இங்கிலாந்தில் கொவென்ரி பகுதியில் கொல்லப்பட்ட இலங்கை தமிழர் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களுள் ஒருவர் நேற்று பர்மிங்காம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் 5 ஆம் திகதி, இங்கிலாந்தின் மேற்கு மிட்லேண்ட் பகுதியில் 48 வயதான் இலங்கை தமிழர், அருணாச்சலம் அருனோதயம் என்பவர் வீட்டினுள், பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிப்பட்டார்.

5 ஆம் திகதி, மாலையே அருணாச்சலம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து இங்கிலாந்து பொலிசார் விசாரணை செய்து வந்தனர். பிரேதப் பரிசோதனையில், இவர் அடித்தே கொல்லப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.

பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில், சந்தேகத்தின் பேரில் பெட்வேர்த் பகுதியில் அமைந்துள்ள விடுதியில் பணியாற்றும் கிரிதாஸ் ஸ்ரீஸ்கந்தராஜா என்பவரை கைது செய்தனர்.

இதை அடுத்து இந்த வழக்கில், தமிழ் பெண் உட்பட மேலும் மூன்று பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். 20 வயதான தமிழ் பெண் விசாரணையின் பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version