நடிகை ஸ்ருதிஹாசன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திராவில் ‘பிக்சர் ஹவுஸ் மீடியா லிமிடெட்’ என்ற பட நிறுவனம் தயாரிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தில் நாகார்ஜுன்- கார்த்தி இணைந்து நடிக்கின்றனர்.

இந்த திரைப்படத்தில் நடிக்க நடிகை சுருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் அவர் திடீரென அந்த திரைப்படத்தில் இருந்து விலகினார்.

படப்பிடிப்புக்கு திகதிகளை ஒதுக்கி தருவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக விலகிக்கொள்வதாக அவர் தெரிவித்திருந்தார். ஆனால் இது தொடர்பாக ஸ்ருதிஹாசனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கு தொடுத்துள்ள நிறுவனத்தின் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை, புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வதற்கு ஏப்ரல் 8ஆம் திகதி வரை நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இந்தநிலையில் றீதிமன்றத்தின் உத்தரவின்படி, பஞ்சாரா ல்ஸ் பொலிஸ் நிலையத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

article_1427610148-Shruthi-Hassan-1

Share.
Leave A Reply

Exit mobile version