தசாப்த கால யுத்தத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர் இலங்கை பல சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளது. அதில் பிரதானமான ஒரு விடயமே போதைப்பொருள் விவகாரமாகும்.
இலங்கையின் இளம் சமூகத்தை மிக மோசமாக சாய்த்துவரும் இந்த போதைப்பொருள் பயன்பாட்டில் ஹெரோயின் எனும் போதைப்பொருள் பாவனை அல்லது விற்ப னை பிரதான இடத்தைப் பிடிக்கிறது.
இந்நிலையில் இலங்கைக்குள் அந்த ஹெரோயின் போதைப்பொருள் எப்படி வருகிறது ? யார் எடுத்து வருகிறார்கள்? எங்கிருந்து எடுத்து வருகிறார்கள் என்பதெல்லாம் ரகசியமாக இருக்கவில்லை.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவின் தகவல்களின்படி இலங்கைக்கு ஹெரோயின் போதைப்பொருளை கடத்தும் பிரதான சர்வதேச வர்த்தகர்கள் இருவர்.
கடந்த ஜனவரி மாதம் வெலேசுதா பாகிஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் அவனுக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் விசாரணைகள் இன்றும் தொடர்கின்றன. அது தொடர்பில் கடந்த வாரங்களில் நாம் தொடர்ச்சியாக எழுதியிருந்தோம்.
எனினும் இப்போது நாம் குறிப்பிடுவது இலங்கைக்குள் ஹெரோயின் கடத்திய மிகப் பிரதானமான மொஹம்மட் சித்தீக் என்ற கடத்தல் மன்னனை பற்றியதாகும்.
கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையம் ஊடாக பாகிஸ்தானில் இருந்து மொஹம்மட் சித்தீக் புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழுவினரால் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
பாகிஸ்தான் பாதுகாப்பு தரப்பும் இலங்கையில் குற்றப்புலனாய்வு பிரிவும் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கை ஊடாகவே மொஹம்மட் சித்தீக்கின் கைது சாத்தியமானது.
கைது செய்யப்பட்ட மொஹம்மட் சித்தீக்கின் சகாவும் பிரபல சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னனுமான வெலேசுதாவிடமிருந்து விசாரணைகளில் பெறப்பட்ட தகவல்கள், சில புலனாய்வுத் தகவல் களை மையப்படுத்தியே புலனாய்வுப் பிரிவினர் பாகிஸ்தான் பாதுகாப்பு தரப்புடன் இணைந்து மொஹம்மட் சித்தீக்கை கைது செய்யும் வேட்டையை முன்னெடுத்திருந்த னர்.
கடந்த ஜனவரி மாதம் ஆகும் போது வெலேசுதா பாகிஸ்தான் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டார். உண்மையில் அப்போது வெலேசுதா மட்டும் கைது செய்யப்படவில்லை. கூடவே சித்தீக்கும் சிக்கியிருந்தார்.
இரு உழவு இயந்திரங்களின் கியர் பெட்டிகளை அகற்றி அதனுள் ஹெரோயின் போதைப்பொருளினை வைத்து கராச்சி துறைமுகம் ஊடாக கொழும்புக்கு அனுப்ப தயாரான போதே இந்த கைது இடம்பெற்றிருந்தது.
உண்மையில் பாகிஸ்தானில் ஹெரோயினுடன் ஒருவர் கைதாவது ஒன்றும் பூதாகரமான விடயமல்ல.
இந்நிலை யில் அப்போது கைதான சித்தீக்கும் வெலே சுதாவும் அந்நா ட்டு பாதுகாப்பு தரப்புக்கு ஒரு தொகை பணத் தை கொடு த்து விட்டு தப்பி க்க வழியிருந்தது.
இரகசிய தகவல்களின் படி தலைக்கு 10 கோடி ரூபா வரையில் பணம் அப்போது பேரம் பேசப்பட்டுள்ளது. அதன் பெறுபேறு மொஹம்மட் சித்தீக் அப்பணத்தை செலுத்தி பாகிஸ்தான் பாதுகாப்பு தரப்பின் பிடியில் இருந்து விடுதலையாகியுள்ளான்.
எனினும் வெலே சுதாவால் குறித்த காலப்பகுதிக்குள் அந்தளவு பணத்தொகையினை செலு த்த முடியாமல் போகவே அவர் இலங்கைக்கு கொண்டு வரப்படும் நிலைமை உருவாகியிருந்தது.
மொஹம்மட் சித்தீக் மருதானை மஜீட் வீதியை சேர்ந்தவர். தமிழ், சிங்களம், ஆங்கிலம் மற் றும் உருது மொழிகளில் மிகச் சரளமாக உரையாடக்கூடியவர்.
இந்நிலையில் சித்தீக் பாகிஸ்தானில் அமீரா என்ற ஒரு பெண்ணை திருமணம் செய்திருந்தார். சித்தீக் பாகிஸ்தான் பொலிஸாரிடம் சிக்கிய போது குறித்த 10 கோடி ரூபாவை கொடுத்து அவரை விடுவித்தவர் இந்த அமீராவின் அண்ணனே.
போதைப்பொருள் தடுப்புப்பிரிவினரின் தகவல்களை வைத்து பார்க்கும் போது மொஹம்மட் சித்தீக்கே இலங்கைக்குள் போதைப்பொருள் கடத்திய பிரதான சந்தேக நபர். வெலே சுதா சித்தீக்கின் சகாவே தவிர அவனை விஞ்சும் கடத்தல் மன்னன் கிடையாது.
வெலே சுதா
பாகிஸ்தான், – ஆப்கானிஸ்தான் எல்லை யில் அமைந்துள்ள பெஷாவர் பிரதேசத்தை மையமாக வைத்து மொஹம்மட் சித்தீக் முன்னெடுத்து வந்த சர்வதேச ரீதியிலான ஹெரோயின் கடத்தலில் வெலே சுதா இலங்கை விவகாரம் தொடர்பிலான ஒரு புள்ளி மட்டுமே. வெலே சுதாவுக்கு மேலிருந்து இந்த கடத்தல்களை நடத்தியவர் மொஹம்மட் சித்தீக்.
இந்தளவு பெரிய கடத்தல் மன்னனாக சித்தீக் மாறிய வரலாறு வித்தியாசமானது. ஆரம்பத்தில் ஆயுத விவகாரம் ஒன்று தொடர்பில் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலை சித்தீக்குக்கு ஏற்பட்ட போது சிறையில் வைத்து சில பாதாள உலகத்தலைவர்களுடன் இவருக்கு தொடர்பேற்பட்டதாக அறிய முடிகின்றது.
இலங்கையில் அப்போது நம்பர் – 1 போதைப் பொருள் வர்த்தகராக இருந்தவர் குடு நூர். குடுநூர் வாழைத்தோட்டம் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னர் அந்த இடம் அய்யூப் கான் என்ற மற்றொரு பாதாள உலகத் தலைவனின் கீழானது.
அய்யூப்கானை ஆயுதம் காட்ட விசேட அதிரடிப்படை அழைத்துச் சென்றபோது மோதல் ஏற்பட்டு அவனும் கொல்லப்பட ஆனமலு இம்டியாஸ், மாளிகாவத்தை பாஜி போன்றோர் அடுத்தடுத்து அந்த இடத்தினை பிடித்தனர்.
ஆனமலு இம்டியாஸ் அடையாளம் தெரியாதோரால் கடத்தப்பட்டு யோக் வீதியில் சடலமாக மீட்கப்ப ட்டதுடன் மாளிகாவத்தை பாஜி விசேட அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
இந்நிலையில் பொட்ட நௌபர் போன்ற பாதாள உலகத் தலைவர்கள் சட்டத்தின் பிடிக்குள் சிக்கிக் கொள்ள கெடுபிடிகள் அதிகரிப்பதை உணர்ந்த கிம்புலாஎல குணா போன்றோர் கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றனர்.
இதன் பலனாக ஹெரோயின் தொடர்பில் ஏற்பட்ட போட்டி நிலையில் வெற்றிடம் ஏற்பட்டது. இந்நிலையில் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சித்தீக் இலங்கைக்கு ஹெரோயின் போதைப்பொருளினை கடத்தும் விநியோகிக்கும் இடத்தை போட்டியின்றி கைப்பற்றிக் கொண்டான்.
உண்மையில் ஹெரோயின் பெரும்பாலும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானின் ஆப்கான் எல்லையை ஒட்டிய பகுதியில் மிக மலிவாக கிடைக்கும் பொருளாகும்.
சர்வதேச தகவல்களின் படி ஆப்கானில் ஒரு கிலோ ஹெரோயினை ஒரு டொலர் பெறுமதியில் பெறலாமாம்.
அப்படி இருக்கும் போது குடுநூர் முதல் ஆனமலு இம்டியாஸ், பாஜி கிம்புலாஎல குணா உள்ளிட்ட அனைவரும் ஆப்கான் பிராந்தியத்திலிருந்து போதைப்பொருளை முதலில் இந்தியாவின் ராமேஸ்வரம் பகுதிக்கு கடத்தி வந்து அங்கிருந்து புத்தளம் மன்னார் பிரதேசங்களூடாக மீன்பிடி படகுகளுக்குள் மறைத்து நாட்டுக்குள் கடத்தப்ப ட்டன.
இதுதான் அப்போதைய பாதாள உலகத் தலைவர்களின் யுக்தியாக இருந்தது. இதனூடாக சுமார் 10 கிலோவுக்கும் 20 கிலோவுக்கும் இடைப்பட்ட ஒரு தொகையே ஒரு நேரத்தில் இலங்கைக்குள் கடத்தப்பட்டது.
எனினும் இதனை மாற்றியவர் சித்தீக். மீன்பிடிப் படகுகள் ஊடாக 10, 15 கிலோ ஹெரோயின் கடத்தப்படுவதை மாற்றியமைத்த சித்தீக் ஒரே நேரத்தில் 100 கிலோவுக்கும் மேற்பட்ட ஹெரோயின் தொகை யை இலங்கைக்குள் கொண்டுவரும் முறைமையை அறிமுகம் செய்தார்.
துறைமுகங்களை ஊடறுத்து கொள்கலன்களுக்குள் மறைத்து ஹெரோயின் கடத்தும் முறைமையே அதுவாகும்.
உண்மையில் மருதானை மஜீட் வீதியை சேர்ந்தவராக மொஹம்மட் சித்தீக் அடையாளம் காணப்பட்ட போதிலும் டெக்னிக்கல் சந்தி, மெளலான வத்த பிரதேசத்தில் பல வருடங்கள் வசித்தவர் எனக் கூறப்படுகிறது.
இவை எல்லாவற்றையும் விட தற்போது 47 வயதாகும் மொஹம்மட் சித்தீக் அவரது 25 வயது முதல் இந்த போதைப் பொருளுடன் தொடர்பு வைத்துள்ளதாக அறிய முடிகிறது.
ஏனைய போதைப்பொருள் வர்த்தகர்களை போன்று சித்தீக் ஒன்றும் சில்லறை வர்த்தகராக இருந்தும் பரிணமித்தவர் அல்ல. அவன் நேரடியாகவே ஹெரோயின் மொத்த வியாபாரியாகவே அடையாளம் காணப்பட்டவர்.
மொஹமட் சித்தீக் இப்படி ஒரேடியாக 100 கிலோவுக்கும் மேற்பட்ட ஹெரோயின் போதைப் பொருளை இலங்கைக்கு கடத் தும் வழிமுறையைக் கற்றுக் கொடுத்தவர்.
அத்தாபாய் எனப்படும் பாகிஸ்தானியர். பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் தகவலின்படி அத்தாபாய் பாகிஸ்தானியராக இருந்த போதும் சரளமாக சிங்கள மொழியில் உரையாடக்கூடியவராம்.
அத்தாபாய் பாகிஸ்தானின் தீவிரவாத குழுக்களுடன் தொடர்புடையவர் என்பதால் மொஹம்மட் சித்தீக்கும் அப்படிப்பட்ட தொடர்புகள் உள்ளனரா என்பது குறித்து ஆராய்வது அவசியமாகும்.
பொதுவாக உலகில் மனிதக்கடத்தல்கள் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடு வோர் ஏதேனும் தீவிரவாத குழுக்களுடன் தொடர்பை பேணுவது வழமையாகும். இந்த அடிப்படையில் சித்தீக் மீதான தீவிர வாத சந்தேகங்கள் யதார்த்தமானதே.
அதனாலோ என்னவோ தற்போது இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள சித்தீக் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் மொஹம்மட் சித்தீக் இலங்கைக்குள் கடத்திய போதைப் பொருளின் மொத்த அளவு எவ்வளவு எவ்வாறு எச்சந்தர்ப்பத்தில் அவற்றைக் கடத்தினார், அது தொடர்பில் அவருக்கு யார் உதவி செய்தார்கள் மற்றும் என்னென்ன தந்திரங்களை அது தொடர்பில் பயன்படுத்தினார் போன்ற விடயங்கள் இந்த விசாரணைகளில் வெளிப்படுத்தப்படலாம்.
ஊடகங்களில் வெளிவந்த தகவலுக்கு அமைவாக மொஹம்மட் சித்தீக்குடன் தொடர்புடையது என கூறத்தக்க சில போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களை நாம் பட்டியலிடலாம்.
தண்ணீர் பம்பிகளை தனது இலங்கை மனைவியின் பெயரில் அனுப்பியிருந்த சித்தீக் பின்னர் அவளை காப்பாற்ற அவ ளை டுபாய்க்கு அனுப்பியதாகவும் அறிய முடிகிறது.
இதனை விட பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கிழங்கு கொள்கலன் ஒன்றில் இறப்பர் கிழங்குகளை கலந்து அதனுள் ஹெரோயின் போதைப் பொருளை வைத்து 40 கிலோவுக்கும் மேல் ஹெரோயின் கடத்தியமை கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சலவை இயந்திரத்திற்குள் மறைத்து 65 கோடி பெறுமதியான 93 கிலோ ஹெரோயின் கடத்தல், அதே பாணியில் 50 கிலோ ஹெரோயின் கடத்தல் போன்ற கடத்தல்களின் பின்னணியில் சித்தீக் இருப்பது கிட்டத்தட்ட உறுதியானதாகும்.
அதேபோன்றே 2012ஆம் ஆண்டு நாட்டை விட்டுத் தப்பி சென்ற வெலேசுதாவை டுபாயில் இருந்து பாகிஸ்தானுக்கு அழைத்து சென்று இங்குள்ள வெலே சுதாவின் வலையமைப்பையும் பயன்படுத்தி தனது ஹெரோயின் வர்த்தகத்தை சித்தீக் அபிவிருத்தி செய்துள்ளமையும் அந்த வகையில் சித்தீக்கே பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர் என்பதையும் புலனா ய்வுப் பிரிவினர் வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் வெலே சுதாவுடன் சித்தீக் கை கோர்த்த பின்னர். இந்நாட்டுக்கு அனுப்பிய ஹெரோயின் தொகையும் கொஞ்ச நஞ்சமல்ல.
இந்நிலையில் இந்த கடத்தல் முறை மையை அறிமுகம் செய்தவர் என்ற ரீதியில் 2013 ஆகஸ்ட் 30ஆம் திகதி கிரீஸ் டின்க ளில் அடைத்து கடத்தப்பட்ட 261 கிலோ ஹெரோயினின் பின்னணி இன்றுவரை கண்டறியப்படாத நிலையில் அது கூட சித்தீக்கை சார வாய்ப்பில்லாமலில்லை.
இனி எது எப்படியோ வெலே சுதாவையும் சித்தீக்கையும் புலனாய்வு பிரிவினர் கைது செய்து விட்டனர். நாட்டுக்குள் போதைப் பொருளை கடத்தும் பிரதான புள்ளிகளான இவ்விருவரையும் கைது செய்ததுடன் மட்டும் புலனாய்வுப்பிரிவினரின் கடமை முடிந்து விட்டதாக கருத முடியாது.
இவர்களின் வெற்றிடத்தை நிரப்ப இன்னொரு வெலே சுதாவோ சித்தீக்கோ முயற்சிப்பதையும் தடுக்க வேண்டும். தற் போது இலங்கைக்குள் ஹெரோயினுக்கு குறிப்பிடத்தக்க அளவு தட்டுப்பாடு ஏற்ப ட்டுள்ளதையும் அதன் விலையிலும் அதிக ரிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இந்நிலையில் இச்சந்தர்ப்பத்துக்குள் இன்னொரு கடத்தல் மன்னனுக்கு வாய்ப்பு வழங்காது போதை கலாசாரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படல் வேண்டும். அப்போதே இந்த கைதுகளின் பூரண பிரயோசனம் நாட்டுக்கு கிடைக்கும்.