கருவறையில் இருக்கும் 14 வார குழந்தை ஒன்று தாயின் இனிமையான பாடலை கேட்டு கை தட்டி ரசித்ததை அல்ட்றாசவுண்ட் ஸ்கேனில் பார்த்த பெற்றோரும் வைத்தியரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஜென் கார்டினல் என்பவர் தனது கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி தொடர்பில் பரிசோதனை செய்வதற்காக வைத்தியசாலைக்கு சென்று அல்ட்றாசவுண்ட் ஸ்கேன் செய்யும் போது குழந்தையின் தாய் சிறுவர் பாடல் ஒன்றை பாடியுள்ளார், அப்போது வயிற்றில் இருந்த 14 வார குழந்தை கைதட்டியுள்ளது அந்த காட்சியை குழந்தையின் தந்தை ஔிப்பதிவு செய்துள்ளார்.

ஔிப்பதிவு செய்யப்பட்ட காட்சியை ஜென் கார்டினல் YouTube இல் பதிவு செய்ததை அடுத்து அதிகளவானோர் அந்த காட்சியை பார்த்துள்ளனர்.

YouTube இல் பதிவு செய்யப்பட்ட காணொளி இதோ

Share.
Leave A Reply

Exit mobile version