இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ் இளைஞர் ஒருவர் கீரிமலையில் வைத்து கைகுலுக்கிய சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியப்பிரதமரின் பயண ஏற்பாட்டில் நிகழ்ந்த பாரதூரமான பாதுகாப்பு ஒழுங்கீனமாக இந்தச் சம்பவத்தை இந்திய அரசு நோக்குவதாகவும், அதனாலேயே இது தொடர்பில் முழுமையான விசாரணை மேற் கொள்ளப்பட வேண்டும் என்று இந்திய பிரதமர் அலுவலக செயலகம் உத்தரவிட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு வலயத்தை மீறி குறித்த மாணவன் உள்நுழைந்து கைலாகு தொடர்பிலேயே தற்போது விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மேற்படி சம்பவத்தை மோசமான பாதுகாப்புக் குறைபாடாக எடுத்துக் கொண்டுள்ள, இந்தியப் பிரதமர் செயலகம், உடனடியாக உயர் மட்ட விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.
சிறிறஜீவன் என்னும் இந்தப் புகைப்படத்தில் இருப்பவர் தனது பிரபலத்திற்காக இவ்வாறான செயற்பாடுகளைச் செய்து வருவதாக அவரது நண்பர்கள் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்திருந்தனர்.