை ஈட்ட வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய சட்டம் அமுலில் இருக்க வேண்டும். எனினும் ரக்னா லங்கா நிறுவனத்தை நடத்திச் செல்ல அப்படியான அனுமதிகள் இருக்கவில்லை.

அத்துடன் நிறுவனத்தின் நிதி கொடுக்கல் வாங்கல்கள், அரச பொது நிதியத்துடன் சம்பந்தப்படாமல், வெளியில் இருந்து கையாளப்பட்டுள்ளது. பல பில்லியன் ரூபா பணம் இவ்வாறு வெளியில் கையாளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

உலகில் முக்கியமான பயங்கரவாத அமைப்புகள், கடற்கொள்ளை குழுக்களுடன் கோத்தபாய கொடுக்கல், வாங்கல்களை மேற்கொண்டதாக தெரியவந்ததை அடுத்து, இது குறித்து சர்வதேச பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த விசாரணைகளுக்கு இலங்கையின் உதவிகளை பெற சர்வதேச பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனடிப்படையில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உட்பட ஏனைய சந்தேக நபர்களை கைது செய்யுமாறு சட்டமா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின் அடிப்படையில் அடுத்த வாரத்தில் கோத்தபாய உட்பட சிலர் கைது செய்யப்பட உள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படம்…. தேர்தல் இரவில் மரண பயத்தில் நண்பர் வீட்டில் ஒளிந்திருந்த மைத்ரி.

Untitled108-600x430

Share.
Leave A Reply

Exit mobile version