வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிட்செல். இவரிடம் டெலிவிஷனில் விவாத மேடை நடத்தும் எல்லென் டிஜெனரஸ் என்பவர் பேட்டி எடுத்தார்.

அப்போது, அதிபர் பதவி காலம் முடிந்ததும் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய பின் அமைய இருக்கும் வாழ்க்கை குறித்தும், அவரது குழந்தைகளின் எதிர்காலம் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு மிட்செல் ஒபாமா பதில் அளித்தார்.

26AF77C600000578-2996583-image-m-49_1426482304924பேட்டி முடிந்ததும் டி.வி. நிலையத்தில் உள்ள நடன அரங்கில் நடைபெறும் டிஸ்கோ நடனத்தில் பங்கேற்கும் படி மிட்செலியை நிகழ்ச்சி நடத்துனர் டிஜெனரஸ் அழைப்பு விடுத்தார்.

அதை ஏற்றுக் கொண்ட மிட்செல் அங்கு சென்று கலைஞர்களுடன் இணைந்து டிஸ்கோ நடனம் ஆடினார். இந்த நிகழ்ச்சி டி.வி.யிலும், யூ.டியூப்பிலும் ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Share.
Leave A Reply

Exit mobile version