எனக்கு குழந்தை தந்தால் சுகத்துடன் பணமும் தர தயார் என இளம் பெண்ணொருவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளமையானது பேஸ்புக் வலைத்தளத்தில் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
மேற்கு ருமேனியா நாட்டின் திமிசோராவைச் சேர்ந்த 25 வயதுயை அடினா அல்பு என்ற இளம் பெண்ணே இவ்வாறு பரபரப்பான பதிவேற்றத்தை பதிவு செய்துள்ளார்.
தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ள அடினா,
ஆண்கள் அனைவரும் மனதளவில் முதிர்ச்சியடையாதவர்களாக இருக்கிறார்கள். ஆண்களை எப்போதும் சந்திப்பது ஒரு பெரிய விடயம் இல்லை. ஆனால் தமக்கு ஒரு குழுந்தை தேவைப்படும் போது ஆண் ஒருவரை சந்திப்பதான பெரிய பிரச்சினையாகும்.
இதற்கு சம்மந்தம் என்றால் வைத்தியர்களிடம் பரிசோதனை மேற்கொண்டு விட்டு தன்னிடம் வரவேண்டும். இதனால் எனக்கு குழந்தையும் உங்களுக்கு சுகமும் தான் கிடைக்கப் போகின்றது. இது ஒரு சாதாரண விடயமாகும். இதேவேளை பெற்றோர் உரிமையை தனக்கே வழங்கி விட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இவருடைய பதிவேற்றத்துக்கு பேஸ்புக்கில் ஆதரவான கருத்துக்கள் பதியப்பட்டுள்ள அதேவேளை கடுமையான எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.