ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.பௌஸி, எஸ்.பி.திசாநாயக்க, ஜனக பண்டார தென்னகோன், பீலிக்ஸ் பெரேரா, மஹிந்த யாப்பா, ரெஜினோல்ட் குரே மற்றும் மஹிந்த அமரவீர உள்ளிட்ட 26 பேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அமைச்சர்களாக இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
11 பேர் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களாகவும் 10 பேர் பிரதியமைச்சர்களாகவும் 5 பேர் இராஜாங்க அமைச்சர்களாகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
அந்த வகையில் புதிய அமைச்சர்களின் விபரம் வருமாறு,
- ஏ.எச்.எம்.பௌசி – அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்
- எஸ்.பி.திசாநாயக்க – கிராமிய பொருளாதார அமைச்சர்
- பியசேன கமகே – தொழிநுட்ப கல்வி அமைச்சர்
- பீலிக்ஸ் பெரேரா – விசேட செயற்திட்ட அமைச்சர்
- எஸ்.பி.நாவின்ன – தொழில் அமைச்சர்
- சரத் அமுனுகம – உயர் கல்வி அமைச்சர்
- விஜித் விஜதமுனி சொய்ஸா – நீர்ப்பாச அமைச்சர்
- ரெஜினோல் குரே – விமான சேவைகள் அமைச்சர்
- மஹிந்த அமரவீர – கடற்றொழில் அமைச்சர்
- ஜனக பண்டார தென்னகோன் – உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர்
- மஹிந்த யாப்பாய அபேயவர்த்தன – பாராளுமன்ற விவகார அமைச்சர்
பிரதி அமைச்சர்கள்
- லக்ஷ்மன் யாப்பாய அபேவர்த்தன – விமான சேவைகள் பிரதி அமைச்சர்
- லக்ஷ்மன் செனவிரத்ன – அனர்த்த முகாமைத்துவ பிரதி அமைச்சர்
- ஜகத் புஷ்பகுமார – பெருந்தோட்ட பிரதி அமைச்சர்
- லலித் திசாநாயக்க – நீர்ப்பாசன பிரதி அமைச்சர்
- திஸ்ஸ கரலியத்த – புத்தசான பிரதி அமைச்சர்
- சுதர்சினி பெர்னாண்டோப்பிள்ளை – உயர் கல்வி பிரதி அமைச்சர்
- லசந்த அழகியவன்ன – கிராமிய அபிவிருத்தி
- சாந்த பண்டார – ஊடக பிரதி அமைச்சர்
- தயாசித்த திசேர – மீன் பிடி பிரதியமைச்சர்
- ரஞ்சித் சியம்பிலாபிட்டிய – பொது நிர்வாக பிரதியமைச்சர்
இராஜாங்க அமைச்சர்கள்
- டிலான் பெரேரா – வீடமைப்பு மற்றும் சமுர்த்தி
- ஜீவன் குமாரதுங்க – தொழில் இராஜாங்க அமைச்சர்
- பவித்ரா வன்னியாராச்சி – சுற்றாடல் இராஜாங்க அமைச்சர்
- சீ.பி.ரத்நாயக்க – பொது நிர்வாக இராஜாங்க அமைச்சர்
- மஹிந்த சமரசிங்க – நிதி இராஜாங்க அமைச்சர்
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 26 பேர் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சுப் பொறுப்புக்களை வகிப்போரின் எண்ணிக்கை 77 ஆக உயர்வடைந்துள்ளது.
ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சர்களின் எண்ணிக்கை 100 ஐ தாண்டியிருந்த நிலையில் தற்போதைய அரசாங்கத்திலும் அமைச்சர்களின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது.
அதாவது 40 அமைச்சரவை அமைச்சர்களும் 14 இராஜாங்க அமைச்சர்களும் 23 பிரதியமைச்சர்களுமாக 77 பேர் அமைச்சு பதவிகளை வகிக்கின்றனர்.
ஏற்கனவே ஜனாதிபதி சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தில் 29 அமைச்சர்களும் 9 இராஜாங்க அமைச்சர்களும் 13 பிரதியமைச்சர்களும் பதவி வகித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 11 பேர் அமைச்சர்களாகவும் 5 பேர் இராஜாங்க அமைச்சர்களாகவும் 11 பேர் பிரதியமைச்சர்களாகவும் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர்.
அமைச்சரவை அமைச்சுக்களை பொறுத்தவரை பல அமைச்சுக்கள் தற்போதைய அமைச்சர்களிடம் இருந்து புதிய அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பீலிக்ஸ் பெரெரா விசேட செயற்திட்ட அமைச்சராக பதவியேற்றுள்ளார். இது புதிய அமைச்சாகும். அத்துடன் உயர் கல்வி அமைச்சு அமைச்சர் கபீர் ஹஷீமிடம் காணப்பட்டநிலையில் தற்போது சரத் அமுனுகமவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரெராவிடம் மீன்பிடி மற்றும் உள்ளக விவகார அமைச்சு காணபபட்ட நிலையில் தற்போது மீன்பிடிதுறை மஹிந்த அமரவீரவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் கயந்த கருணாதிலக்கவிடம் ஊடகத்துறை மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு காணப்பட்ட நிலையில் தற்போது பாராளுமன்ற விவகார அமைச்சு மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவிடம் இருந்த விமான சேவை இலாகா ரெஜினோல்ட் குரேவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடம் காணப்பட்ட இடர் முகாமைத்தவ இலாகா ஏ.எச்.எம். பெளசிக்கு வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் காணப்பட்ட தொழில் இலாகா தற்போது எஸ்.பி். நாவின்னவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் எஸி்.பி. திசாநாயக்கவுக்கு கிராமிய அலுவல்கள் அமைச்சு வழங்கப்பட்டள்ளது.
அமைச்சர் கருஜயசூரியவிடம் காணப்பட்ட மாகாண சபைகள் அமைச்சு துறை ஜனக்க பண்டார தென்னக்கோனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் துமிந்த திசாநாயக்கவிடம் காணப்பட்ட நீர்ப்பாசன துறை தற்போது விஜித் விஜய முனி சொய்சாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது அமைச்சர் துமிந்த திசாநாயக்கவிடம் விவசாய துறை அமைச்சு மட்டுமே காணப்படுகின்றது. பியசேன கமவுக்கு திறனபிவிருத்தி அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.